Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘ஜெயலலிதா’ Category

COMMUNIST PARTY OF INDIA (MUMMYIST)
 
COMMUNIST PARTY OF INDIA (MUMMYIST)

போயஸ் தோட்டத்திற்கு நவம்பர் மாதம் ஐயும் — அதாவது வலதும், டிசம்பர் மாதம் எம்மும் — அதாவது இடதும் விஜயம் செய்தார்கள். ஐக்கு பரதன், தா.பாண்டியன், சி.மகேந்திரன் போன்றோரும், எம்முக்கு பிரகாஷ் காரத்தும்,

 வரதராசனும் தோட்டத்தில் உள்ளேன் ஐயா சொல்லி, அம்மாவுடன் பேசிவிட்டு வந்தார்கள். அதிலும் காரத்துடன் சென்றிருந்த தோழர்கள் புரட்சித் தலைவிக்கு பிடித்த இளம் பச்சைச் சட்டையில் சென்றிருந்தார்களாம்.

அம்மாவுக்கு இணையாக தோழர்கள் அமர்ந்த அந்த நாற்காலியை வாண்டையார், சேதுராமன், சுப்பிரமணிய சுவாமி, அத்வானி, ஜஸ்வந்த் சிங், மோடி, வைகோ முதலானோர் ஏற்கெனவே தேய்த்திருக்கிறார்கள் என்பதால், அதுவும் வரலாற்றுச் சிறப்புமிக்கதுதான். தானைத் தலைவியின் முன் சற்று சங்கோஜத்துடன் பேசிய தோழர்களுக்கு மோடிக்கு கொடுக்கப்பட்ட விருந்து போல வரவேற்பு இல்லையென்றாலும், சந்திப்பு அணுக்கமாகத் தான் நடந்தது. புரட்சித் தலைவிக்கு பிரகாஷ் காரத் கொடுத்த பெரிய பூச்செண்டு படம் எல்லாப் பத்திரிகைகளிலும் இடம் பெற்றன.

அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு மைய அரசு பணிந்ததை ஒரு வருடமாக எதிர்ப்பது போல எதிர்த்து, மிரட்டுவது போல மிரட்டி, எச்சரிப்பது போல எச்சரித்து, அழுவது போல அழுது, இன்னும் பல செய்து பார்த்து, இறுதியில் காங்கிரசு கூட்டணி அரசு, “போடா வெண்ணை” என்று தூக்கி எறிந்ததும் வேறு வழியின்றி ஆதரவை திரும்பப் பெற்றுக் கொண்டார்கள், போலிகள். ஒருவேளை காங்கிரசு அரசு கவிழ்ந்தால், அடுத்த தேர்தலில் என்ன செய்வது என்ற கவலை அவர்களை வாட்டியது. முன்னெச்சரிக்கையாக அடுத்த தேர்தலில் பா.ஜ.க தோற்று, காங்கிரசு வென்றால் மீண்டும் ஆதரவு உண்டு என்பதைத் தோழர்கள் சுற்றி வளைத்து ஒத்துக் கொண்டார்கள். ஆனால், தேர்தலில் கடந்த முறை வெற்றி பெற்ற தொகுதிகளாவது மீண்டும் கிடைக்க வேண்டுமே என்ற கவலை தோழர்களை வாட்டியது.

தோழிகளுக்கும் தோழர்களுக்கும் சகாவான சாதி வெறியன் முத்துராமலிங்கன்

தோழிகளுக்கும் தோழர்களுக்கும் சகாவான தேவர் சாதி வெறியன் முத்துராமலிங்கனுக்கு மாலையிடும் தோழர் ஜெ

இடையில் மூன்றாம் அணி என்று சற்று “பாவ்லா” காட்டினார்கள். “குடியரசுத் தலைவர்’ தேர்தலிலேயே இந்த மூன்றாம் அணி தோன்றிய வேகத்தில் பறந்து விட்டது. முக்கியமாக அம்மா கட்சி தேர்தலைப் புறக்கணிப்பதாக சவடால் அடித்து, பின்னர் பா.ஜ.க.விற்கு வாக்களித்து மூன்றாவது அணியின் தகுதியை உலகுக்கு அறிவித்தது.

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்ட உடனேயே பிரகாஷ் காரத் சண்டமாருதம் செய்து முழங்கிய சேதி என்னவென்றால், காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல், அதிலிருந்து மாநிலக் கட்சிகள் வெளியேற வேண்டுமென்பதாகும். இந்த முழக்கத்தைக் கேட்ட பிறகு தான் முலாயம் போன்ற கட்சிகள் கப்பலில் இடம் பிடித்தனர். அம்மாவும் எவ்வளவோ முயற்சிகள் செய்து பார்த்தும் காங்கிரசு அவ்வளவாக அசைந்து கொடுக்கவில்லை. இதனால் அவர் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதாகச் செய்திகள் அடிபட்டன. தமிழக பா.ஜ.க.வும் இதை வெளிப்படையாக ஒரு கோரிக்கையாக வைத்தும், அம்மாவின் மனதை கரைக்கும் வண்ணம் பல அறிக்கைகளை வெளியிட்டும் நோட்டம் பார்த்தது. அப்போது அம்மா எடுத்த முடிவு என்னவென்றால், தேர்தலுக்கு முன்பு ஒரு கூட்டணி, தேர்தலுக்கு பின்பு வேறு ஒரு கூட்டணி! இப்போது தேர்தலுக்குப் பின்னர்தான் கூட்டணி என்பதையும் கூச்ச நாச்சமின்றி பா.ஜ.க. ஏற்றுக் கொண்டு கச்சேரியை செய்து வருகிறது.

இத்தகைய புரட்சிகரமான தருணத்தில் ஐய்யுக்கும் எம்முக்கும் அடித்தது ஜாக்பாட். ஏற்öகனவே புரட்சித் தலைவியின் இரசிகராக அறியப்பட்ட வலதின் தா.பாண்டியன், எதிர்காலத்தில் அம்மாவுடன் கூட்டணி வைக்கப் போகும் தருணத்தை முன்னறிந்து கருணாநிதியை அம்மா ரேஞ்சுக்கு கண்டித்து அறிக்கை வெளியிட்டு வந்தார். அதனால்தான் இடதுகளை விட அதிவேகத்தில் ஒரு மாதம் முன்னதாகவே அம்மாவைச் சந்தித்து கூட்டணிக்கு அச்சாரம் போட்டார். இது எம்முக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியது. அவர்கள் விஜயகாந்துடன் கூட்டணி வைக்கலாமா என்று ஒரு மயக்கத்தில் இருந்ததால், புரட்சிக் கலைஞரையும் சந்தித்து நோட்டம் பார்த்தார்கள். அதைப் பரிசீலித்து முடிவெடுப்பதற்கு முன்னதாக அம்மாவைச் சந்திக்க வேண்டும் என்று நெருக்கடியை தா.பாண்டியன் உருவாக்கி விட்டார். இதில் தாமதித்தால் ஐயை விட எம்முக்கு ஓரிரு சீட்டுகள் குறைந்து விட்டால் என்ன செய்வது?

தமிழகத்தில் யாருடன் கூட்டணி வைப்பது என்று “மார்க்சிஸ்ட்’ கட்சியின் மாநிலக் குழுவில் ஒத்த கருத்து இல்லையென்பதால், முடிவு எடுக்கும் உரிமை அரசியல் தலைமைக் குழுவிடம் அளிக்கப்பட்டதாம். அரசியல் தலைமைக் குழுவும் அரட்டை கச்சேரி நடத்தி எடுத்த ஒரே முடிவு என்னவென்றால், தேர்தலில் அம்மாவுடன் கூட்டணி வைப்பது என்பதுதான்.

 

அனைத்து இந்திய அய்யர் தி.மு.க‌

அனைத்து இந்திய அய்யர் தி.மு.க‌

இந்த முடிவை கனத்த இதயத்தோடு பிரகாஷ் காரத் மாநிலக் குழுவிடம் தெரிவித்ததாக “நக்கீரன்” எழுதியிருந்தது. இவ்வளவு சென்டிமெண்டோடு சி.பி.எம். பேசுவதற்குக் காரணம் இருக்கிறது. தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து, சென்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளை வென்றது “மார்க்சிஸ்ட்’ கட்சி. இப்போது காங்கிரசோடு வலுவான கூட்டணியாகத் திகழும் தி.மு.க. இந்த உறவை முறித்துக் கொள்வதாக இல்லை. அதனால் சி.பி.எம். சென்றதால் கருணாநிதியொன்றும் கவலைப்படவில்லை. மொத்தத்தில் நான்கு தொகுதிகள் மிச்சம் என்பது அவர் கணக்கு. போலி கம்யூனிஸ்டுகளைப் பொருத்தவரை அந்த நான்கு தொகுதிகளையும் மீண்டும் பெறவேண்டுமென்றால் அ.தி.மு.க.வுடன்தான் கூட்டணி வைக்க வேண்டும்.

ஆக மொத்தம், இரண்டு அல்லது ஒன்றரை சீட்டுக்களுக்காக அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்று சொல்லி விட்டுப் போகவேண்டியது தானே? மாறாக, பயங்கரமான ராஜதந்திர முடிவு எடுத்தது போல, சி.பி.எம் “பில்டப்” கொடுப்பதைத்தான் சகிக்க முடியவில்லை. அதாவது காங்கிரசு, பா.ஜ.க. இரண்டு கட்சிகளையும் போலிகள் எதிர்க்கிறார்களாம். அதனால் மூன்றாவது அணிக்கு வலிமை சேர்க்கும் வண்ணம் பல மாநிலக் கட்சிகளை இழுப்பதுதான் அவர்களது தொலைநோக்கு அரசியலாம். சரி, இருக்கட்டும்.

மதவாதம், காங்கிரசு இரண்டு சக்திகளையும் எதிர்க்கத் துணிந்த போலிகள் அம்மாவை மதவாதமில்லையென்று கருதுகிறார்களா? மதமாற்றத் தடை சட்டம், ஆடுகோழி பலியிடுவதைத் தடை செய்யும் சட்டம், மோடி பதவியேற்பு விழாவில் நேரடியாக கலந்து கொண்டது, சென்னைக்கு மோடி வந்தபோது அழைத்து விருந்து வைத்தது, சேது சமுத்திர திட்டத்திற்கு எதிர்ப்பு — இப்படி பலமுறை அம்மா தான் ஒரு இந்துமதவெறி பாசிஸ்ட் என்று நிரூபித்திருக்கிறார்களே? இன்னும் சொல்லப்போனால், அம்மாவின் இந்துத்வ வேகம் பா.ஜ.க.வை விட அதிகமாகத்தானே இருக்கிறது? எல்லவாற்றுக்கும் மேலாக தேர்தல் முடிந்ததும் அ.தி.மு.க., பா.ஜ.க. பக்கம் சாயும் என்பதை எல்லா பத்திரிகைகளும் எழுதுகின்றன. மூன்றாவது அணி கணிசமாகத் தோல்வியுறும் பட்சத்தில் அம்மா தாமரை யோடு சங்கமிப்பார் என்பதை போலிகளும் மறுக்க முடியாதல்லவா?

 ஊரை அடித்து உலையில் போட்ட கொள்ளைக்காரிகள் ஜெயா&சசி கும்பல்

ஊரை அடித்து உலையில் போட்ட கொள்ளைக்காரிகள் ஜெயா&சசி கும்பல்

அம்மாவின் கணக்கு, தேர்தலின் போது முசுலீம்களின் வாக்குகள் வேண்டும், அதனால் பி.ஜே.பி.யுடன் கூட்டணி கிடையாது. தேர்தலுக்கு பின்னர் பா.ஜ.க.வுடன் கூட்டு வேண்டும், அப்போது போலிகளுடன் கூட்டணி கிடையாது. இப்படி ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை சுருட்டும் ராஜதந்திரத்தில் அம்மா தானே செல்வாக்கு செலுத்துகிறார்? இப்படி மறைமுகமாக பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்குத்தான் போலிகளின் இந்தக் கூட்டணி தந்திரம் உதவுகிறது. ஆயினும், இந்த சந்தர்ப்பவாதத்தை போலிகள் ஒத்துக் கொள்வதில்லை. அவர்களைப் பொருத்தவரை தேர்தலுக்கு பின் காங்கிரசு மற்றும் பா.ஜ.க. இரண்டும் தோல்வியுற்று மூன்றாவது அணி ஆட்சிக்கு வரும் பட்சத்தில், இடதுசாரிகளுக்கு நிறைய எம்.பி.க்கள் வேண்டுமாம். ஆதலால் எந்த எழவுடனும் கூட்டணி வைத்துக் கொண்டு நிறைய சீட்டுக்களை அள்ள வேண்டுமாம்.

இரண்டு சீட்டுக்களுக்காக இல்லாத கொள்கைகளையெல்லாம் கூறி தமது சந்தர்ப்பவாதத்தை வெளிப்படுத்தும் போலிகளிடம், அம்மா கறாராக கூறியிருக்கும் விசயம் என்னவென்றால், மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளராக மாயாவதியை முன்னிறுத்தக் கூடாதாம். இந்த ஒரு விசயமே மூன்றாவது அணியின் வலுவை விளக்கப் போதுமானது. அடுத்து தேர்தலுக்கு பின் மூன்றாவது அணி தோல்வியுற்று காங்கிரசு, பா.ஜ.க. இரண்டுமே சம அளவில் வெற்றி பெற்றால் போலிகள் என்ன செய்வார்கள்? மதவாதத்தை அனுமதிக்க கூடாது என்று காங்கிரசுக்கு ஆதரவு தருவார்கள். அநேகமாக இதுதான் நடக்கப்போகும் உண்மையென்றால், இப்போது ஏன் காங்கிரசுக்கு ஆதரவை விலக்க வேண்டும்? தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி, தேர்தலுக்கு பின்பு சேரத்தான் போகிறார்கள் என்றால் இவர்களது சந்தர்ப்பவாதம் அம்மாவை விஞ்சுகிறதே?

இவ்வளவும் எதற்காக? எல்லாம் இரண்டு சீட்டுக்களுக்காக என்றால் அதை அப்படி ஒத்துக் கொண்டு போகவேண்டியதுதானே? அதை விடுத்து அதற்கு கொள்கை முலாம் பூசவேண்டிய அவசியமென்ன? நாடாளுமன்ற சகதியில் புரண்டு கொண்டே அதை சந்தனமென்று சாதிப்பதற்கு என்னவெல்லாம் செய்கிறார்கள்? நேரடியாகச் சொல்வதென்றால் போலிகளின் காங்கிரசு எதிர்ப்பு, பா.ஜ.க. எதிர்ப்பு இரண்டுமே அப்பட்டமான பொய். ஒன்றை நேரடியாகவும், மற்றொன்றை மறைமுகமாகவும் ஆதரிக்கிறார்கள் என்பதைத்தான் அம்மாவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு போலிகள் உலகுக்கு தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.

 இளநம்பி

புதிய ஜனநாயகம் ஜன 09

Read Full Post »

சி.பி.எம். கட்சியின் கேவலமான அரசியல் செயல்பாடுகள் குறித்து அக்கட்சியிலிருந்து சமீபத்தில் வெளியேறிய தோழர் ஒருவர் என்னுடன் பேசிக் கொண்டிருக்கும்போது, “மீண் கெட்டு அழுகும்போது அதன் தலைப்பகுதியிலிருந்துதான் அழுகத் தொடங்கும் அதேபோல இந்த போலிகம்யூனிஸ்டுகளை அழிவுக்கு இட்டுச்செல்லும் அழுகுனி அரசியலும் அதன் ’தலை’மையிலிருந்தே அழுகத் தொடங்கியிருக்கிறது தோழர்….” என்று அற்புதமாகச் சொன்னார். இத்தனையாண்டுகாலம் அக்கட்சியின் அரசியல் பாதை நேர்மையாக இருக்கும் என்று நம்பி ஏமார்ந்த விரக்தியில் அவர் ஆத்திரத்துடன் வெளிப்படுத்திய கருத்து இது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு பார்ப்பன-இந்துவெறி செய்திகளை விதைக்கும் இந்து நாளேட்டில் அப்பத்திரிக்கையின் ஆசிரியர்குழுவைச் சேர்ந்த மாலினி பார்த்தசாரதி என்பவர் ஈழ அரசியல் போராட்டம் குறித்து சில அவதூறு கருத்துக்களை எழுதியிருந்தார். ஈழ மக்களின் துயருக்காக குரல் கொடுக்கும் அமைப்புகளை தனது பார்ப்பனக் கண்ணோட்டத்தால் கேவலாமகச் சாடியிருந்தார். இதனைக் கண்டித்து பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் கோவையில் அப்பத்திரிக்கையின் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஈரோடு நகரில் அதே அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் அப்பத்திரிக்கைக்கு தீவைத்து கொள்ளுத்தும் போராட்டத்தையும் நடத்தினார்கள்.

உடனே பார்ப்பன அம்பிகள் கையில் முழுமையாக அடைக்கப்பட்டிருக்கும் தமிழக ஒட்டுமொத்த பத்திரிக்கையாளர்கள் அமைப்பும் பெ.தி.க. தோழர்களின் போராட்டத்தை வன்மையாகக் கண்டித்தன. கோவையில் பத்திரிக்கையாளர் கூட்டமைப்பு ஒன்று சேர்ந்து அத்தோழர்கள் ‘பத்திரிக்கா தர்மத்து’க்குத் தடையாக இருப்பதாகவும் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றினார்கள். அவ்வளவுதான். ஆனால், ஈழ அரசியலில் புரட்டுக்களை எழுதி ஈழ மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள் போலிகள் என்றும் சாடி எழுதியிருந்த அப்பத்திர்க்கையினைக் கண்டிக்கத்திராணியற்றுக் கிடந்த போலிகம்யூனிச கழிப்பறையான தீக்கதிர், பெ.தி.க. தோழர்களைக் கண்டித்து இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக தலையங்கமே எழுதியது.

அதே இந்து நாளேட்டில் பார்ப்பன-இந்து பயங்கரவாத கண்ணோட்டத்தோடு எழுதப்பட்ட போது அது குறித்து எந்த கருத்தையும் எதிர்ப்பையும் வெளிக்காட்டாத இந்த போலிகம்யூனிச அம்பிகள் கூடாரம், ஈழ மக்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்புகளை நோக்கி வசைபாடுவதற்கு அந்த பார்ப்பன-இந்துவெறிப் பத்திரிக்கையோடு தோளோடு தோள்நின்றது கடுமையாகக் கண்டிக்கத்த்க்கது. அதே இந்து நாளேட்டின் என்.ராம் அக்கட்சியின் பொலிட்பீரோவைவை விட அதிக அதிகாரம் படைத்தவர்; என்கிற நிலையில் தீக்கதிர் இரண்டு நாளோடு தனது அவதூறுகளை நிறுத்திக் கொண்டதே ஆச்சர்யமான விசயம்தான்.

 

 

 

 

ஈழ அரசியல் குறித்து இந்து பத்திரிக்கையின் நிலைப்பாடு எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டும் அதனை எதிரிகளோடு ஒன்று சேர்த்து ஒதுக்கித்தள்ளிவிடலாம். ஆனால், அந்த பார்ப்பன-இந்துதேசியக் கொழுப்பெடுத்த அவதூறுகளைத் தன் தலையில் சுமந்து கொண்டு இங்கு விஷத்தை விதைக்கத் துணைநிற்கும் துரோகிகளான போலிகளை என்ன செய்வது? போலிகளை இப்படி அரசியல் ரீதியாக ஏதாவது நாம் விமர்சித்து எழுதிவிட்டால் அல்லது பேசிவிட்டால், “மறைமுகத் தலைமை…..” என்று பிதற்றுவது, ஆயுதங்களுடன் வந்து சாமியாடுவது என்று தங்களது இயலாமையைக் கடைவிரிக்கின்றனர்.

இப்போது எமது அமைப்பான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வருகிற 25 ஜனவரி-2009 அன்று நடத்தவிருக்கும் ‘முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்’டிற்காக பிரச்சாரம் செய்து நிதி வசூலித்துக் கொண்டிருந்த தோழர்கள் மீது பேடித்தனமாக கொலைவெறித்தாக்குதல் நடத்திவிட்டு, எமது தோழர்களின் அரசியல் ரீதியிலான எதிர்வினையைத் தாக்குபிடிக்க முடியாமல் பார்ப்பன-இந்துவெறிப் பாசிசப் பத்திர்க்கைகளான தினமலர், தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ்….. போன்ற பயங்கரவாதப் பத்திரிக்கைகளைவிடக் கேவலமாக முழுக்க முழுக்க அவதூறூகளாலான செய்தியை நேற்றைய தீக்கதிரில் வெளியிட்டுள்ளது.

தீக்கதிரில் இப்படி எழுதி கூப்பாடு போடுவதற்கான நெருக்கடியை அவர்களுக்கு உருவாக்கியது நமது வினவு வலைதளம்தான் என்பது தீக்கதிரில் வெளியாகியுள்ள அந்த நாலு கால செய்தியே வெளிப்படுத்துகிறது. “பல்லாவரம் பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம்….” என்று தினமலரிடம் கடன் பெற்ற வார்த்தைகளைக் கொண்டு தனது புனைவைத் தொடங்கியிருக்கிறது அப்பத்திரிக்கை. அதன் தொடர்ச்சியாக ”தனி ஈழத்திற்காக குரல் கொடுத்தார்கள் எனவே நாங்கள் தட்டிக்கேட்டோம். இது குறித்து அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் எழுதியிருக்கிறது.

அங்கு சிபிஎம் குண்டர்களால் தாக்கப்பட்ட எமது தோழர்கள் அருகாமையில் உள்ள திருநீர்மலை, பல்லாவரம் மலை, திரிசூலம் மலை…, இன்னும் ஏரி குளங்களிலெல்லாம் ஆயுதப்பயிற்சி எடுப்பதாகவும் அதனை தீக்கதிரின் ஆசிரியர்குழு ‘லைட்’ அடித்து பார்த்ததாகவும் விவரமாக, இட்டுக்கட்டி கழிந்திருக்கிறது. இதனைப் பார்த்து வெட்கப்பட்டு, சில வருடங்களாக அக்கட்சியில் உறுப்பினராகச் செயல்பட்டதை நினைத்து தலைகுணிந்தவாறு நான் மேற்குறிப்பிட்ட தோழர் என்னிடத்தில் அப்பத்திரிக்கையினைக் கொடுத்தார்.

கருணாநிதி, ஜெயலலிதாவின் மூத்திரத்தைக் குடித்து திளைப்பதற்காக அந்த சந்தர்ப்பவாத பன்றிகள், அக்கட்சியின் நேர்மையான அணிகள் பெரிதும் மதிக்கும் அப்பத்திரிக்கையையே இவ்வளவு கேவல்மாகப் பயன்படுத்துகிற செய்தியை நாம் இன்னும் வீச்சாக அக்கட்சியின் உறுப்பினர்களிடையே கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. அவர்களைக் கடுமையாக அச்சுறுத்தும் புரட்சிகர அரசியலை அக்கட்சியின் நேர்மையான அணிகளிடம் நேரடியாக விரைவாகக் கொண்டு சேர்க்க வேண்டியிருக்கிறது. சேர்ப்போம் அப்போலிகம்யூனிஸ்டுகளின் பிழைப்புவாத அரசியலின் அடித்தளத்தைத் தகர்ப்போம்.

நட்புடன்,
ஏகலைவன்

Read Full Post »