Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘காங்கிரஸ்’ Category

உழைக்கும் மக்களின் கம்யூனிச சின்னத்தை இழிவு படுத்தும் போலி கம்யூனிஸ்டுகளுக்கு என்ன தண்டனை?

உழைக்கும் மக்களின் கம்யூனிச சின்னத்தை இழிவு படுத்தும் போலி கம்யூனிஸ்டுகளுக்கு என்ன தண்டனை?

ராணுவ ஒப்பந்தம் என்ற பெயரில் 123 உள்பட நாட்டையே அடிமையாக்க கூடிய சரத்துகளுடன் அமெரிக்காவுடன் போட்ட ஒப்பந்தத்தை நடைமுறைப் படுத்த ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக வேலை செய்கிறார்கள்.

வெள்ளைக்காரனுங்க ஆரம்பித்த காங்கிரஸ் என்கிற கம்பெனி நாட்டை விற்பதை வெகு விரைவாக செய்துகிட்டு இருக்கார்கள். பா.ஜ.க என்கிற மதவெறி கட்சி இதையே சொல்லி மீண்டும் ஆட்சியை பிடிக்க தயாராகி வருகிறார்கள். எதுக்கு இதே பணியை தொடரந்து செய்யத்தான்.

‘என்ரான்’ என்கிற கொள்ளைக்காரனை கொண்டுவருவதற்கு இந்த இரண்டு பேரும் சேர்ந்தே வேலை செய்ததை திரும்பி பார்த்தால் புரியும். அன்றைக்கு நரசிம்ம ராவ், அலுவாலியா, அடுத்து வந்த வாஜ்பாய், பால்தாக்ரே என்ற அடிவருடி லிஸ்டே என்ரானுக்கு வக்காலத்து வாங்கியது. குறிப்பாக இன்றைக்கு 123 யினால் ஆபத்து இல்லை என கூட்டம் போட்டு திரிகிற கார்த்திக் சிதம்பரம் என்கிற புதிய அடிமையின் அப்பா சிதம்பரம் தான் என்ரானின் வழக்கிலாக இருந்தவர்.

அடுத்து போலி கம்யூனிஸ்டுகள்…கேட்கவே வேண்டாம்…அப்பட்டமாக எதிரியாக மாறி ஆளும் வர்க்கத்துக்கு வேலை செய்கிறார்கள். 2 வருஷமாக ஒப்ப்ந்தத்தை பற்றி வாய்திறக்காமல் இப்ப எதிர்க்கிற மாதிரி நடிச்சுட்டு…அடுத்து கூட்டு ராணுவ நடவடிக்கையினை எதிர்க்க கூட்டம் போட்டு கொண்டு இருக்கிறாரகள். இப்படி கம்யூனிஸ்டு பெயரில் ஆளும் வர்க்க அடியாள் வேலை செய்கிறதுக்கு ஒரு கட்சி இந்தியாவில….இப்ப மட்டுமா…போலி சுதந்திர காலத்துல இருந்தே காங்கிரஸ் க்கு வாலாக செயல்பட்டவர்கள் ஆயிற்றே.

கூட்டு குழுவின் முடிவினை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று கபில்சிபில் சொல்ல போலிகள் அப்படியெல்லாம் கிடையாது என்று இவர்களாகவே சமாதானம் சொல்லிக் கொள்கிறார்கள்.

123 ஒப்ப்ந்தமா? நிர்பந்தமா? என்று வெளியீடு போட்டு மக்களை குழப்புகிறாரகள். இவர்கள் அயோக்கியத்தனத்தை மூடி மறைக்க எப்படியெல்லாம் வித்தை காட்டுகிறார்கள் பாருங்க.

சரி விஷயத்துக்கு வருவோம்…அணுசக்தி ஒப்பந்தம் என்பது நாட்டை அடிமையாக்க கூடிய பல சரத்து இருக்கு, தற்போது வெறும் 3 சதவீதம் அணுசக்தி மூலம் கிடைக்கும் மின்சாரத்தை 7 சதவீதம் என்று 2020 ல் மாற்ற 5 லட்சம் கோடியினை போடப்போறேன் என்பது என அனைத்தையும் விட்டுட்டு பாதுகாப்பு என்கிற ஒரு விஷய்த்தை பார்க்கலாம்.

சுனாமி வந்தப்ப பார்த்தோமானால் 10 நாட்களுக்கு பிணத்தை கூட அப்புறப்படுத்த வக்கில்லாமல் இருந்தது அரசு.

  • படிப்பறிவு அற்ற மக்களுக்கு
  • பாதுகாப்பு பற்றி ஒன்றும் தெரியாத மக்களுக்கு

இவர்கள் அதிகப்படிய கொண்டு வர இருக்கும் அணுசக்தி உலைகள் என்பது நாளை விபத்துகுள்ளானால் என்ன நடக்கும் என்பதற்கு ஒரு உதாரணம் கீழே உள்ளது. இது கூட நாங்கள் சொல்லவில்லை, இப்படி நாட்டை மறுகாலனியாக்குவதற்கு தோல் கொடுத்து வரும் போலிக் கம்யூனிஸ்டுகளின் இதழ் ஒன்றில் தானுங்க இந்த செய்தி வந்துள்ளது.

 கோபா

Related:..
அமெரிக்க அடிமை நாய் மன்மோகன் வழங்கும் 123 அல்லது அடிமை சாசனம் !!
.123 ஒப்பந்தமும் போலி கம்யூனிஸ்டுகளின் நீலிக் கண்ணீரும் !..
60 ஆண்டு கால சுதந்திரம் யாருடைய நலன்களுக்காக பயன்பட்டு இருக்கிறது !!
மலபார் பன்னாட்டு கப்பல் பயிற்சியும் திரிபுவாதி சந்திப்பின் பித்தலாட்ட புரட்சியும்

Read Full Post »

்த வாரம் ஞாயிற்றுக் கிழமை CPI தலைவர் தா. பாண்டியன் ஒரு கூட்டத்தில் விருந்தினராக கலந்து கொண்டு மேடையில் ஏறியிருந்தார். அதிலென்ன சிறப்பு இருந்துவிடப் போகிறது, அவர்தான் தினப்படிக்கு பல கூட்டங்களில் கலந்து கொள்வாரே என்றால், இந்த கூட்டத்தில் இன்னும் இருவர் இவருடன் இணைந்து கொண்டார்கள். ஒருவர் டெரரிஸ்ட் கட்சியான பாஜகவைச் சேர்ந்த திருநாவுக்கரசு, இன்னொருவர் காங்கிரஸ் தங்கபாலு.

எங்கே இந்த சம்பவத்தை வைத்து கிண்டி கிழங்கு எடுத்து விடுவார்களோ என்று பயந்து போன தா. பாண்டியன் ஒரு சல்ஜாப்பு வேறு சொன்னார். அதாவது இவரது இரண்டு எதிரிகளுடன் இவரை ஒன்றாக மேடையேற்றிவிட்டார்கள் என்று மேடையிலேயே அறிவித்தார். அப்படி மேடை ஏறியதற்க்கு காரணம் அது ஒரு கல்வி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி என்பதால்தான் என்றும் கூறினார். அடடா என்னவொரு கொள்கை குன்றாக இருக்கிறார் இந்த அரிதில் வந்த பெருந்தலைவர்.

இது ஒரு கல்வி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி என்பதால்தான் சாதி சங்க கூட்டமாக இருந்தும் கலந்து கொண்டேன் என்றும் கூறினார். அட சாதி சங்க கூட்டம் வேறயா. அப்படி என்ன கல்வி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி என்றால், அகமுடையார் சாதி சங்க கல்வி நிறுவன கூட்டம் அது. அகமுடையர் என்பது மூவேந்தர் தேவர் சாதிப் பிரிவில் ஒரு பிரிவாக உள்ளது.

CPI அவ்வளவு நெட்ட நெடுமரமான கொள்கை சூரர் கட்சி என்றால் சாதி சங்க விழாவுக்கு அதுவும் பாஜக பயங்கரவாதி கலந்து கொள்ளும் விழாவுக்கு என்னை அழைப்பதா என்று ரத்தக் கொதிப்புடன் குமுறி இவர் மறுத்திருக்க வேண்டுமே. சாதி சங்க கும்பல் இவரை அனுகுகிறது என்றால் ஏற்கனவே அப்படியொரு அனுபவம், இவருடன் தொடர்பு இல்லாமலேயா அனுகுகிறார்கள்? உண்மையில், சாதி சங்க கும்பல் அணுகியவுடனே அவர் எல்லாம் வல்ல ஏசு கிருத்துவிற்கு நன்றி தெரிவித்திருந்திருப்பார், அதாவது சோதனையிலும் ஒரு நல்லது வைத்திருக்கிறான் ஆண்டவன், அதனால்தான் இதனை ஒரு கல்வி சம்பந்தப்பட்ட விழாவாக இருக்க செய்து CPIயின் மானத்தை காப்பாற்ற ஒரு கோமணத்துண்டை ரெடி செய்துள்ளான் என்று. (ராஜீவ் காந்தியை வெடிக்க செய்த அந்த நிகழ்வில் இவரும் படுகாயமடைந்தார். இவரது ஆம்புலன்ஸ் ஒரு கிருத்துவ தேவாலயத்தை கடந்த போது அதனையொட்டிய தனது உணர்வுகளை தனது புத்தகம் ஒன்றில் தா. பாண்டியன் எழுதியிருக்கிறார்).

CPIயின் இன்றைய எதிரிகளான பாஜக, காங்கிரஸ் கலந்து கொள்வது மற்றும் இது ஒரு தேவர் சாதி சங்க கூட்டம் என்ற அத்தனை எதிர் நிலைகளையும் கடந்து இந்த விழாவில் கலந்து கொள்வதற்க்கு காரணம் கல்வி என்று இவர் கதை விட்டாலும், நமது கண்களுக்கு சாதி வோட்டு பொறுக்கும் மொள்ளமாறித்தனம்தான் தெரிகிறது. இப்படி சாதி வோட்டு பொறுக்க இவர்களின் அண்ணன் CPM செய்துள்ள இதே பொன்ற மொள்ளமாறித்தனங்களுக்கு இந்த லிங்கு கிளிக்குங்கள்.

இன்றைக்கு காங்கிரஸை எதிரி என்று சொல்லும் இவர்கள் இதே வாயால் நேற்று அதிமுகவை எதிரி என்று சொன்னார்கள். அதுவும் எப்படிப்பட்ட எதிரி என்பதை அந்த சமயத்தில் அவர்கள் வெளியிட்டிருந்த சிறு கையேட்டில் காணக் கிடைக்கிறது:

“மத நல்லிணக்கத்திற்கு பெயர் பெற்ற தமிழகத்தை ஆளும் செல்வி ஜெயலலிதா அம்மையார் இன்று சங் பரிவாரங்களின் ஊதுகுழலாக மாறியுள்ளார்”

“இனப் படுகொலைக்கு பின்னரும் நரேந்திர மோடி முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட ஒரே முதல்வர் செல்வி ஜெயலலிதாவாகும்”

“இது பிஜேபிக்கும், அதிமுகவுக்கும் இடையே உள்ள உறவை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதாக அமைந்தது”

(ஆதாரம்: இந்தியா: எந்த திசையில்? ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு வாக்கு கேட்க்கும் CPIயின் சிறு கையேடு)

அய்யா CPI பாண்டியன், நீங்க உங்க லெவலுக்கு திருநாவுக்கரசுடன் சாதி சங்க மேடையில ஒன்னா இருக்க முடியும்னா, கொம்மா பஜாரி ஜெயலலிதா அவுங்க லெவலுக்கு மோடியோட விழாவுக்கு போறதுல என்ன தப்புன்னு இப்போ கேள்வி எழுப்ப வேண்டிய அவசியம் எமக்கு எழவில்லை. ஏனேனில் அதான் ஜெயலலிதாவும், CPIயும் கூட்டணி சேர போறாங்கள்ள. ஜெயலலிதாதான் இனிமே மதசார்பற்ற மூன்றாம் அணியில் ஒருவராக தீடிர் மாற்றம் அடைஞ்சுட்டாருல்ல. அப்போ சங் பரிவார ஊதுகுழல்… அது திருநெல்வேலி பக்கம் திருகோணமலை பக்கம் புதைஞ்சு கிடக்கு.

அடப்பாவிகளா உங்க வோட்டு பொறுக்கித் தனத்துக்கு ஒரு அளவே இல்லையா? நேத்து வரைக்கும் அந்த அக்கா ஜெயலலிதா சங் பரிவார ஊதுகுழலாம் என்றால், இன்னைக்கு அது என்ன பீச்சாங்குழலா.

போன வருசம் இந்து பயங்கரவாத அபாயம் பிரதானமானதுன்னு சொல்லி காங்கிரஸு கும்பலிடம் சோரம் போனீர்கள். இந்த வருசம் ஏகாதிபத்திய பொருளாதார பயங்கரவாதம் அபாயமானது என்று சொல்லி சங் பரிவார பினாமியான ஜெயலலிதாவுடன் சோரம் போகிறீர்கள். எப்போதுமே சாதி பார்த்துதான் வேட்பு மனு தாக்கல் செய்து சோரம் போகிறீர்கள். தூ.. இந்த பொழப்புக்கு தூக்கு மாட்டி சாகலாம் என்று நீங்கள் ஆவேசப்படுவதற்க்கு எந்த அடிப்படையும் இல்லை. நியாயமாக உங்க கட்சியில் இருக்கிற கம்யுனிசத்தை விரும்பும் அணிகள்தான் இந்த வசனத்தைச் தமக்கு தாமே சொல்லிக் கொள்ள வேண்டும்.

சுரன்

3 பின்னூட்டங்கள்:

அர டிக்கெட்டு ! said…
//அடப்பாவிகளா உங்க வோட்டு பொறுக்கித் தனத்துக்கு ஒரு அளவே இல்லையா? நேத்து வரைக்கும் அந்த அக்கா ஜெயலலிதா சங் பரிவார ஊதுகுழலாம் என்றால், இன்னைக்கு அது என்ன பீச்சாங்குழலா..//
blink blink காலிங்க சந்திப்பு ஃபார் ரிப்ளை over
kalagam said…
“தூ.. இந்த பொழப்புக்கு தூக்கு மாட்டி சாகலாம் என்று நீங்கள் ஆவேசப்படுவதற்க்கு எந்த அடிப்படையும் இல்லை. நியாயமாக உங்க கட்சியில் இருக்கிற கம்யுனிசத்தை விரும்பும் அணிகள்தான் இந்த வசனத்தைச் தமக்கு தாமே சொல்லிக் கொள்ள வேண்டும்.”புஷ்க்காவது கொஞ்சம் கோபம் வந்தது, பாண்டி & கோ க்கு சூடு சொரணை அப்படீன்னு சொல்லிப்பாருங்க “அதுவா சாப்பிட நல்லாயிருக்குமா எங்க கிடைக்கும்” என விசாரிப்பார்கள்”சும்மா தான சொன்னீங்க சி பி ஐ யில புரட்சிகர அணியின்னு”கலகம்

http://kalagam.wordpress.com/

அசுரன் said…
@@@
“சும்மா தான சொன்னீங்க சி பி ஐ யில புரட்சிகர அணியின்னு”
@@@No Kalagam, There are realy few good communist Loving people are there in CPI. The question of whether they are revolutionary or not is debatable :-)Half Ticket!,Santhippu and Co gumbal is bankrupt and they are underground right now. 😉

Asuran

Read Full Post »

« Newer Posts - Older Posts »