போலி கம்யுனிஸ்டு ஒருத்தர் இருந்தார். அவர்ட்ட போய் என்னாபா இப்படி அப்பட்டமா ஏகாதிபத்தியத்துக்கு சேவை
செய்யுறியே என்ன விசயம்? இதுக்கு மார்க்ஸியத்துல என்ன வியாக்கியனம் கொடுக்கப் போற என்று கேட்டேன்?அந்த போலி கம்யுனிஸ்டுக்கோ ஒரே கோபம். என்னாடாதி நம்மள பாத்து கேள்வி கேட்டுட்டானே என்று தமது தத்துவ வியாக்கியானத்தை புரளி வடிவில் கொடுத்துள்ளனர்.இவர்களின் இதே கட்டுரையை ஒரு அதிமுக அல்லது ஒரு திமுக காரர் இவர்களை தாக்கி எழுதுவதாகக் கொண்டால்
அப்படியே பொருந்தும். அதாவது இவர்களின் கட்டுரைப் படி இவர்களை விட சிறந்த கட்சி திமுக, அதிமுக உள்ளிட்ட
வோட்டுப் பொறுக்கி கட்சிகள்தான். வோட்டுப் பொறுக்கி என்று திமுக அதிமுக கட்சிகளை குறை கூறுவதை இந்த போலி
கம்யுனிஸ்டுகள் அனுமதிப்பதில்லை. என்ன செய்ய இந்த வரையறை அவர்களுக்கு பொருந்துகிறதே. இப்படி இவர்கள் காபந்து
செய்யும் ஆட்கள் நிறைய பேர் – சங்கராச்சாரி, டாடா, ஜார்ஜ் புஷ் etc.மக்கள் பிரச்சனை, பொருளாதார கொள்கை நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பினால், அதில் என்ன தத்துவ அடிப்படை
உள்ளது என்று கேள்வி எழுப்பினால், அது குறித்து எந்த பதிலும் சொல்லாமல் புரளி பேச விழைந்து தாம் உண்மையிலேயே
போலி கம்யுனீஸ்டுதான் என்று நிரூபிக்கிறார் இவர். ஏனேனில் மார்க்ஸியத்தை நடைமுறையில் கொண்டவர்கள் இல்லை
இவர்கள். அதனால்தான் தமது நடவடிக்கைகளுக்கு எந்த தத்துவ வியாக்கியானமும் கொடுக்க வழியின்றி இப்படி பொருமி
கொட்டுகிறார்கள்.
எண்ணிக்கைதான் அளவு கோல் எனில் அன்றைக்கு பகத்சிங் திண்னை புரட்சியாளந்தான். இன்றைக்கு அதிமுகதான் புரட்சிகர
கட்சி.
ஆனால் பகத்சிங்கை கண்டுதான் ஏகாதிபத்தியம் நடுங்கியது. மக இக வைக் கண்டுதான் இந்துத்துவம் தமிழக்த்தில் கதறியது
பின்வருமாறு, “தமிழக்த்தை பொறுத்த வரை மக இக தான் நமது முதன்மை எதிரி’ என்று. இந்திய அளவிலும்
நக்சல்பாரிகளையே தமது முதல் எதிரிகளாக வரையறுத்துள்ளனர் இந்துத்துவாதிகள்.
ஏனேனில் மார்க்ஸிஸ்டுகளுக்கும், இந்துத்துவாதிகளுக்கும் அதிகார போட்டி தவிர்த்து சித்தாந்த போட்டி என்று ஏதுவுமில்லை
என்று இந்துத்துவவாதிகளுக்கு தெரியும். CPM தலைவர் ஒருவர் தன்னை பார்ப்பனன் என்ற பொழுதும், தீபாவளி, ரமலன்
விழாக்களுக்கு சிறப்பிதழ் வெளிய்யிட்ட போதும், சஙக்ராச்சாரிக்கு அரசு விருந்தினர் மரியாதை கொடுத்த போதும், CPM கூட
இந்த இந்துத்துவ கூட்டணியை மறைமுகமாக உறுதிப்படுத்தியது. ஏன் நக்சலிசம் குறித்த இன்னுமொரு துரோக
நடவடிக்கையில் நமது திரு போலி அவர்கள் கூட வஜ்ரா எனும் இந்துத்துவாதியிடம் சென்று அங்கீகாரம் கோரினார்.
மகஇகவைக் கண்டுதான் தாமிரபரணி கோக் பிரச்சனையில் போலிஸ் பேச்சு சுதந்திரத்தையே மறுத்து தொலைக்காட்சியில்
அம்பலமாகியது. மக இக அந்த பிரச்சனையில் இறங்கியாராவிடில் CPMன் அடையாள போராட்டத்தின் வீச்சு என்ன்வென்று
தெரிந்த அரசும், போலீசும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்திருக்கும். இந்த சம்பவத்தில் தெரிய்வருவது ஒரு கட்சியின்
பலம் என்பது புரட்சிகர சித்தாந்தம் தான் என்பது மிகத் துலக்கமாக தெரிந்தது.
லெனின் ஒரு கட்சியின் பலம் என்பதாக புரட்சிகர சித்தாந்தையே சொல்கீறார். நானும் பல முறை இந்த போலிகளிடம்
உங்களின் புரட்சிகர சித்தாந்தம் என்னவென்று கேட்டுவிட்டேன். பதில் இல்லை. கடைசியில் MBA படிப்பில் சொல்லித்
தரப்படும் பிழைப்புவாதமே இவர்களின் புரட்சிக்ர சித்தாந்தம் என்று புரிந்து கொண்டேன். அது மார்க்ஸியம் அல்ல
என்பதுதான் எனது நிலைப்பாடு. அவர்களோ MBA படிப்புதான் மார்க்ஸியம் என்றூ சொல்லாமல் சொல்கிறார்கள்.
ஒரு புரட்சிகர சித்தாந்தம் மக்களின் கையில் கிடைக்கப் பெறும் போது பௌதீக சக்தியாகிறது – மக இக வின் புரட்சிகர
சித்தாந்தம் ஒரு பௌதீக சக்தியாக இன்னும் முழு அளவில் பரிணமிக்கவில்லை. ஆனால் புரட்சிகர சித்தாந்தத்தை தமது
கொள்கையாக அவர்கள் கொண்டுள்ளனர். CPM? வெறும் விசிலடிக்கும் குஞ்சுகளையும், RSSக்கு இணையாக பொறுக்கிக்
கூட்டத்தையுமே தமது பிரதான சக்தியாக கொண்டுள்ளது. புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தை பிழைப்புவாத மோகத்தில்
மூழ்கடித்து, தொழிற்சங்கம் என்பத்ற்க்கே அவப் பெயரை உருவாக்கியுள்ளது.
முதலாளித்துவ பாரளுமன்றம் நடைமூறையில் உள்ள நாட்டிலேயே ஒரு கம்யுனிஸ்டு கட்சி என்பது தலைமறைவாக செயல்பட
வேண்டியதன் தேவை குறித்து லெனின் கூறுகீறார். மகஇக வெகு ஜன அமைப்புதான். தமிழகம் முழுவதும் வீதிகள் தோறும்
நக்சல்பாரி என்று எழுதியவர்கள்தான். ஒவ்வொரு பேரணியிலும் நக்சல்பாரி என்று முழங்கியவர்கள்தான். தமது பொருளாதார அர்சியல் கொள்கைகளை தமது ஒவ்வொரு போராட்டத்திலும் நேரடியாக மக்கள் முன் வைத்துதான் அவர்க்ளை அணி திரட்டுகீறார்கல் மக இகவினர். திரு போலி அவர்கள் கூறுவது போல பக்கத்து வீட்டுக்காரனுக்குக் கூட தெரியாமல் அரசியல் செய்துதான் மக இகவிற்கு அமைப்பு கடந்த ஆதரவு இன்று உருவாகியுள்ளதோ?
ஆனால், முல்லைப் பெரியாறு முதல், காவிரி வரை தமது நிலைப்பாட்டை மாநிலத்திற்க்கு ஒரு குரலில் பேசி புர்ட்சி செய்வது யார்? இந்தியாவெங்கும் ஸ்டைரைக் ஆனால் மே.வாவில் கிடையாது, இந்தியா முழுவதும் உலகமயத்திற்க்கு அடையாள எதிர்ப்பு ஆனால் மே.வாவில் பில் கிளீண் டனுக்கு வரவேற்ப்பு, இந்தியா முழுவதும் ஜார்ஜ் புஷ்க்கு எதிர்ப்பு மே.வாவில் அமெரிக்க ராணுவ பயிற்சிக்கு சிகப்பு கம்பள வரவேற்ப்பு – நல்ல புரட்சிகர கட்சி. இதைத்தான் வோட்டுப் பொறூக்கி அரசியல் என்கிறோம். மக்களை வெறும் வோட்டு போடும் மிசின்களாக கருதி நடக்கும் இவர்களைத்தான் நாம் போலி கம்யுனிஸ்டு என்கிறோம். மக்களிடமிருந்து கற்றுக்கொள் மக்களுக்கு கற்றுக் கொடு என்பதை இவர்கள் நடைமுறைப்படுத்தும் விதம் இதுதான். உண்மையில் கூரை ஏறி கோழி பிடிக்கும் விசயம் இவர்களுக்குத்தான் சாலவும் பொருந்தும். சாதாரண விசயங்களிலேயே மிக அற்பமாக சரணாகதி அடையும் இவர்கள் எந்த காலத்திலும் பாட்டளிக்கோ அல்லது விவசாயிக்கோ விடுதலை வாங்கி கொடுக்கப் போவதில்லை. இவர்களின் நில சீர்திருத்தத்தின் அவலம் வேலையின்மையிலும், கேரள வல்லநாடு உள்ளிட்ட இடங்களிலும், ரப்பர் தொழில் சரிவிலும் தெரிகீறது. நாடாளுமன்ற குண்டு சட்டிக்குள் புரட்சி செய்ய முனைந்து ஏகாதிபத்திய சேமியாவுக்கு கறிவேப்பிலையாக மணக்கும் CPMன் அவலம் உண்மையிலேயே மிக பரிதாபகரமானதுதான்.
அப்புறம் மாவோயிஸ்டுக்ள் குறித்த இவர்க்ளின் கொள்கை முரன்பாடுகளுக்கு மாவோயிஸ்டுகள்தான் வந்து பதில் சொல்ல வேண்டும். ஆனால் மாவோயிஸ்டுகளை விமர்சிக்க இவர்களுக்கு தகுதியில்லை என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். மம்தாவின் பின்னால் மக இக ஒளிவாதாக கூறுகிறார் மேலும் ஜெயலலிதா மே.வாவில் இருந்தால் அவர் பின்னாலும் ஒளிவோம் என்கீறார். உண்மையில் ஜெயலலிதா முதலானவர்களின் பின்னால் ஒளிந்து வோட்டு அரசியல் நடத்திய பிழைப்புவாதிகள் யார் என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
சரிதானே நான் சொன்னது. இவர்கள் இன்னும் ஏன் மார்க்ஸிஸ்டு என்று பெயர் தாங்கி அழைகிறார்கள் என்று தெரியவில்லை.
அதற்க்கு இது வரை திரு போலியிடம் இருந்து விளக்கம் வரவேயில்லை.
About Singur:
http://tamilarangam.blogspot.com/2007/03/blog-post_01.html
******************
இதற்க்கு முன்பே ஒரு முறை இந்த போலிகள் தங்களது தத்துவ ஓட்டாண்டித் தனத்தை விளம்பரப்படுத்தி அசிங்கப்பட்டுள்ளனர். அந்த பதிவில் நான் இட்ட பின்னூட்டம்,
//////
சல்வாஜூடம் போன்ற துரோக இயக்கங்களை சந்தித்து விடலாம் ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் உள்ளிருந்து கழுத்தறுத்து அரசின் குரலாக ஒழிக்கும் தங்களைப் போன்றவர்களை என்ன செய்வது?
அதுவும் ஒரு இந்துத்துவவாதியிடம் சென்று அங்கீகாரம் கோரிய தங்களை போலி கம்யூனிஸ்டு என்று விமர்சனம் செய்வது எந்த வகையில் தவறு?
Maoist-னுடைய அரசியல் செயல்/போர் தந்திரம் சரியா, தவறா என்பது விவாதத்திற்க்கு உரியது. மாறாக கற்பிதமான அவதூறுகளைப் பரப்பி அரசியல் செய்தது CPM. அது CPMனுடைய தராதரம்.
Maoist பற்றி சொல்லுவத்ற்க்கு தங்கள் கட்சிக்கு ஏதாவது அருகதை இருக்கிறதா. Maoist னுடையது இடது சகாசவாதம் எனில் தங்களுடையது வல்து சந்தர்ப்பவாதம்.
மற்றபடி தங்களது பதிவிலேயே கிசு கிசு ரேஞ்சில் சில குற்றச்சாட்டுகள் வைத்துள்ளீர்கள். அதே போல் என்னால் ஆயிரம் உதாரணங்கள் தங்களது CPM மீது வைக்க முடியும். ஆனால் ‘உலகின் மற்ற பயங்கரவாத அமைப்போடு தொடர்பு உள்ளது’ என்ற வரிகளுக்கு நான ஆதாரம் கேட்டால் தங்களால் தரமுடியாது என்பதால்தான் கிசு கிசு பாணியில் அதை சொல்லியுள்ளீர்கள்.
************
உங்களது ஆதரவு பெற்ற சல்வஜூடம் இயக்கத்தைப் பற்றி நான் என்ன சொல்லுவது அந்த பகுதியின் போலி கம்யூனிஸ்டு தலைவர் ஒருவரே கூறிவிட்டார். ஒரு வேளை மாநிலத்துக்கு மாநிலம் மக்களை ஏமாற்ற கூட்டணி கட்டும், ஒரே விசயத்தை இரண்டு விதமாக விமர்சிக்கும் அணுகுமுறை இந்த விசயத்திலும் வேலை செய்கிறதா?(அதாவது சட்டீஸ்கரில் சல்வஜூடம் சரியில்லை என்று கூறுவது, இங்கு அதுதான் சரி என்று கூறுவது. இந்தியா முழுவது ஸ்டைரக், மே.வ. தில் முதலமைச்சரே ஸ்டைர்க்குக்கு தடை, மே.வா தனியார்மயம், உலகமயம் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது மற்ற மாநிலங்களில் எதிர்த்து பேச(மட்டும்) செய்வது).
CPM: வோட்டு சார் வோட்டு……
நாம்: அப்போ மக்கள்?
CPM: அவிங்க கிடக்கிறாங்க விடுங்க சார். ஜனநாயகம் என்றால் என்னானே அவிங்களுக்கு தெரியாது. அவங்ககிட்ட வைச்சு என்னாத்த விவாதம் செய்ய… நம்ம குறுக்கு வழியில சட்டமன்றத்த பிடிச்சு புரட்சி பன்னுவோம். அதுக்கு கொள்கையெல்லாம் மூட்டை கட்டி வைச்சிட்டு மத்த வோட்டு பொறுக்கி மாதிரியே நாமலும் மக்கள ஏமாத்தனும். இன்னைக்கு கருணாநிதின்னா நாளைக்கு ஜெயலலிதா.. ஆனா என்னைக்கும் நமக்கு 10 MLA சீட்டு உறுதி..
************
அப்புறம் இது வர்க்கப் போராட்டமா என்று கேட்டிருந்தீர்கள் வர்க்கப் போராட்டம்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. துரோகிகள் காக்கி உடையிலும் வரலாம், இதுபோல தத்துவ மயக்கத்தில் சொந்த வர்க்கத்தில் இருந்தும் வரலாம். ஆனால் வரலாற்றில் நிகழ்ந்த இன்னொரு வர்க்கப் போராட்டம் பற்றி கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.
மே.வவின் முதல் கம்யுனிஸ்டு கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் காங்கிரசுக்கு கூஜா தூக்கி- நக்சல்பாரி கிராமத்தில் எழுந்த விவசாயிகள் புரட்சியை ஒடுக்கிய CPM-ன் நடவடிக்கை வர்க்கப் போராட்டமா?
இதற்க்கு தங்களிடம் பதில் இருக்காது. நானே சொல்கிறேன், அது வர்க்கப் போராட்டம்தான். அரசியல் தரகு வர்க்க CPM க்கும் வறிய விவசாயிகளுக்கும் நடந்த போராட்டம்தான் அது.
அங்கு ஒரு அரசின் கடமையை கிஞ்சித்தும் கவலையின்றி செய்த பாட்டாளி வர்க்க கட்சி?? – CPM.
பலியான விவசாயிகள் – உரிமைக்காக போராடியவர்கள்.
இங்கு சல்வாஜூடமில் போராடுபவர்கள் யாருடைய உரிமைக்காக போராடுகிறார்கள்? அரசு, ஊடகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பல்வேறு முற்போக்கு சக்திகள் சல்வாஜூடம் அமைப்பை கண்டிக்கும் பொழுது நீங்கள் ஆதரிப்பதில் உள்ள உள்நோக்கம் அவதூறு கிளப்பியே மாற்று தத்துவங்களை நிர்மூலமாக்கும் தந்திரம்தான் என்பது தங்களது அடிப்படையற்ற ஒரு கிசு கிசு பாணி குற்றச்சாட்டின் மூலம் அம்பலமாகிறது.
அதுசரி இன்னோரு விசயத்தைப் பற்றியும் கேள்வி கேட்க வேண்டியுள்ளது. கேராளாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகின் முதல் கம்யுனிஸ்டு அரசு களைக்கப்பட்டதே. அந்த அனுபவம் என்ன? நீங்கள் சொல்ல மாட்டீர்கள். ஏனென்றால் எதையும் மக்கள் முன் வைத்து விவாதிப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறீர்களே. மக்களிடமிருந்து கற்றுக் கொள்வது மக்களுக்கு கற்றுக் கொடுப்பது என்பதை – மக்களிடமிருந்து பிற்போக்குத் தனத்தை கற்றுக் கொள், மக்களுக்கு பிழைப்புவாதத்தை கற்றுக் கொடு என்று புரிந்து கொண்ட அமைப்புதானே CPM என்ற போலி கம்யுனிஸ்டு கட்சி.
கேரள அரசு கவிழ்ப்பின் படிப்பினையாக CPM எடுத்துக் கொண்டது – நாய் வேசம் போட்டால் குரைக்க வேண்டும், பன்னி வேசம் போட்டால் சாக்கடையில் சவக்….சவக்…தான். அதாவது அரசு என்ற பாத்திரத்தை எடுத்துக் கொண்ட CPM அந்த அரசின் வேலைகளைச் செய்ய வேண்டும். கம்யூனிசம் எல்லாம் கோமனத்தை கழட்டி காயப் போட்டிருக்கிறோம் புரட்சிக்கான சூழல் வரும் பொழுது கட்டிக் கொள்வோம் என்ற அளவில்தான். இதைத்தான், அதாவது கேரள அனுபவத்தின் படிப்பினையைத்தான் மேற்கு வங்கத்தில், எந்த வர்க்கதின் பலத்தில் ஆட்சிக்கு வந்தார்களோ அந்த விவசாயிகளை நசுக்க அமல்படுத்தியது. அதாவது அரசின் அடக்குமுறை.
****************
புரட்சிகர கட்சியின் பாத்திரம் பற்றி லெனின் கூறுகிறார், ஒரு சிறப்பான கட்டமைப்பான புரட்சிகர பாட்டாளி வர்க்க கட்சி இருந்தால், எந்தவொரு சாதாரண சம்பவத்தையும் புரட்சிக்கான சம்பவமாக மாற்ற முடியும்.
புரட்சி என்பது மேலே பறந்து போகும் காக்கை போடும் எச்சமல்ல. காக்கை போடும் பொழுது பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருப்பதற்க்கு.
அதற்க்கு அடிப்படையாக தேவைப்படுவது முரன்பாடுகளை கையாளும் துணிச்சலும், தத்துவ பலமும். இந்த இரண்டும் உறுதியாக CPM-க்கு கிடையாது. அதுவும் முரன்பாடுகளை கையாளும் துணிச்சல் உறுதியாக அதற்க்கு கிடையாது. மாறாக முரன்பாடுகளை பார்த்தால் வசதியாக ஒருக்களித்து படுக்கும் ஒரு இடுக்கு கிடைத்து விட்டது என்று சந்தோசப்படும். இதை அந்த கட்சி பல்வேறு பிற்போக்கு சக்திகளுடன் தத்துவ தளத்தில் வைத்திருக்கும் உறவுகளை பார்த்தால் புரியும்(இங்கேயும் நீங்கள் வக்ராவுடன் கொஞ்சிப் பேசி அணுகிய விதம் அந்த பண்பாட்டின் எச்சம்தான்).
எடுத்துக்காட்டுக்கு ஒரு முக்கியமான முரன்பாட்டை இவர்கள் கையாளும் விதத்தை பாருங்கள்.
தனிஉடைமை அரசு என்பது மக்களை சுரண்டிக் கொழுக்கும் ஒரு அமைப்புதான், ஆனால் தனது வாழ்க்கையை உத்திரவாதப்படுத்திக் கொள்ள அது மக்களுக்கான அரசு என்பது போல தோன்றச்செய்யும் நடவடிக்கைகளையும் அது செய்யும்.
அரசின் இந்த இரட்டை நிலைப்பாட்டை, முரன்பாட்டை(அதன் உண்மையான மக்கள் விரோத இயல்பு Vs மக்களை ஏமாற்றும் அதன் மக்கள் நல நடவடிக்கைகள்) சரியாக கையாள்வதன் மூலம் அதை மக்களிடம் அம்பலப்படுத்துவதும். இந்த இரட்டை நிலைப்பாட்டுக்கு இடையில் அரசு சிக்கி தவிப்பதில் தனது ஜீவிதத்தை உறுதிப்படுத்திக் கொள்வதும் என்பதாகத்தான் ஒரு புரட்சிகர கட்சியின் நடவடிக்கை இருக்க வேண்டும்.
தங்களது அமைப்பு என்றைக்காவது இந்த முரன்பாடுகளுடன் விளையாண்டுள்ளதா? எங்கே விளையாட முரன்பாடுகளை கண்டாலே சம்ரசம் என்ற நியுட்ரல் கியர் போட்டு அங்கேயே ஐக்கியமாகிவிடும் அமைப்பல்லவா அது.
***********
அப்புறம் ஆயுதத்தை, சூழல் தீர்மாணிக்கும் என்று ஒரு வரி போட்டு நாங்கள் அசைவ புலிதான் என்ற ஒரு போலியான உண்ர்வை ஏற்படுத்த முயன்றிருந்தீர்கள். மாவோ சொல்கிறார் நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்று நமது எதிரி தீர்மாணிக்கிறான்.
புரட்சியின் தருவாயில் CPM மும் ஆயுதம் எடுக்கும் ஆனால் ஒரு அரசாக – அந்த புரட்சியை ஒடுக்கும் ஒரு ஆளும் வர்க்க கைக்கூலியாக ஆயுதத்தை எடுக்கும்.
********
வர்க்கப் போராட்டாம், வெகுஜன இயக்கம், ஹிந்துத்துவ எதிர்ப்பு என்று தங்களது நடைமுறைக்கு சம்பந்தமில்லாத விசயங்களைப் பற்றி பேசுகிறேர்கள். அப்படி என்ன விதமான போராட்டங்களை நடத்தி விட்டேர்கள் என்று நான் கேட்பதை விடுங்கள் மக்களுக்கு தெரியும். நான் சில தத்துவ அடிப்படை கேள்விகள் கேட்டால் என்ன என்று தோன்றுகிறது.
மக்களுக்கு ஜனநாயகமே அறிமுகமாகாத போது இடது தீவிரவாதம் பேசுவது ஆபத்து என்று முன்பொருமுறை சொன்னீர்களே? யாருக்கு ஆபத்து?
இந்த ஜனநாயகம் இல்லை என்ற காரணத்தினாலேயே காஸ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகளை மறுதலித்து அவர்களை களாவானித்தனமாக இந்தியாவுடன் இணைப்பதை ஆதரிக்கிறேர்களே இது எந்த மார்க்ஸிய புத்தகத்தில் உள்ளது?(அய்யா, ஒழிந்திருக்கும் திரிபுவாதிகளே காஸ்மீர் இந்தியாவுடன் இருப்பதைத்தான் நானும் விரும்புகிறேன்.)
இந்திய புரட்சிக்கான தங்களது புரட்சிகர செயல் தந்திரம் என்ன?
இந்திய சமூகத்தைப் பற்றிய தங்களது வரையறை என்ன?
இந்தியாவில் ஜனநாயகம் இருக்கிறதா இல்லையா? அதன் அளவு, வீச்சு என்ன?
ஒரு கம்யூனிஸ்டு கட்சியின் கடமை என்ன?
சரி, தங்களுக்கு CPI க்கும் என்னதான் வித்தியாசம்? சும்மா புத்தகத்தில் உள்ளதை ஒப்பிக்காமல் நடைமுறையில் உள்ள வேறுபாட்டுடன் சொல்லவும்.
*********
ஸ்டாலினை இன்னும் ஆதரிக்கிறீர்களா அல்லது ஆள் செர்க்கவும், தட்டி போர்டில் போட்டோ போடவும் மட்டுமே உபயோகப்படுத்துகிறீர்களா?
இந்த கேள்வி ஏனென்றால்….. இங்கே ஒருத்தன் ஸ்டாலினை கொலைகாரன் என்று மட்டமாக எழுதினான் அப்பொழுது தங்களது சுயமரியாதை ஒழிந்த இடம் எங்கே?
அல்லது மனிதருள் மிருகம் என்று ஸ்டலினை எழுதியவருக்கு விருது கொடுத்த பொழுது இனாமாக தங்களது கட்சி சுயமரியாதையையும் சேர்த்து கொடுத்து விட்டதா?
மனிதருள் மிருகம் எழுதியவரை கௌரவித்த CPM வர்க்க ஸ்தாபனம், மனிதருள் மிருகம் எழுதிய மிருகத்தையும் அதை வெளீயிட்ட பத்திரிக்கையையும் மன்னிப்பு கேட்க வைத்த நக்சல்பாரி ம.க.இ.க பயங்கரவாத அமைப்பு. பலே…. தங்களது கட்சியின் தனி சிறப்பு வாய்ந்த ஆய்வு முறை-வர்க்க பகுப்பாய்வு முறை, வக்ராவிடம் அங்கீகாரம் கோரியபோது மட்டுமல்ல மாறாக இது போல ஆயிரத்தெட்டு சம்பவங்களில் பளிச்சென்று அப்பட்டமாக வெளிவருகிறது.
***************
கோக்கோலா பிரச்சனையில் தங்களது வெகு ஜன நடவடிக்கை என்ன? ஒரு சிறிய நக்சல்பாரி அமைப்பான ம.க.இ.க மக்களை அங்கு திரட்டியதில், மாநிலம் முழுவதும் ஒரு பொதுக் கருத்தை உருவாக்கியதை வெகுஜன இயக்கமாக தங்களால் பார்க்க இயலாது. தங்களது பார்வையில் ஜனநாயாகத்தின் சுவை அறியாத மக்களுக்கு ஜனநாயகம் தேவையில்லையே. அதனால் சட்டமன்ற நாடாளுமன்ற நடவடிக்கையே ஜனநாயகம், தேர்தலுக்கு கூட்டணி சேர்ந்து மாற்றுக் கட்சி அன்பர்களுடன் மக்கள் தலையில் மிளகாய் அரைப்பதே வெகுஜன இயக்கம் போலும்.
தங்களது த.மு.எ.ச வெளியிட்ட மூழ்கும் நதி திரையிட தடை செய்யப்பட்டதே அதை என்ன சொல்கிறீர்கள்?
ஒரு ஜனநாயகத்துக்கு உரிய எல்லா அம்சங்களிலும் இந்த சட்டமன்ற/நாடாளுமன்ற அமைப்பு அம்பலப்பட்டு நிற்க்கும் பொழுதும் அதை முட்டுகொடுத்து அதில் இன்னும் எதோ பாக்கி இருப்பது போல் உணர்வு கிளப்பும் நீங்கள் இந்தியாவின் சாலச் சிறந்த முகமூடி என்பதில் தங்களுக்கு எந்த போட்டியும் இல்லை.
இந்துத்துவ எதிர்ப்பில் நடைமுறையில் என்ன செய்திருக்கிறீர்கள். இந்துத்துவம் BJP, RSS மட்டுமல்ல. அது அனைத்து கட்சி தழுவிய ஒரு தத்துவம்(CPM அதில் உண்டு). இதை பற்றி உங்களது ‘மார்க்ஸீயம்’ இதழிலிலேயே விரிவான கட்டுரைகள் வந்துள்ளன. சட்டமன்ற நாடாளுமன்ற வழிமுறை சும்மா பம்மாத்து என்பது உங்களுக்கு அப்பனான இந்துத்துவ சக்திகளுக்கு மிகவும் தெளிவாக தெரியும்.
இந்துத்துவம் பற்றி அப்படியொரு ஆழ்ந்த புரிதல் இருப்பதினால்தானோ தீபாவளி, ரம்ஜான் சிறப்பு இதழ்கள் ஆயுத பூசையன்று ஆட்டோ க்காரர்களுடன் சேர்ந்து சாமி படம் வைத்து கொண்டாடுவது, நாடாளுமன்ற கற்பின் காவலர் சோம்னாத சேட்டர்ஜியின் பேரனுக்கு பூணுல் கல்யாணம் செய்ய அவர் வருவது, தங்கள் கட்சி அணிகள் சாதி வெறியுடன் இன்னும் நிலபிரபுத்துவத்தை தாங்கி நிற்க்கும் பூத உடல்காலாக வலம் வருவது(சமீபத்திய புதிய ஜன நாயகம் இதழில் இந்த சாதி வெறி பற்றிய கட்டுரை வந்துள்ளது) என்று பல புதிய உத்திகளை கையாள்கிறேர்களோ. இந்துத்துவ எதிர்ப்பிற்க்கு நல்ல நடைமுறை, நல்ல வெகுஜன இயக்க தந்திரம்.
மாறாக இந்துத்துவ எதிர்ப்பில் முன்னனியில் இருக்கும் ஒரு அமைப்பு ம.க.இ.க. இங்கு வந்த பிரவீன் தோகாடியா சொன்னது தமிழ் நாட்டில் நமது முதல் எதிரி ம.க.இ.க என்றுதான்.
அய்யா, உங்களால் இந்த சமூகத்துக்கு விளைந்த ஒரே நன்மை பாட்டாளியின் போராடும் உணர்வை மழுங்கடித்து, பேரம் பேசுவதுதான் பாட்டாளி வர்க்க புரட்சி என்ற புரிதலுக்கு இட்டு சென்றதுதான். அதனால்தான் ஒரு தொழிற்சங்கத்தில் சேருவதற்க்கு அடிப்ப்டையாக ஒரு தொழிலாளி அந்த சங்கத்தின் பேரம் பேசும் திறமையை பார்க்கிறான். மிக நல்ல உதாரணம் அசோக் லேலான்ட் தொழிற்சாலை. பாட்டாளிகளுக்கு பிழைப்புவாதத்தையும், மற்ற வெகுஜனங்களுக்கு தொழிற்சங்கம் என்றால் கோமாளித்தனம் என்ற புரிதலையும் ஏற்படுத்தியதை தவிர்த்து என்ன செய்து விட்டீர்கள்.
தங்களது பதிவிலும் புரட்சி, பாட்டாளி என்று பல வார்த்தைகள் உள்ளன. ஆனால் நடவடிக்கையில் இவற்றை கோரும் போது வோட்டு போடு அத்தோடு நிறுத்திக் கொள். அரசை நிர்பந்திக்கும் போராட்டம் நடத்தாதே என்று இன்னோரு புதிய வகை புரட்சி பேசுவது தங்களது அமைப்பின் வாடிக்கை.
உங்களது குறைப் பிரசவ தத்துவத்தின் வறுமை கேரளாவின் வேலைவாய்ப்பில் தெரிகிறது. சீர்திருத்தவாதத்தின் அவலம் அப்படித்தான் இருக்கும். தங்களது நடவடிக்கைதான் கம்யூனிசம் பற்றி தவறான, கம்யூனிஸ்டுகள் என்றால் கோமாளி, ஸ்திர புத்தியில்லாதவன், வற்ட்டு சூத்திரதாரி, இழிச்சவாயன் என்ற பார்வையை இந்த சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளது.
கேரளா, மே.வத்திலும் கட்சியின் பலம் அது ஆளும் கட்சியாக இருப்பதுதான். அங்கேயும் அந்த கட்சியின் அடிமட்டம் அதிகார படிக்கட்டில் ஆதாயம் தேடும் போட்டிகள் பல்வேறு புகார்களில் சிக்கியுள்ளது.
********
நக்சலிசம் என்றால் ஆயுதப் போராட்டம் மட்டுமே என்ற தங்களது புரிதல் உண்மையிலேயே கம்யுனிசம் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியுமா என்று சந்தேகத்தை கிளப்புகிறது.
ம.க.இ.க போன்ற அமைப்புகள் என்ன துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வைத்துக் கொண்டா திருநெல்வேலியில் ஆர்பாட்டம் நடத்தினார்கள்?
ஒஹோ… ஒரு வேளை அரசை அம்பலப்படுத்துவதே வன்முறை என்று தங்களது கட்சி தங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறதோ?
அய்யா… நக்சல்பாரிகளை நல்வழிப்படுத்தும் முன்பு அந்த தத்துவத்தை படித்து அது சரியா, தவறா என்பதை முடிவு செய்யவும். அப்புறம் தங்களது அமைப்பு ஆட்களிடம் தத்துவத்தை நடைமுறையுடன் படிக்கச் சொல்லி ஒரு விண்ணப்பமிடவும்.
மற்றபடி இந்திய நிலைமகளுக்கேற்ற மாவோ வழி புதிய ஜனநாயக பாதை எப்படி நடைமுறைக்கான பாதை என்பதை புரியவைக்கத்தான் இந்த வலைப்பூ உலகில் வலம் வருகிறேன். அது போன்ற எனது பதிவுகளை வாதம் செய்யுங்கள். பிறகு நானும் எனது புரிதலை திருத்திக் கொள்கிறேன்.
தோழமையுடன்,
அசுரன்
///////
அதே பதிவிற்க்கு தோழர் கட்டபொம்மன் என்பவர் அளித்த பின்னூட்டம்,
/////
நாடு மறுகாலனியாதிக்கத்துக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும்போதும், அரசின் அடக்குமுறை எல்லை மீறும்போதும் நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதை நமக்காக எளிய வாழ்வு வாழ்ந்து கொண்டு போராடும் வர்க்கப்போராளிகளின் கீழ்க்கண்ட பாதைகளைப் பின்பற்றினால்தான் மக்களின் போராட்டம் வெல்லும்.
சதீஸ்கர் தீவிரவாதிகள், சென்னைப் போராளிகளிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய பாடங்கள் உள்ளன.
1) போயஸ் தோட்டத்துக்குப் புல்லறுக்கப் போய், அடுத்து அண்ணா அறிவாலயத்துக்கு மணியாட்டப் போய் விட்டு, இடையில் ஓய்வு கிடைக்கும் வேளையில், மெமோரியல் ஹால் அருகே பஸ்ஸே வராதபோது ‘வெல்லட்டும்!
வெல்லட்டும்!’ எனக் கத்தியபடியே கலைந்து போய்த் தமது போர்க்குணத்தை வெளிப்படுத்தலாம்.
2) சதீஸ்கரில் அரசின் அடக்குமுறைகளையோ, உலகமயமாக்கலின் கெடுபிடிகளையோ தீர்க்க, உயர்நீதி மன்றம் உச்சநீதி மன்றம் (இதனை உச்சிக்குடுமி மன்றம் என்று பெரியார் கட்சிக் காரர்கள் சொல்லினால் சொல்லட்டும் காம்ரேட்.) ஆகிய இரும்புக்கோட்டைகளில் ஏறி இறங்கி, மக்களுக்கு தெம்பூட்டலாம்.
3) அரசின் அனுமதியுடன் மக்கள் திரளைக் கூட்டி, மொட்டை அடிக்கும் போராட்டம், மணி அடிக்கும் போராட்டம், வாயில் கறுப்புத் துணி அணிந்து ஆர்ப்பாட்டம், ஒப்பாரிப் போராட்டம், அல்லது ஆளே நடக்காத ரோட்டில் (என் ஹெச் 7 மாதிரி) மனித சங்கிலி ஆகிய போராட்டங்களை திறம்பட நடத்தி விட்டால், மக்கள் விரோதிகள் எல்லாம் பின்னங்கால் பிடறியில் பட ஓடி விட மாட்டார்களா?
4) பகத் சிங் படத்தை போஸ்டரில் போட்டுக் கொண்டு, பார்லிமெண்ட் தொழுவில் பஜனை பாடிக் கொண்டே வர்க்க எதிரிகளைப் பந்தாடி விடலாம், தோழர்!
துரோகிகளை உருவாக்கி அரசு கூலிப்படைகளை உருவாக்கும். நம் தோழர்களை அக்கும்பலே அரசுப் படையுடன் அழிக்கும். அதற்குப் பதிலடி கொடுக்கும்போது மீடியா அரசுடன் சேர்ந்து கொண்டு ‘அப்பாவிகள்’ படுகொலை என்று ஊளையிடும். உடனே ‘பார்த்தீர்களா! தோழர்! இடது தீவிரவாதம் இதுதான்.! காலம் இன்னும் கனியலை தோழர்! (செங்காயா இருக்கும் போல)” எனப் பிதற்றுவது. இந்தப் பித்தலாட்டங்களை ஒழிக்க மக்களை அரசியல்மயமாக்குவதுடன் ஆயுதபாணியாக்க வேண்டும்.
kattabomman
http://www.blogger.com/profile/26954504
//////
அசுரன்
வினவு, மேல் டிசம்பர் 26th, 2008 இல் 19:43 சொன்னார்:
`புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் முகவரி:
அ.முகுந்தன்,
110 / 63, என்.எஸ்.கே சாலை,
கோடம்பாக்கம், சென்னை – 600 024
செல்பேசி – 94448 34519
ம.க.இ.கவின் தோழமை அமைப்பான இந்த தொழிலாளர் அமைப்பின் மாநாட்டு பிரசுரம்தான் சென்னை பல்லாவரத்தில் வினியோகிக்கப்பட்டது. இன்று ( 26.12.08 ) பல்லாவரம் முழுவதும் சி.பி.எம் ரவுடிகளை அம்பலப்படுத்தி சுவரோட்டி ஒட்டப்பட்டது.மிரண்டு போன ரவுடிகள் தங்கள் பெயர் ரிப்பேரானதும் சமரசப்பேச்சு வார்த்தைக்கு வந்தார்கள். பின்பு தோழர்களிடம் மூக்கறுபட்டு சென்றார்கள்.அதிலும் அரசு வேலையிலிருக்கும் சில ரவுடிகள் வழக்கு என்றதும் வேலை போய்விடுமோ என்ற அச்சத்தில் உழலுகிறார்களாம். பல்லாவரம் நகர சி.பி.எம் செயலாளர் தனது செல்வாக்கு கேள்விக்குள்ளாக்கப்படுவதை கண்டு அஞ்சி தூது விட்டு பார்த்திருக்கிறார். இப்போது சட்டப்படி வழக்கை எதிர்கொள்வதற்கு இந்த “வீர்ர்களுக்கு” தெம்பில்லையாம். இணையத்தில் அம்பலமானதால் இன்றைய தீக்கதிர் நாளிதழிலும் அழுது புலம்பியிருக்கிறார்கள். அதில் எமது தோழர்கள் ஈழத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த்தாகவும், இந்த தீவிரவாதிகளை ஒடுக்கவேண்டுமென்பதாகவும் எழுதியிருக்கிறார்கள். ஈழத் தமிழர்களும், ஈழத்தின் துயருக்காக குரல் கொடுக்கும் தமிழகத்து மக்களும் சி.பி.எம் என்ற ஆட்காட்டியை புரிந்து கொள்ளவேண்டும்.
வினவு