பூம் பூம் மாடுகள்,
தஞ்சாவூர் பொம்மைகள்
நாம்…
மனிதர்கள்!
மேற்கூறியது,
தமுஎச கலை இரவு
கட்அவுட்
ஒன்றில்
எழுதப்பட்டிருந்த கவிதை.
கடைசி வரியில் மட்டும்
மாற்றம் செய்து,
கவிதையை
மறுவாசிப்பு செய்து,
வாய்விட்டுப் படிக்கிறார்கள்
மக்கள்.
பூம் பூம் மாடுகள்,
தஞ்சாவூர் பொம்மைகள்
நாம்…
சி.பி.எம் அணிகள்!
…
தொடர்வது
சுயவிளம்பர இடைவேளை!
கலை இரவு என்னும் புதிய வடிவம் தமுஎச தமிழ்கூறு நல்லுலகுக்கு அளித்த கொடை என்று தயக்கமின்றிக் கூறலாம்.
இவ்விளம்பரத்தை உங்களுக்கு வழங்கியது,
தரமான இலக்கியத்திற்கு
இந்திய அரசின் தரச்சான்றிதழ் பெற்ற
ஒரே நிறுவனம்,
உங்கள்
தமுஎச.
…
மீண்டும்
தலைப்புச் செய்திகள்
- கடந்த வாரம் போயஸ் தோட்டத்திற்கு நேரில் சென்று, புரட்சித் தாய் ஜெயலலிதாவிற்கு மலர்க் கொத்த்து வழங்கி, அதிமுக-சி.பி.எம் கூட்டணி அறிவிப்பை வெளியிட்டார் பேராசான் பிரகாஷ் காரத்.
- இந்த வாரம் தமுஎச மாநாட்டில் அதிமுகவிற்கும், சி.பி.எம்மிற்கும் மதச்சார்பின்மை, சேது சமுத்திரத் திட்டம் முதலான சில ‘பிரச்சினைகளில்’ கருத்தொற்றுமை இல்லை என்ற புதிய தத்துவம் 2008-ன் மூலம், மார்க்சிய தத்துவார்த்த துறைக்கு புதிய பங்களிப்பைச் செலுத்தி வரலாற்றில் இடம் பெற்றார் சீத்தாராம் யெச்சூரி.
வாழ்க சுர்ஜீத் நாமம்!
வாழ்க பாசு நாமம்!