Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘புத்ததேவ் பட்டாச்சார்யா’ Category

டாடாவுக்காகவும், சலீம் குருப் என்ற பன்னாட்டு கம்பெனிக்காகவும் நந்திகிராம், சிங்கூரில் ஆளும் போலிக் கம்யூனிஸ்ட்களின் குண்டர் படை ’30க்கும் மேற்பட்ட மக்களை கொன்றும், பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தும்’ தனது பாசிசத்தை வெளிப்படுத்தியது.

தஸ்லீமா நஸ்ரின் விவகாரத்தில் முஸ்லீம் மதவெறியர்களுக்கு பயந்து தனது மதச்சார்பின்மை என்ற கோவனத்தையும் அவிழ்த்து விட்டது.

தற்போது அம்மணமான பின்னும் நாங்கள் மக்களை கொல்லும் பாசிஸ்ட்கள் என தொடர்ந்து அறிவிக்கின்றனர். தேர்தல் பிரச்சாரத்தின் போது பூமி பாதுகாப்பு இயக்கத்தினரை சேர்ந்த பெண்களை ஓட்டுப் போட மறுத்த காரணத்தால் நிர்வாணப்படுத்தி ஓட விட்டு உள்ளனர் இந்த பாசிஸ்டுகள்.

இவ்வாறு நாட்டை மீண்டும் காலனியாக்குவதை செய்து கொண்டே விலைவாசி உயர்வு, 123, புஷ் விவகாரம் போன்றவற்றை கண்டித்து இவர்கள் மக்களை திசைதிருப்புவது தான் இந்த துரோகிகளின் செயல்பாடாக உள்ளது.

மேற்கு வங்கத்தின் ‘மின்வாரியத்தின் தற்காலிக ஊழியர்கள் மாற்று சங்கம் அமைத்து போராடியதை’ மக்கள் கூடும் இடத்தில் சிஐடியு குண்டர் படை சென்று தாக்கி ஒருவர் கொல்லப்பட்டும் பலர் படுகாயம் அடைந்தும் உள்ளனர்.

முக்கிய இடத்தில் மக்கள் முன்னிலையில் இவ்வாறு என்றால் நந்திகிராமில் கேட்கவே தேவையில்லை. இதனை மறுப்பவர்கள் நந்திகிராமில் நடத்திய பாசிசத்தை மறுப்பதில் வியப்பில்லை.

இப்படிப்பட்ட பாசிஸ்டுகளை, ‘மக்கள் முன் அம்பலப்படுத்தாமல் உண்மையான எதிரிகளை’ புரட்சிகர சக்திகள் இனம் காட்ட முடியாது

செய்திவிமர்சனம்

Related News:

 

Read Full Post »

இது தோழர்.இரயாகரனால் எழுதப்பட்டு தமிழரங்கம் என்ற தளத்தில் வெளிவந்திருக்கும் கட்டுரை, தமிழ்மணத்தில் தெரியாத காரணத்தால் இந்த கட்டுரையை இங்கு பதிப்பிக்கிறேன்.
கேடயம்

சந்திப்புக்கு தன்னைத்தவிர ஊரில் உள்ளவன் எல்லாம் கேனயன் என்ற நினைப்பு। நந்திக்கிராம மக்களின் போராட்டத்தை இழிவுபடுத்தி சொச்சைப்படுத்த, சி.பி.ஐ.(எம்) இது போன்ற நிகழ்சிகளை செய்வதில்லை என்று கதை சொல்ல முனைகின்றார். மூலதனத்தின் அரசியல் குண்டர்களான சி.பி.ஐ.(எம்) இன் வக்கிரத்தை, அறிவும் நேர்மையும் தர்க்கம் எதுவுமின்றி போராடும் மக்கள் மீது காறித் துப்புகின்றனர்.

சி।பி।ஐ।(எம்) டாடாயிஸ்டடுகள் சிறப்பு பொருளாதார சட்ட விதிக்கு மாறாக விளை நிலங்களை கையகப்படுத்தவில்லையா? சிங்கூரில் டாடா கார் தொழிற சலைக்கு 997,1 ஏக்கர் நிலத்தை மக்களிடம் இருந்து திருடவில்லையா? இதை எதிர்த்து போராடிய விவசாயிகள் ஒடுக்கப்படவில்லையா? அந்த நிலத்தில் உழைத்த 1320 குத்தகை விவசாயிகள், 3000 நிலமற்ற கூலிகள், இதை அண்டி தொழில் செய்த 10000 பேரின் கதி என்ன? சி.பி.ஐ.(எம்) காரன் மக்கள் வரிப்பணத்தில் மூலதனத்துக்காக திருடிய 120 கோடியில் வாங்கிய நிலத்தை, வெறும் 20 கோடிக்கு டாடாவிடம் கொடுத்த மாமாக்களின் மர்மம் என்ன? இப்படி நிலத்தை சலுகை விலையில் கொடுக்கவில்லையா? இந்த நிலத்துக்கு இதை விட சலுகைகள் பல. ஆட்சியில் உள்ள சி.பி.ஐ.(எம்) காரன், தனது புரட்சியில் அந்த மண்ணில் வாழும் மக்களுக்கு என்ன தான் செய்துள்ளான். மற்றைய மாநிலங்களை விட எதைத்தான் சிறப்பாக செய்துள்ளான்? தான் கொழுத்ததைத் தவிர வேறு எதையுமல்ல. 250 ஏக்கர் மட்டும் தேவைப்பட, ஏன் 1000 ஏக்கரை சி.பி.ஐ.(எம்) பறித்து கொடுத்தது? சி.பி.ஐ.(எம்) குண்டர்கள் மக்களிடம் திருடி கொழுப்பதே புரட்சியாகிவிட்டது.

அடுத்து அதேவழியில் நந்திக்கிராமமும். இச்சிறப்புப் பொருளாதார மண்டலம் 14,500 ஏக்கர் பரப்பளவில் சி.பி.ஐ.(எம்) உருவாக்கியது. இதில் 10,000 ஏக்கர் நிலம் இந்தோனேஷிய சலீம் குழுமத்துக்கும், 4,500 ஏக்கர் நிலம் ருயா குழுமத்துக்குமாக தாரை வார்க்கப்பட இருந்தது. இச்சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காக விளைநிலங்களைப் பறிகொடுக்கப் போகும் கிராமங்களில் ஒன்றுதான் நந்திகிராமம். மக்களின் போராட்டமே இதை தடுத்து நிறுத்தியுள்ளது.

சி.பி.ஐ.(எம்) குண்டர்களும், சந்திப்பும் கூறுவது போல் ‘இது தவிர, நந்திகிராமத்தில், இதுவரை ஒரு துண்டு நிலத்தை கூட அரசு கைப்பற்றவில்லை.” என்பது உண்மையல்ல. மக்கள் போராடி தமது சொந்த உயிரை இழந்து அதைத் தடுத்துள்ளனர். இது தான் புரட்சி. இதற்கு எதிரான வகையில் சி.பி.ஐ.(எம்) குண்டர்கள் புலம்புவது எதிர் புரட்சி.

 

 

 

 

 

 

மக்கள் நடத்திய இந்த நில கையகப்படுத்தும் முயற்சிக்கு எதிரான போராட்டத்தை சி.பி.ஐ.(எம்) குண்டர்களும், சந்திப்பும் தமது எதிர்புரட்சிகர வழியில் எப்படி வருணிக்கினறனர். ‘நந்திகிராமத்தையே கடந்த மூன்று வாரங்களாக தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு, அங்குள்ள சி.பி.ஐ.(எம்) ஆதரவாளர்களை வெளியேற்றிவிட்டு, அபாயகரமான ஆயுதங்களை வைத்துக் கொண்டு, மம்தாவும் – நக்சலிசவாதிகளும் ஆடிய ரவுடித்தனத்திற்குதான் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது” என்கின்றனர். நல்ல வேடிக்கை. ‘இது தவிர, நந்திகிராமத்தில், இதுவரை ஒரு துண்டு நிலத்தை கூட அரசு கைப்பற்றவில்லை.” என்று கூறும் இந்த முட்டாள்கள் தான் இதையும் சொல்லுகின்றனர். சி.பி.ஐ.(எம்) குண்டர்களும், சந்திப்பும் கூறுவது போல், மக்கள் எல்லாம் கேனயன் என்ற நினைப்பு.

“மம்தாவும் – நக்சலிசவாதிகளும் ஆடிய ரவுடித்தனத்திற்குதான் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது” என்றால் அது படுகொலை மூலம் தான . இது சரி என்றால், ‘நந்திகிராமத்தில் நடைபெற்றுள்ள சம்பவத்திற்காக சி.பி.ஐ.(எம்) வருந்துகிறது.” இது என்ன புருடாவா! இதில் எது சரி? எதிர்புரட்சிகர சி.பி.ஐ.(எம்) குண்டர்கள் மக்களின் புரட்சிகர போராட்டத தின் முன்னால் தோற்ற போது, இப்படி அங்குமிங்குமாக சாக்கடை புழுககள் போல் நெளிகின்றனர். இதை அப்படியும் இப்படியும் நெளியவைப்பத்து சந்திப்பின் திருகுதாளமாகும்.

‘சி.பி.ஐ.(எம்) ஆதரவாளர்களை வெளியேற்றிவிட்டு” என்றால் சி.பி.ஐ.(எம்) காரனின் தேவைக்காக நடந்த துப்பாக்கி சூடு அல்லவா! அதைத்தானே இது வெளிப்படுத்துகின்றது. சரி மக்கள் விரோத சி.பி.ஐ.(எம்) காரன் ஏன் அங்கிருந்து ஓடினான்? அதற்கு ஏன் துப்பாக்கி சூட்டை நடத்த வேண்டும்?

இதற்கு சற்று முன்னால் அங்கு என்ன நடந்தது என்று பார்ப்போம்

சோனாசுரா கிராமத்தில் ‘நந்திகிராம நிலப பாதுகாப்பு கமிட்டி” கூட்டம் நடத்துவதை அறிந்து, சி.பி.ஐ.(எம்) குண்டர்கள் ஜனவரி 6ஆம் தேதியன்று அதிகாலையில் அக்கிராமத்தை தாக்கினர். சோனாசுரா கிராமத்துக்கு 250 பேருக்கும் மேலாகத் வெளியில் இருந்து திரண்டு வந்த சி.பி.எம். குண்டர்களே இத்தாக்குதலை நடத்தினர். அக்கிராம விவசாயிகளது வீடுகளின் மீது குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தியதோடு, அலறியடித்துக் கொண்டு தப்பியோடிய மக்கள் மீது நாட்டுத் துப்பாக்கியால் சுட்டனர். இப்பயங்கரவாதத் தாக்குதலில் 6 பேர் கோரமாகக் கொல்லப்பட்டனர். சி.பி.எம். குண்டர்களின் கொலைவெறியாட்டத்துக்கு எதிராக ஜனவரி 8ஆம் நாளன்று எதிர்க்கட்சிகள் நடத்திய மாநிலம் தழுவிய கடையடைப்புப் போராட்டத்தின்போதும் போலீசு தடியடி நடத்தியதோடு, துப்பாக்கிச் சூடு நடத்தி அடக்குமுறை வெறியாட்டம் போட்டது. இப்படி சி.பி.ஐ.(எம்) குண்டர்கள் ரவுடிகளாக அந்த மக்களை தாக்கி கொன்றனர். இந்த மக்கள் விரோத ரவுடிகள் மக்கள் எதிர்ப்பதும , அதில் இருந்த தப்பி ஒடுவதும் இயல்பு.

 

 

 

 

 

 

ஒருவரல்ல, இருவரல்ல, ஆறு பேர் கொலை. அந்த மண்ணில் 15 முறை போலீசு துப்பாக்கிச் சூடு தடியடி, கண்ணீர் புகை வீச்சு, 144 தடையுத்தரவு. எல்லாம் எதற்கு? சி.பி.ஐ.(எம்) குண்டர்களால் கையகப்படுத்த முடியாத அந்த நிலத்துக்காக. அதாவது ‘.

நந்திகிராமத்தில், இதுவரை ஒரு துண்டு நிலத்தை கூட அரசு கைப்பற்றவில்லை.” என்ற உண்மையை பொய்யாக்குவதற்காகத்தான் ‘மார்க்சிஸ்ட்” எம்।பி.யான லக்ஷ்மண் சேத், ஏக்கருக்கு ரூ. 4.3 லட்சம் வரை கொடுக்க அரசு தீர்மானித்துள்ளதாகவும், நந்தி கிராமத்தில் பகுதியளவு நிலம் மட்டுமே கையகப்படுத்தப்படும் என்றும் அறிவித்தார். ஒருபுறம் வன்முறை, மறுபுறம் பணத்தைக் காட்டி விலை பேசுவது என்று மூலதனத்தக்காக புரட்சி செய்கினறனர். சி.பி.ஐ.(எம்) குண்டர்களும் அவர்களின் எடுபிடிகளும். இவையனைத்தையும் செய்துவிட்டு ஊரையும் உலகத்தையும ஏமாற்ற நக்சலைட் அவதூறுகள்.

மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதம் தான் எதிர் வன்முறையாகின்றது. பின் அந்த குண்டர்படைகளினதும் போலீசாரினதும் மனிதாபிமானப் பிரச்சனை பற்றி ஒப்பாரி வைப்பது தொழிலாகிவிட்டது.

அந்த மக்களின் நிலத்தை அபகரிக்க சி.பி.ஐ.(எம்) குண்டர்களுக்கு துணையாக போலீசாரும் கூட்டாகவே களமிறங்கினர். இங்கு ஒரு கேள்வி. ‘மம்தாவும் – நக்சலிசவாதிகளும் ஆடிய ரவுடித்தனத்திற்கு” பதில் தான் இந்த படுகொலை என்கின்றார் சந்திப்பு. நல்ல அரசியல் வேடிக்கை. சரி எதிர்க கட்சி போராடக் கூடாதோ! போராடாமல் இருத்தல் தான் ஜனநாயகமோ! சரி எதிர் கட்சிகள் எங்கு இருந்து உருவாகின்றது. அதே மக்களில் இருந்து தானே. அந்த மக்கள் ஆளும் மூலதனத்தின் எடுபிடிகளுக்கு எதிராக போராடக் கூடாது. மேற்கு வங்கத்தில் கம்யூனிச ஆட்சியா நிலவுகின்றது. அப்பட்டமான மூலதனத்தின் கெடுபிடியான பாசிச ஆட்சியே அங்கு நிலவுகின்றது.

யார் பயங்கரவாதி? யார் எதிர்வினையையும் அது சார்ந்த வன்முறையையும் உற்பத்தி செய்கின்றனர். சி.பி.ஐ.(எம்) காரன் மூலதனத்துக்காக சேவை செய்யும் போது, மக்களின் போராட்டத்தைக் கண்டு மூலதனத்தின் எடுபிடிகள் ஒடுகின்றனர். மக்கள் புரட்சி இப்படித்தான் நடக்கும். மக்களை படுகொலை செய்வதே மூலதனத்தின் ஜனநாயகமாக இருக்கின்றது.

 

 

 

 

 

 

மக்கள் போராடுவதே தவறு என்பதே சந்திப்பின் மைய விளக்கம். மக்களை கொள்ளை அடிப்பதை அனுமதிப்பது தான் சி.பி.ஐ.(எம்) காரனின் புரட்சி. ஜனவரி 6ஆம் திகதி சி.பி.ஐ.(எம்) காரனினால் கொல்லப பட்டவர்கள் யார்? அந்த ஊரில் வாழும் உழைக்கும் மக்கள். சி.பி.ஐ.(எம்)காரன் போலீசார் மூலம் நடத்திய துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டவர்கள் யார்? அவர்களும் மக்கள் தான். ஆயிர ஆயிரமாக திரண்ட மக்கள், எதிர்கட்சியோ, நக்சலைட்டுகளோ அல்ல. சி.பி.ஐ.(எம்) குண்டர்களால் வாழ்வு இழக்கப்பட்ட சாதாரணமான உழைக்கும் மக்கள். இப்படி கொல்லப்படுவது தான், சி.பி.ஐ.(எம்) காரனின் புரட்சி என்பதே சந்திப்பின் தர்க்கம்.

அதை அவரின் கட்சியைச் சோந்த மூலதனத்தின் எடுபிடி குண்டர்கள் ‘சில அரசியல் கட்சிகளும் அங்கே ஆத்திரமூட்டும் செயல்களில் இறங்கியுள்ளன. இவர்கள் யாரும் அந்தப் பகுதியைச் சார்ந்தவர்கள் அல்ல. இவர்களது நடவடிக்கைகளை அக்கிராம மக்கள் எதிர்த்தார்கள்.” என்கின்றனர்.
காயமடைந்த, கொல்லபட்டவர்கள் யார் என்பது உலகம் அறிந்ததே. ஆனால் சி.பி.ஐ.(எம்) குண்டர்களுக்கும் அதன் எடுபிடிகளுக்கும் அது தெரிவதில்லை. வெளியார் என்கின்றனர்.பார்ப்பனிய எடுபிடிகள் வழமையாக கூறுவது போல், பாகிஸ்தானிய முஸ்லீம் கைக் கூலிகளோ!

இதே அளவைக கொண்டே ம.க.இ.க நடத்திய கோக்கோலா எதிர்ப்பு போராட்டம் முதல் அனைத்தையும் துப்பாக்கிச் சூட்டை நடத்தி ஒடுக்கமுடியும் என்பதே, சந்திப்பின் அரசியல் தர்க்கம். சி.பி.ஐ.(எம்) துப்பாக்கி சூட்டை நடத்தலாம் என்றால், ஏன் மற்றவர்கள் அதே காரணத்தை கூறி நடத்த முடியாது?

குஜராத்தில் பார்ப்பனிய மோடி நடத்திய வெறியாட்டமும் இதே காரணத்தைச் சொல்லி நடந்தது, அதை பார்ப்பனிய பாதம் நக்கிகள் நியாயப்படுத்தினர். போராடிய மக்களை, புரட்சிகர மக்களை கொன்று போட்டுவிட்டு, பாசிச கோயபலஸ் பாணியில் விளக்கம் சொல்வதிலும் இந்த குண்டர்கள் மூலதனத் திமிர் வெளிப்படுகின்றது.

நந்திகிராமத்தில் நடைபெற்றுள்ள சம்பவத்திற்காக சி.பி.ஐ.(எம்) வருந்துகிறது.” என்ன வேடிக்கை. நியாயப்படுத்தப்படும் போது, அன்னியர், அது நக்சலைட்டுகளின் சதி என்று புலம்பல். ‘தற்போது, தொழில் வளர்ச்சியை திட்டமிட்டு முடக்க பெரும் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்” என்று அக்கட்சி மூலதனத்துகாக விளக்கம் தருகின்றனர். அக்கட்சியின் எம்.பி.யாகிய லக்ஷ்மண் சேத், நந்திகிராமத்தில் நிலம் கையகப்படுத்த எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை என்று கோயபல்சையே விஞ்சும் வகையில் அண்டப்புளுகை அவிழ்த்துவிடுகின்றார். சி.பி.எம். கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான எச்சூரியும், கட்சியின் அதிகாரபூர்வ நாளேடுகளும் இதுதான் உண்மை என்று திரும்பத் திரும்ப வாந்தி எடுத்தன. இப்படி ஒன்றுக்கொன று முரணாக புலம்பும் இந்த மூலதனத்துக்கு வாலாட்டும் நாய்களுக்கு சூடுசுரணை இருப்பதில்லை.

ஆனால், இது அண்டப்புளுகை விஞ்சும் ஆகாசப்புளுகு என்பதை மே.வங்க நாளேடுகள், லக்ஷ்மண் சேத் கையெழுத்திட்டு அனுப்பிய அறிக்கையையும், ஹால்டியா வளர்ச்சிக் குழுமம் வெளியிட்டுள்ள அறிவிப்பையும் படத்தோடு செய்தியாக வெளியிட்டு நாறடித்தன. அதன் பிறகே மே.வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, ஹால்டியா வளர்ச்சிக் குழுமம் தன்னிச்சையாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும், அதை உடனே ரத்து செய்யுமாறு ஆணையிட்டுள்ளதாகவும் துப்பாக்கி சூடு நடக்க முன்னம் புலம்பினார். ‘நந்தி கிராமத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலப் பணிகள் அதிகாரபூர்வமாக நிறுத்தப்பட்டு விட்டன।” என்கின்றனர். என்ன முரண்பாடு. இவர்கள் செய்வது என்ன?

1. மக்களை ஒடுக்கி அவர்களின் மேல் நடத்துகின்ற வெறியாட்டம்

2 மறுபக்கம் அதை தாம் செய்யவில்லை என்று ஊரையும் உலகத்தையும ஏமாற்றும் வக்கிரம்।

3 செய்ததை நியாயப்படுத்த, அதை மற்றவர்களின் குற்றமாக காட்டும் சூழ்ச்சிகளும், சதிகளும்

4 மூலதனத்துக்காக நாயாக நக்கி உழைப்பதே புரட்சி என்பது இவர்களின் வாழ்க்கை நெறி

மக்களின் எதிரிகளை, எதிர்புரட்சிகர சக்திகளை எந்தவகையில் மக்கள் தண்டிக்க விரும்புகின்றனரோ, அந்த வகையில் சி.பி.ஐ.(எம்) கட்சியை தண்டிப்பார்கள். சந்திப்பின் (5) கேள்விகள் எல்லாம் பிரச்சனையை திசை திருப்புகினற பார்ப்பனிய அரசியல் வித்தைகள்.

குறிப்பு:
1.அரவிந்தன் நீலகண்டன் என்ற நபர் இந்திய மக்களின் கடைந்தெடுத்த எதிரி. உள்ளடக்க ரீதியாக இந்திய அரசியல் அமைப்பு சட்டம கடடமைத்துள்ள அனைத்து மக்கள் விரோத செயற்பாட்டுக்கும் துணை நிற்கும் ஒரு பூணூல். பார்ப்பனிய வழியாக கட்டிப பாதுகாக்கும் மூலதனத்தின் அசலான அடிவருடி. இந்த பூணூல் ‘மார்க்சியமும் அறிவியலும்’ என்ற தலைப்பில், தனது பூணூல் வழியாக ஒரு பதிவைப் போட்டுள்ளது. பார்ப்பனிய மூலதன அரசியல் அமைப்புக்கு பூணூல் அணிந்த குலைக்கும் ஒருவன் அறிவாளியாக, அறிவியலாளனாக இருக்கவே முடியாது. அதுவும் பார்ப்பனியத்தை ஆதரிப்பவனாக இருந்தால், அதன் அறிவு என்பது சதியும் சூழ்ச்சியும் தான் அதன் மூலதனமாகும். விரைவில் தனிப்பதிவு மூலம் அதைப் பார்ப்போம்.

2.புரட்சிகர வன்முறை குறித்தும், புரட்சிகர மனிதாபிமானம் குறித்தும தனிப்பதிவாக பார்க்கவுள்ளோம். வன்முறையை வாழ்க்கையாக, மனிதாபிமானத்துக்கு எதிராக வாழ்வதையே நாகரிகமாக கொண்ட சமூகவிரோத ஓட்டூண்ணிகளை தோலுரிப்பது அவசியமல்லலா!

பி.இரயாகரன்மேலும் சில பதிவுகள்:

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

சி।பி.எம்- இந்துத்துவம், ஒத்தநாகரிகம்.

5 comments:

ஸ்டாலின் said…
test
rajavanaj said…
தோழர்,எதிரிகள் யார் துரோகிகள் யார் என்று புரிந்து கொள்வது இன்றய சூழலில் மிகவும் அவசியமாகிறது. அவ்வகையில் இந்தக் கட்டுரை மிகவும் பயனுள்ள ஒன்று. துரோகிகளும் எதிரிகளும் எப்போதும் கள்ளத்தனமான உறவு கொள்வர் என்பதை சந்திப்பின் தளத்தில் நடக்கும் விவாதங்களில் ஏகாதிபத்தியவாதிகளும் இந்துத்துவ வெறியர்களும் அவரை ஆதரிப்பதில் இருந்தே புரிந்து கொள்ள முடியும்.
தமிழ்மணத்தில் இந்த விவாத சண்டைகளை கவனித்து வரும் வாசகர்களுக்கு நடந்த நிகழ்வுகளின் உண்மையான பக்கத்தை காட்டியுள்ளது இந்தப் பதிவு.வாழ்த்துக்கள்!

நீலகண்டனின் பதிவைப் பொருத்தளவில், அதில் ஏகப்பட்ட தவறுகள் இருக்கிறது. குறிப்பாக மார்க்ஸியம் பற்றிய எந்த ஒரு அடிப்படை அறிவும் இல்லாமல் எழுதப்பட்ட பதிவு அது. தமிழ்மணத்தில் அது நிச்சயம் முறியடிக்கப்பட வேண்டும்

ராஜாவனஜ்

 

ஸ்டாலின் said…
தோழர் ராஜாவனஜ்//சந்திப்பின் தளத்தில் நடக்கும் விவாதங்களில் ஏகாதிபத்தியவாதிகளும் இந்துத்துவ வெறியர்களும் அவரை ஆதரிப்பதில் இருந்தே புரிந்து கொள்ள முடியும்.//’போலி கம்யூனிஸ்டு’ என்று அவர்களை குறிப்பிட்டால் பொத்துக்கொண்டு கோபம் வருகிறது திருவாளர். சந்திப்புக்கு, ஆனால் கம்யூனிசத்தை ஒருவன் அவதூறு செய்யும் போது அவருக்கு கோபம் வரவில்லை இது ஏன் என்று அவர்தான் தனிமையில் உட்கார்ந்து சிந்திக்க வேண்டும். இதைவிட கொடுமை என்னவென்றால் சந்திப்பை குறை சொன்னால் டாலருக்கு கோபம் வந்துவிடும்.தோழமையுடன்
ஸ்டாலின்

eastwind said…
santhipukkaaka
————–இன்னா தலிவா யாரு இன்னா கேட்டாலும் ஒரே
மாரி சொல்லிகினே கீர அரசு பால்ராஜ் கேட்ட
கேள்விக்கு பதிலே சொல்லாம எஸ்கேப்பு ஆயிட்ட.அப்பால
நான் தான் உண்மையான
கம்னிஸ்டு,கம்னிஸ்டுனு வாயி வலிக்க
நீயே கத்திகினுருக்க,
அங்க இன்னாடானா
ஒரு அரை டவுசரு கம்யூனிச்டுகளயும்,
மர்க்சையும் திட்டிக்கினுருக்கான்,
வேலைக்காகாதுன்ரான்,
ஒன்னான்ட இத்த
அன்னிக்கே லெனின் தோழரும் சொல்லிக்கினாரு
ஆனாலும் நீ இத்த கண்டுக்கவே இல்லியே
இன்னா தலிவா மேட்டரு.
ஒன் வாய கொஜ்சம் தொரயேன்
யெல்லாரும் காத்திகினுருக்காங்க
eastwind said…
santhipukku
———–
இன்னா தலிவா யாரு இன்னா கேட்டாலும் ஒரே
மாரி சொல்லிகினே கீர அரசு பால்ராஜ் கேட்ட
கேள்விக்கு பதிலே சொல்லாம எஸ்கேப்பு ஆயிட்ட.அப்பால
நான் தான் உண்மையான
கம்னிஸ்டு,கம்னிஸ்டுனு வாயி வலிக்க
நீயே கத்திகினுருக்க,
அங்க இன்னாடானா
ஒரு r s s அரை டவுசரு கம்யூனிச்டுகளயும்,
மர்க்சையும் திட்டிக்கினுருக்கான்,
வேலைக்காகாதுன்ரான்,
ஒன்னான்ட இத்த
அன்னிக்கே லெனின் தோழரும் சொல்லிக்கினாரு
ஆனாலும் நீ இத்த கண்டுக்கவே இல்லியே
இன்னா தலிவா மேட்டரு.
ஒன் வாய கொஜ்சம் தொரயேன்
யெல்லாரும் காத்திகினுருக்காங்க

Read Full Post »

« Newer Posts - Older Posts »