Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘பஜாரி ஜெயலலிதா’

COMMUNIST PARTY OF INDIA (MUMMYIST)
 
COMMUNIST PARTY OF INDIA (MUMMYIST)

போயஸ் தோட்டத்திற்கு நவம்பர் மாதம் ஐயும் — அதாவது வலதும், டிசம்பர் மாதம் எம்மும் — அதாவது இடதும் விஜயம் செய்தார்கள். ஐக்கு பரதன், தா.பாண்டியன், சி.மகேந்திரன் போன்றோரும், எம்முக்கு பிரகாஷ் காரத்தும்,

 வரதராசனும் தோட்டத்தில் உள்ளேன் ஐயா சொல்லி, அம்மாவுடன் பேசிவிட்டு வந்தார்கள். அதிலும் காரத்துடன் சென்றிருந்த தோழர்கள் புரட்சித் தலைவிக்கு பிடித்த இளம் பச்சைச் சட்டையில் சென்றிருந்தார்களாம்.

அம்மாவுக்கு இணையாக தோழர்கள் அமர்ந்த அந்த நாற்காலியை வாண்டையார், சேதுராமன், சுப்பிரமணிய சுவாமி, அத்வானி, ஜஸ்வந்த் சிங், மோடி, வைகோ முதலானோர் ஏற்கெனவே தேய்த்திருக்கிறார்கள் என்பதால், அதுவும் வரலாற்றுச் சிறப்புமிக்கதுதான். தானைத் தலைவியின் முன் சற்று சங்கோஜத்துடன் பேசிய தோழர்களுக்கு மோடிக்கு கொடுக்கப்பட்ட விருந்து போல வரவேற்பு இல்லையென்றாலும், சந்திப்பு அணுக்கமாகத் தான் நடந்தது. புரட்சித் தலைவிக்கு பிரகாஷ் காரத் கொடுத்த பெரிய பூச்செண்டு படம் எல்லாப் பத்திரிகைகளிலும் இடம் பெற்றன.

அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு மைய அரசு பணிந்ததை ஒரு வருடமாக எதிர்ப்பது போல எதிர்த்து, மிரட்டுவது போல மிரட்டி, எச்சரிப்பது போல எச்சரித்து, அழுவது போல அழுது, இன்னும் பல செய்து பார்த்து, இறுதியில் காங்கிரசு கூட்டணி அரசு, “போடா வெண்ணை” என்று தூக்கி எறிந்ததும் வேறு வழியின்றி ஆதரவை திரும்பப் பெற்றுக் கொண்டார்கள், போலிகள். ஒருவேளை காங்கிரசு அரசு கவிழ்ந்தால், அடுத்த தேர்தலில் என்ன செய்வது என்ற கவலை அவர்களை வாட்டியது. முன்னெச்சரிக்கையாக அடுத்த தேர்தலில் பா.ஜ.க தோற்று, காங்கிரசு வென்றால் மீண்டும் ஆதரவு உண்டு என்பதைத் தோழர்கள் சுற்றி வளைத்து ஒத்துக் கொண்டார்கள். ஆனால், தேர்தலில் கடந்த முறை வெற்றி பெற்ற தொகுதிகளாவது மீண்டும் கிடைக்க வேண்டுமே என்ற கவலை தோழர்களை வாட்டியது.

தோழிகளுக்கும் தோழர்களுக்கும் சகாவான சாதி வெறியன் முத்துராமலிங்கன்

தோழிகளுக்கும் தோழர்களுக்கும் சகாவான தேவர் சாதி வெறியன் முத்துராமலிங்கனுக்கு மாலையிடும் தோழர் ஜெ

இடையில் மூன்றாம் அணி என்று சற்று “பாவ்லா” காட்டினார்கள். “குடியரசுத் தலைவர்’ தேர்தலிலேயே இந்த மூன்றாம் அணி தோன்றிய வேகத்தில் பறந்து விட்டது. முக்கியமாக அம்மா கட்சி தேர்தலைப் புறக்கணிப்பதாக சவடால் அடித்து, பின்னர் பா.ஜ.க.விற்கு வாக்களித்து மூன்றாவது அணியின் தகுதியை உலகுக்கு அறிவித்தது.

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்ட உடனேயே பிரகாஷ் காரத் சண்டமாருதம் செய்து முழங்கிய சேதி என்னவென்றால், காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல், அதிலிருந்து மாநிலக் கட்சிகள் வெளியேற வேண்டுமென்பதாகும். இந்த முழக்கத்தைக் கேட்ட பிறகு தான் முலாயம் போன்ற கட்சிகள் கப்பலில் இடம் பிடித்தனர். அம்மாவும் எவ்வளவோ முயற்சிகள் செய்து பார்த்தும் காங்கிரசு அவ்வளவாக அசைந்து கொடுக்கவில்லை. இதனால் அவர் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதாகச் செய்திகள் அடிபட்டன. தமிழக பா.ஜ.க.வும் இதை வெளிப்படையாக ஒரு கோரிக்கையாக வைத்தும், அம்மாவின் மனதை கரைக்கும் வண்ணம் பல அறிக்கைகளை வெளியிட்டும் நோட்டம் பார்த்தது. அப்போது அம்மா எடுத்த முடிவு என்னவென்றால், தேர்தலுக்கு முன்பு ஒரு கூட்டணி, தேர்தலுக்கு பின்பு வேறு ஒரு கூட்டணி! இப்போது தேர்தலுக்குப் பின்னர்தான் கூட்டணி என்பதையும் கூச்ச நாச்சமின்றி பா.ஜ.க. ஏற்றுக் கொண்டு கச்சேரியை செய்து வருகிறது.

இத்தகைய புரட்சிகரமான தருணத்தில் ஐய்யுக்கும் எம்முக்கும் அடித்தது ஜாக்பாட். ஏற்öகனவே புரட்சித் தலைவியின் இரசிகராக அறியப்பட்ட வலதின் தா.பாண்டியன், எதிர்காலத்தில் அம்மாவுடன் கூட்டணி வைக்கப் போகும் தருணத்தை முன்னறிந்து கருணாநிதியை அம்மா ரேஞ்சுக்கு கண்டித்து அறிக்கை வெளியிட்டு வந்தார். அதனால்தான் இடதுகளை விட அதிவேகத்தில் ஒரு மாதம் முன்னதாகவே அம்மாவைச் சந்தித்து கூட்டணிக்கு அச்சாரம் போட்டார். இது எம்முக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியது. அவர்கள் விஜயகாந்துடன் கூட்டணி வைக்கலாமா என்று ஒரு மயக்கத்தில் இருந்ததால், புரட்சிக் கலைஞரையும் சந்தித்து நோட்டம் பார்த்தார்கள். அதைப் பரிசீலித்து முடிவெடுப்பதற்கு முன்னதாக அம்மாவைச் சந்திக்க வேண்டும் என்று நெருக்கடியை தா.பாண்டியன் உருவாக்கி விட்டார். இதில் தாமதித்தால் ஐயை விட எம்முக்கு ஓரிரு சீட்டுகள் குறைந்து விட்டால் என்ன செய்வது?

தமிழகத்தில் யாருடன் கூட்டணி வைப்பது என்று “மார்க்சிஸ்ட்’ கட்சியின் மாநிலக் குழுவில் ஒத்த கருத்து இல்லையென்பதால், முடிவு எடுக்கும் உரிமை அரசியல் தலைமைக் குழுவிடம் அளிக்கப்பட்டதாம். அரசியல் தலைமைக் குழுவும் அரட்டை கச்சேரி நடத்தி எடுத்த ஒரே முடிவு என்னவென்றால், தேர்தலில் அம்மாவுடன் கூட்டணி வைப்பது என்பதுதான்.

 

அனைத்து இந்திய அய்யர் தி.மு.க‌

அனைத்து இந்திய அய்யர் தி.மு.க‌

இந்த முடிவை கனத்த இதயத்தோடு பிரகாஷ் காரத் மாநிலக் குழுவிடம் தெரிவித்ததாக “நக்கீரன்” எழுதியிருந்தது. இவ்வளவு சென்டிமெண்டோடு சி.பி.எம். பேசுவதற்குக் காரணம் இருக்கிறது. தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து, சென்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளை வென்றது “மார்க்சிஸ்ட்’ கட்சி. இப்போது காங்கிரசோடு வலுவான கூட்டணியாகத் திகழும் தி.மு.க. இந்த உறவை முறித்துக் கொள்வதாக இல்லை. அதனால் சி.பி.எம். சென்றதால் கருணாநிதியொன்றும் கவலைப்படவில்லை. மொத்தத்தில் நான்கு தொகுதிகள் மிச்சம் என்பது அவர் கணக்கு. போலி கம்யூனிஸ்டுகளைப் பொருத்தவரை அந்த நான்கு தொகுதிகளையும் மீண்டும் பெறவேண்டுமென்றால் அ.தி.மு.க.வுடன்தான் கூட்டணி வைக்க வேண்டும்.

ஆக மொத்தம், இரண்டு அல்லது ஒன்றரை சீட்டுக்களுக்காக அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்று சொல்லி விட்டுப் போகவேண்டியது தானே? மாறாக, பயங்கரமான ராஜதந்திர முடிவு எடுத்தது போல, சி.பி.எம் “பில்டப்” கொடுப்பதைத்தான் சகிக்க முடியவில்லை. அதாவது காங்கிரசு, பா.ஜ.க. இரண்டு கட்சிகளையும் போலிகள் எதிர்க்கிறார்களாம். அதனால் மூன்றாவது அணிக்கு வலிமை சேர்க்கும் வண்ணம் பல மாநிலக் கட்சிகளை இழுப்பதுதான் அவர்களது தொலைநோக்கு அரசியலாம். சரி, இருக்கட்டும்.

மதவாதம், காங்கிரசு இரண்டு சக்திகளையும் எதிர்க்கத் துணிந்த போலிகள் அம்மாவை மதவாதமில்லையென்று கருதுகிறார்களா? மதமாற்றத் தடை சட்டம், ஆடுகோழி பலியிடுவதைத் தடை செய்யும் சட்டம், மோடி பதவியேற்பு விழாவில் நேரடியாக கலந்து கொண்டது, சென்னைக்கு மோடி வந்தபோது அழைத்து விருந்து வைத்தது, சேது சமுத்திர திட்டத்திற்கு எதிர்ப்பு — இப்படி பலமுறை அம்மா தான் ஒரு இந்துமதவெறி பாசிஸ்ட் என்று நிரூபித்திருக்கிறார்களே? இன்னும் சொல்லப்போனால், அம்மாவின் இந்துத்வ வேகம் பா.ஜ.க.வை விட அதிகமாகத்தானே இருக்கிறது? எல்லவாற்றுக்கும் மேலாக தேர்தல் முடிந்ததும் அ.தி.மு.க., பா.ஜ.க. பக்கம் சாயும் என்பதை எல்லா பத்திரிகைகளும் எழுதுகின்றன. மூன்றாவது அணி கணிசமாகத் தோல்வியுறும் பட்சத்தில் அம்மா தாமரை யோடு சங்கமிப்பார் என்பதை போலிகளும் மறுக்க முடியாதல்லவா?

 ஊரை அடித்து உலையில் போட்ட கொள்ளைக்காரிகள் ஜெயா&சசி கும்பல்

ஊரை அடித்து உலையில் போட்ட கொள்ளைக்காரிகள் ஜெயா&சசி கும்பல்

அம்மாவின் கணக்கு, தேர்தலின் போது முசுலீம்களின் வாக்குகள் வேண்டும், அதனால் பி.ஜே.பி.யுடன் கூட்டணி கிடையாது. தேர்தலுக்கு பின்னர் பா.ஜ.க.வுடன் கூட்டு வேண்டும், அப்போது போலிகளுடன் கூட்டணி கிடையாது. இப்படி ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை சுருட்டும் ராஜதந்திரத்தில் அம்மா தானே செல்வாக்கு செலுத்துகிறார்? இப்படி மறைமுகமாக பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்குத்தான் போலிகளின் இந்தக் கூட்டணி தந்திரம் உதவுகிறது. ஆயினும், இந்த சந்தர்ப்பவாதத்தை போலிகள் ஒத்துக் கொள்வதில்லை. அவர்களைப் பொருத்தவரை தேர்தலுக்கு பின் காங்கிரசு மற்றும் பா.ஜ.க. இரண்டும் தோல்வியுற்று மூன்றாவது அணி ஆட்சிக்கு வரும் பட்சத்தில், இடதுசாரிகளுக்கு நிறைய எம்.பி.க்கள் வேண்டுமாம். ஆதலால் எந்த எழவுடனும் கூட்டணி வைத்துக் கொண்டு நிறைய சீட்டுக்களை அள்ள வேண்டுமாம்.

இரண்டு சீட்டுக்களுக்காக இல்லாத கொள்கைகளையெல்லாம் கூறி தமது சந்தர்ப்பவாதத்தை வெளிப்படுத்தும் போலிகளிடம், அம்மா கறாராக கூறியிருக்கும் விசயம் என்னவென்றால், மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளராக மாயாவதியை முன்னிறுத்தக் கூடாதாம். இந்த ஒரு விசயமே மூன்றாவது அணியின் வலுவை விளக்கப் போதுமானது. அடுத்து தேர்தலுக்கு பின் மூன்றாவது அணி தோல்வியுற்று காங்கிரசு, பா.ஜ.க. இரண்டுமே சம அளவில் வெற்றி பெற்றால் போலிகள் என்ன செய்வார்கள்? மதவாதத்தை அனுமதிக்க கூடாது என்று காங்கிரசுக்கு ஆதரவு தருவார்கள். அநேகமாக இதுதான் நடக்கப்போகும் உண்மையென்றால், இப்போது ஏன் காங்கிரசுக்கு ஆதரவை விலக்க வேண்டும்? தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி, தேர்தலுக்கு பின்பு சேரத்தான் போகிறார்கள் என்றால் இவர்களது சந்தர்ப்பவாதம் அம்மாவை விஞ்சுகிறதே?

இவ்வளவும் எதற்காக? எல்லாம் இரண்டு சீட்டுக்களுக்காக என்றால் அதை அப்படி ஒத்துக் கொண்டு போகவேண்டியதுதானே? அதை விடுத்து அதற்கு கொள்கை முலாம் பூசவேண்டிய அவசியமென்ன? நாடாளுமன்ற சகதியில் புரண்டு கொண்டே அதை சந்தனமென்று சாதிப்பதற்கு என்னவெல்லாம் செய்கிறார்கள்? நேரடியாகச் சொல்வதென்றால் போலிகளின் காங்கிரசு எதிர்ப்பு, பா.ஜ.க. எதிர்ப்பு இரண்டுமே அப்பட்டமான பொய். ஒன்றை நேரடியாகவும், மற்றொன்றை மறைமுகமாகவும் ஆதரிக்கிறார்கள் என்பதைத்தான் அம்மாவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு போலிகள் உலகுக்கு தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.

 இளநம்பி

புதிய ஜனநாயகம் ஜன 09

Read Full Post »

மக்களின் கார் பிணங்களின் மீது பவனி

“ஏனுங்க டாடாவோட நானோ காரைப் பார்த்தீங்களா?, என்ன அம்சமா இருக்கு தெரியுங்களா” என்ற சித்தாளின் உடையாடலோ, “அம்மா எனக்கு நானோ கார் வாங்கிதந்தாதான் சாப்பிடுவேன்” என்ற கெஞ்சல்களையோ கேள்விப்படவில்லை. ஆனால் இதை விட பல மடங்கு பேச்சுகள் இந்தியா முழுவதும் பேசப்பட்டதாக பத்திரிக்கைகள் புளுகிக் கொண்டிருக்கின்றன.

பத்திரிக்கைகள் டாடாவின் 1 லட்சம் ரூபாய் நானோ கார் (வரிகளுடன் 1.25 லட்சம்) வரவினை டாடாவின் புரட்சி என்றே அழைக்கின்றன. 1980 களில் இந்திய சாலைகளில் மாருதி நிறுவனம் முதல் சாலைப் புரட்சியை நடத்திகாட்டியதாகவும் இந்த நானோ கார் இரண்டாவது புரட்சியாகவும் கொண்டாடப்படுகின்றன. சிறிது டாடாவின் காரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

எஞ்சின் – 624 cc, 33 php, ஒரு லிட்டருக்கு 20 கி.மி மேல், 4 ஸ்பெசல் கியர், அதிகபட்ச வேகம் 90 கி.மி. அனைத்து பாதுகாப்பு விதிகளையும் நிறைவு செய்கிறது. ஏழை நடுத்தர மக்களுக்காகவே உலகிலேயே மிக குறைவான விலையில் விற்கப்படும் முதல் கார் 2500 டாலர் (அ) 1 லட்சம். இதற்கு அடுத்தப்படியாக க்யூ க்யூ3 காரோ 2 லட்சம்.

இந்த காருக்கு இருக்கும் விற்பனைக்கான வாய்ப்பை வாய் கிழிய கிழிய நிபுணர்கள் உந்தி தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியப் பொருளாதார வளர்ச்சி 9% எட்டி விட்டது, பங்குச் சந்தை 21,000 (பலுன் ஊதிய போது) புள்ளிகளை தாண்டி எகிறிகொண்டிருக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 40 லட்சம் கோடியையும், தனிநபர் சராசரி வருமானம் ரூ 40,000 ஐயும் தொட்டு வல்லரசுக்கு பிளிரிக்கொண்டிருக்கும் இந்த வேலையிலன்றி வேறெப்போது புரட்சியினை சாதிக்கமுடியும் என்ற கேள்விகளால் பத்திரிக்கைகளை நிரப்பிக் கொண்டு இருக்கின்றனர். காம்ரேட் டாடா ஆரம்பித்து வைத்த இந்த புரட்சியை நீடித்து கொண்டு செல்வதற்காகவே பல கார் நிறுவனங்கள் புதிதாக இந்தியாவில் இறங்க உள்ளன.

“உணவி , உடை, இருப்பிடம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு மிதமிஞ்சிய பணப்புழக்கம் இருக்கும் ஒரு நாட்டில் இவ்வருடம் மட்டும் கார்களில் 75 மாடல்கள் தான் அறிமுகமாகுமென்று சற்றே கவலையளிக்கிறது”

டாடாவுக்கு மட்டும் தான் மக்கள் தலையில் மிளகாய் அரைக்க உரிமை இருக்கிறதாயென்ன என்றவாறே கடந்த பத்து மாதங்களில் மட்டும் ஆறு பெரிய நிறுவனங்களுக்குள் ரூ 18,400 கோடியில் பேரத்தில் இறங்கியிருக்கின்றன. டாடா, அசோக் லேலண்ட், பஜாஜ் போன்ற நிறுவனங்கள் மக்களுக்கு ஏற்றபடி விலை குறைவாக உள்ள காரை எப்படி தயாரிப்பது என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறதாம். டாடா ஒரு லட்ச ரூபாய்க்கு மக்கள் கார் கொடுப்பதால் நான் 1.3 லட்சத்திற்கு கார் தருகிறேன் என மல்லுக் கட்டுகிறார் ராஜீவ் பஜாஜ்.

அய்ரோப்பிய மற்றும் அமெரிக்க கார் சந்தை தேக்கமடைந்திருப்பதால் இந்தியாவில் 45 கோடி நடுத்தர மக்கள் இருப்பதாகவும், அவர்கள் அத்தேக்கத்தை (அடைப்பை) சரி செய்துவிடுவார்களென்று பன்னாட்டு கார் நிறுவனங்கள் முண்டியடித்துக் கொண்டு கடையை விரிக்கின்றன. 10 லட்சம் கார்களையும், 76 லட்சம் பைக்கு களையும் நுகரும் இந்திய சந்தையில் 2016க்குள் 40 லட்சம் கார்கள் 1 ஆண்டுக்கு திணிப்பதற்கு காத்திருக்கிறார்கள்.

இந்த மக்கள் காரின் வரவுக்கு எந்த சமூக அக்கறையும் இருப்பதாக தெரியவில்லை இக்கார் சமூக அக்கறையினால் உருவாக்கப்பட்டதெனில் ஜெயேந்திரன் கூட சமூக அக்கறையினாலேயே கொலைகளையும், கற்பழிப்புக்களையும் தீண்டாமையையும் நெறிப்படுத்தினான் என்றே கூறலாம். சினிமா கழிசடைகளும், ஏகாதிபத்திய நாய்களும் தாங்கள் பொறுக்கித்தின்பதற்காக இதை சமூக அக்கறையாக பயன்படுத்திக்கொள்கின்றன. மூன்று இந்தியர்களின் ஒருவர் பஞ்சைப் பராரியாக இருப்பதும், 91 கோடி மக்களின் வாழ்க்கைத்தரம் ரூ 80க்கும் கீழ் போய்விட்ட இத்தேசத்தில் இந்த ஏகாதிபத்திய “புடுங்கிகள்”, மக்களின் கவலையை மறக்க விலை குறைவாக காரைக் கண்டுபிடிக்கிறார்களாம்.

விவசாயம் செய்ய முடியாது என மறுகாலனிய சுருக்கில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தங்களின் உயிரைப் போக்கிக் கொண்டிருக்கிறார்கள். வேலையில்லாத இளைஞர்களின் பட்டாளம் கோடிக்கணக்கில் பெருகிக் கொண்டிருக்கிறது. பொதுத் துறைகளை தனியார்மயமாக்கம் என்ற பெயரில் சீரழித்து தொழிலாளர்களை வீதியில் வீசியெறிக்கின்றனர். இப்படிப்பட்ட மக்களுக்காகத் தான் மக்கள் கார் தயாரிக்கப்பட்டதாம்.

ரத்தன் டாடா ஒரு பேட்டியில் கூறியது “குறைந்த லாபத்தில் காரை தயாரிக்க முடியாது மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த பங்களிப்பு செய்ய விரும்பினோம்…..குறைவான லாபத்தோடு சில தியாகங்களை செய்தாக வேண்டும்”

110 கோடி கொண்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த ஒரு முதலாளியால் முடியும். இந்த புரட்சியை சாதிக்கவே மக்களை வெளியேற்றி நந்திகிராமில், சிங்குரில் நிலம் கையகப்படுத்தினோம் என்கிறது சிபிஎம். இதனை அடுத்த தேர்தலுக்குள் புரட்சி சாதிக்கப்பட்டு சிபிஎம்-ன் பேனர்களில் டாடா படம் கூட பொறிக்கப்படலாம். ரசியப்புரட்சியை நடத்திக்காட்டிய லெனின் படத்துடன், மாமா வேலை பார்த்த சுர்ஜித்தின் படத்தை போடும் போது மக்களின் வாழ்க்கையை (?) உயர்த்த விரும்பி தனது இலாபத்தை குறைத்துக் கொண்ட மகோன்னதத் தலைவனின் படத்தை ஏன் போடக்கூடாது என்ற வகையில் தீக்கதிர் தலையங்கம் கூட எழுதலாம்.

“முதாலளித்துவத்தின் எந்த கண்டுப்பிடிப்பும் மக்களுக்காகயிராது சந்தைக்காகவே இருக்கும்”

கார் என்பதைப் பொறுத்த வரை இன்று மக்களுக்கு இடையூராகவே உள்ளது. ஒரு காரில் அதிகபட்சம் 6 பேர் உட்கார முடியும். இரண்டு கார்களின் அளவானது ஒரு பேருந்தின் அளவுக்கு சமமாக உள்ளது. குறைந்தபட்சம் 60 பேர் உள்ள பேருந்தின் இடத்தை 12 பேர் கொண்ட கும்பல் ஆக்கிரமிக்கின்றது. காரை வாங்குவதால் நடுத்தர மக்களும், அதனை பயன்படுத்துவதால் நடுத்தர – ஏழை மக்களும் பாதிக்கப்படுகின்றனர். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் இரு சக்கரவாகனங்களின் எண்ணிக்கை இறைவாகவே இருந்தது. இன்று இரு சக்கரவாகனமின்றி வாழ்நிலை மிகவும் சிரமம் என்ற நிலை திட்டமிட்டு உருவாக்கப்பட்டு விட்டது.

இந்த இருசக்கர வாகனத்தின் பெருக்கம் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டதே! சாதாரண பேருந்துகளின் எண்ணிக்கையினை அதிகப்படுத்துவதை தவிர்த்துவிட்டு திரும்பிபக்கமெல்லாம் விளம்பரங்கள் “சார் பைக் லோன் வேண்டுமா உடன் தொடர்புக்கு!!” என்று. இவை விளம்பரங்களாக செயல்படவில்லை. கண்டிப்பாக வாங்கித்தான் ஆக வேண்டும் என்ற ஆணையாகவே இருந்தது. அப்படி வாங்கியவர்கள் லோன் கட்டமுடியாமலோ (அ) Petrol-க்கென்றே வருமானத்தில் பெரும்பகுதியை செலவழித்துக் கொண்டு இருப்பதாக வேதனையோடு சொல்கிறார்கள் இப்படி “இந்த சனியனாலதான் எல்லாப் பிரச்சினையுமே , இருந்தாலும் இதைவிடமுடியலையே!

கடந்த ஐந்து ஆண்டுகளில் Petrol பொருட்களின் விலை 5 மடங்காகியிருக்கிறது. தற்போது மீண்டும் Petrol, டீசல், கேஸ் விலையை ஏற்றப்போவதாக அரசு கூறிவருகிறது. இந்நிலையில் அறிமுகப்படுத்தப்படும் மக்கள் கார் மக்களின் வாழ்க்கையை கேலிக்குரிய ஒன்றாகவே மாற்றும். பைக்கிற்கான கடனைப் போலவே தற்போன காருக்கான கடன் சலுகைகள் மிக அதிகமாக உள்ளது. சமூக அடையாளத்திற்கான இடத்தை நகரக்ங்களைப் பொருத்தவரை பைக்கிடமிருந்து கார் பெறுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறது.

முன்பெல்லாம் காருக்கான மூலதன செலவு (initial cost) அதிகமாகவும், பராமரிப்பு செலவு (maintenance cost) குறைவாகவும் இருந்தது. தற்போது மூலதன செலவு குறைந்தும், பராமரிப்பு செலவு அதிகமாகவும் மாற்றப்படுகின்றது. எப்படியிருந்தாலும் தன்னுடைய லாப விகித்ததை சரி செய்து கொள்கிறார்கள் முதலாளிகள்.

“சாலைகள் மேம்பட வேண்டும் என்பது உண்மைதான் அதற்காக குறைந்த வருமானம் கொண்டவர்களின் வாழ்கைத்தரம் உயரக் கூடாது என சொல்லக் கூடாது” என்கிறார்கள் புத்திசாலிகள். முதலாளித்துவ நாய்களின் வாலை பிடித்து கொண்டு திரியும் இந்த அறிவிஜீவிகள் கிராமப்புறங்களில், ஏன் சென்னை போன்ற நகரங்களின் தெருக்களில் கூட சாலைகள் குண்டும் குழுகளும் பல்லைக்காட்டிக்கொண்டிருப்பதை ஒருக்காலும் பேசமாட்டார்கள். உழைக்கும் மக்களின் வாழ்க்கையை சீரழித்தவர்களே சொல்கிறார்கள். “உங்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றப் போகிறோம், நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முன்னேறித்தானாக வேண்டும்”

இன்னமும் இந்தியக்கிராமங்களில் மக்கள் டிராக்டரில் பயணம் செய்வதால் இந்தக்கார் பெரிய ஹிட் ஆகுமென்கிறது டாடா. 50,000 ரூபாய் கொடுத்து பைக்வாங்கும் ஒருவரால் கொஞ்சம் சிரமப்பட்டால் லட்சரூபாய் கார்வாங்கலாம் என்ற கூற்றும் நிலவுகிறது. இதில உண்மையும் இருக்கிறது. மக்களை மேலும் மேலும் கடனாளியாக்க இப்படி எத்தனையோ திட்டங்கள் தீட்டப்படுகின்றன. பட்டபின் திருந்தலாம் என்று வாங்கிய காரை விற்க போகும் போது அது 3/1 பங்கு கூட பெறாமலிருக்கும். பைக்காக இருக்கும்பட்சத்தில் நான்கு தெரு தள்ளி கூட நண்பர் வீட்டில் நிறுத்திவிடலாம் மாத தவணை வசூலிக்கும் குண்டர்களிடமிருந்து தப்பிப்பதற்காக. காரை எங்கு போய் நிறுத்துவது?

இன்று வீட்டு வாடகைக்கு இடம் கிடைக்காத நிலையில் காருக்காக தனியாக இடம் தேடி நடுத்தர வர்க்கம் அலையும் நிலை வரலாம். இது அதிகப்படியான கற்பனை அல்ல. மறுகாலனியாதிக்கத்திற்கெதிராக களத்திலிறங்காத வரை இது தொடர்ந்து கொண்டே தானிருக்கும்.

“வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்று நினைப்பவர்களின் நோக்கத்தை சிறுபிரிவினர் விரும்பாதது போலத் தெரிகிறது…. மீதமுள்ள சமூகத்தினருக்காக முடிவெடுக்க சிறுபிரிவினருக்கு உரிமையிருக்கிறதா என்பதே என் கேள்வி” என்கிறான் டாடா. ரத்தன் டாடா முடிவெடுத்து விட்டார் கார் தயாரிக்க, அதுவும் லட்ச ரூபாய்க்கு மக்களின் வாழ்க்கைததரத்தை உயர்த்துவதற்காக. அவர் முன்னரே சொன்னது போல் குறைவான லாபத்தை அவர் ஏற்பார், தியாகங்களோடு, உயர்ப்பலியையும் நந்திகிராம், சிங்கூர் மக்கள் ஏற்க வேண்டும்.

இன்று நீதிமன்றத்தில் இந்த சிபிஎம் குண்டர்கள் வைத்த டாடாவின் குறைந்த லாபத்தையும், மக்களின் அகதிகளாக வெளியேற்றப்படுவதையும் சரிபார்த்த “நீதிமான்கள்” நிலத்தை கையகப்படுத்தியது சரிதான் என்று அதனை எதிர்த்து தொடர்ந்த 11 வழக்குகளையும் தள்ளுபடி செய்துவிட்டது.

மக்கள் கார் (!?) புரட்சிக்கு பின்னாலுள்ள பிளாஷ் பேக்கை பார்ப்போம். “2003ம் ஆண்டு ஒரு நாள் மும்பையில் இரவு மழையின்போது சென்று கொண்டிருந்தார் டாடா. அப்போது ஒரு இளந்தம்பதி இரு சக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தார்களாம். மழைநேரத்தில் இந்த அபாயகரமான பயணம் அவர் மனதில் விதையாகி தற்போது மரமாகிவிட்டதாம்”

அய்யா, புரட்சி இப்படி ஒரு முதலாளியின் செரிக்காத வாயு நாற்றத்திலிருந்து எழாது.

புரட்சி என்பது மக்களின் போர்க்குரல், எரிமலையின் சீற்றம். இந்த சீற்றம் நிகழும் அன்று காம்ரேடு டாடாக்களும், அவர்களின் பாதந்தாங்கிகளாக அருவருடிகளும், போலிகளும் சமாதியாகிக் கொண்டிருப்பார்கள்.

இரும்பு

Read Full Post »

Older Posts »