Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘நல்லகண்ணு’

அட கரணமுன்னா இது கரணமுங்கோ…

இந்த அரசியல்லயே சுத்தபத்தமான கட்சிக்காரங்க கம்யூனிஸ்ட் னு ஊரே நெனச்சிகிட்டு இருந்தது.. திருப்பூரு கோவிந்தசாமி மேட்டர்லயே இல்லீன்னு

Justify Fullதெளிவா தெரிஞ்சி போச்சுங்க , இருந்தாலும் வெகு பேரு அப்படித்தான் நெனச்சிகிட்டு இருந்தாங்க..ஆனா , இந்த கூட்டணி படுத்தற பாடு கம்யூனிஸ்டுகளையும் ஒரு மூணாந்தர கட்சியாக்கிடுச்சோ அப்படீன்னு நெனக்க வேண்டியிருக்கு.

இந்திய கம்யூனிஸ்டு கட்சின்னா ஒரு மதிப்பு வர்றதுக்கு காரணம் நல்லகண்ணு அய்யா. அத கெடுத்து குட்டிச்சுவரா ஆக்கிடுவாரோ தா.பாண்டியன் அய்யா அப்படின்னும் நாம கேட்க வேண்டியிருக்குங்க..

ஈழத்துக்காக கம்யூனிஸ்டுகள் கட்சி நலன் பாராமல் உண்ணாவிரதம் நடத்துறோம்னு சொன்னாங்க. நம்பினோம் , கருணாநிதி கூட்டணிக் கணக்கு அப்படின்னு சொன்னார்…இல்லைன்னாங்க கம்யூனிஸ்டுகள் ….

ஆனா உண்மை என்ன?

அதிமுக , தேமுதிக , இப்படி அவுங்க கூட்டணிக்கு முயற்சி பண்ற கட்சிகளை மட்டும் கூப்பிட்டு உண்ணாவிரதம் நடத்தும்போது அனல் தெறிக்க அய்யா தா.பாண்டியன் அய்யா அனுதினமும் பதவின்னு நெனக்கிறவங்களுக்கு மனுசனின் சாவைப் பத்தி என்ன கவலை அப்படீன்னாரு……

வர்றதா சொன்ன அதிமுக கல்தா கொடுத்திருச்சி , தேமுதிகவோ உண்ணாவிரத மேடையை கேவலப்படுத்திருச்சி……இதுல கம்யூனிஸ்டுகளோட கூட்டணி முயற்சி கொஞ்சம் பின்னடைவாச்சி…!!!

பின்னாடி , திமுக ஏற்பாடு பண்ணின அனைத்துக் கட்சி கூட்டம் , மனித சங்கிலி இதுல எல்லாம் பங்கெடுத்திச்சி…சரியா , இதுக்கப்புறம்தான் ஏ.பி.பரதன்    சந்திச்சார்…

கூட்டணிக் கணக்கு ஓக்கே ஆயிடுச்சின்னு மகிழ்ச்சியா வெளியே வந்தாங்க ஏ.பி.பரதனும் , தா.பாண்டியனும்…!!! அப்பா , ஒரு வழியா செட் ஆயிடுச்சின்னு நெனச்சோம்….

அம்மாவை எதிர்க்க திராணியில்லாம ஈழ ஆதரவுக் கொள்கையையும் கொஞ்சம் தள்ளி வைச்ச தா.பாண்டியன் , இந்தியப் பிரதமரையே தமிழனை மதிக்காதவர் , அதனால் சந்திக்க விருப்பமில்லைன்னார்…அட்டா , நல்ல வீரமுள்ள தலிவருதான் கெடச்சிருக்காருன்னு காம்ரேடுக சந்தோசப்பட்டிருப்பாக….அவுங்களுக்கும் தெரியும் , ரெண்டு மூணு எம்.பி சீட்டு அப்படிங்கற ஒரே காரணத்துகாகத் தான் இந்த டெம்ப்ரரி வீரமெல்லாம்னு , பரவால்ல இருக்கட்டும்…

இந்தச் சமயத்துல தான் அரசியல் கோமாளி சோ , அம்மாவை சந்திச்சார்….அதுக்கப்பறம் அம்மா மனசு மாறிடுச்சி போல , கம்யூனிஸ்டுகளுக்கு நோ சொல்லிட்டாங்க போல….பாஜகவுக்கு எஸ் சொல்லிட்டாங்க போல.

நம்ம தா.பாண்டியன் அய்யா டபால்னு கரணமடிச்சிட்டாரு………….

அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பிரதமரை சந்திப்பேன்னு நேத்து பேட்டி கொடுத்து இன்னிக்கு பிரதமரையும் சந்திச்சிட்டாரு…..!!!!!!

ரெண்டு எம்.பி.சீட்டு படுத்தற பாட்டை பாத்தீங்களா????

சீட்டுக்காக கம்யூனிசத்தையே அடகு வைக்கும் இவுங்கதான் நாளைக்கு மூணாவது அணி அமைச்சி நாட்டை முன்னேத்த போறாங்களாம்…

நல்லகண்ணு அய்யா இதையெல்லாம் இன்னும் பாத்துகிட்டுதான் உக்காந்திருக்கார்…அவுரு கண்ணு முன்னாலயே கட்சிய கந்தரகோலம் பண்ணிடாதீங்கய்யா………

Read Full Post »