Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘கவிதை’ Category

saami-copyஓம் மார்க்சிஸ்ட்டாய நமக
ஓம் பாஸிஸ்டாய  நமக
ஓம்  பொறுக்கித்தின்னுவோம் நமக
ஓம் நமக ஓம் நமக ஓம் நமக
ஓம் நமக ஓம் நமக ஓம் நமக

அவனின்றி அணுவும் அசையாது
சிபிஎம் இன்றி அவனும் அசைய
மாட்டான்,அசைவுகள் காத்து
கிடக்கின்றன பொலீட்பீரோவின்
பதில்களுக்காக……….

ஊணக்கண்ணுக்கு தான் நான்முகம்
ஞானக்கண்ணுக்கோ நான்காயிர
முகங்கள்,

முகங்கள்
அதிகரிக்கலாம் வரத்துகளின்
எண்ணிக்கைக்கு ஏற்ப…

நாயையும் முதல்வராகும்
பேயையும் பிரதமராக்கும்
சூட்சுமம்  தேடித்தேடிதேடலாம்
கடலளவு துரோகத்தில்
கையளவு பருகினால் போதும்…

அன்று -தசாவதாரங்கள் போதாதென
ஆழ்வார்களாக கடவுளர்கள்
அவதரிக்க-இன்று கலியுகம்
பத்தவதாரங்கள் பத்தாதென
பாரயிரம் பாடிவருகின்றனர் போலிகள்….

காந்தியிசம் டாங்கேயிசம்
ரணதிவேயிசம்  கல்யாணிசம்
சோதியிசம் புத்ததேவிசம்
புடலங்காயிசம் -ஆயிரம்
இசங்கள் வந்தாலும்
பரம்பிரம்மம்
ஒன்றே……

ஞானத்தை தேடி திருமலை
பழனி,சபரிமலை
கோயில்
கோயிலாய் அலைவோரே
கோடிகோடியாய் கோட்டினாலும்
சொர்க்கத்துக்கு கடவு சீட்டு
சீபீஎம் உறுப்பினர் சீடு….

வர்க்கமென்ன வர்க்கம்
வாடத முகமுண்டு
யாரையும் வளைக்கும் திறனுண்டு
அதற்கு மார்க்சிஸ்டு என்றோர் பெயருண்டு
நரியை பரியாக்கியவன்
சிவனெனில்  யானையை
எறும்பாக மாற்ற மந்திரம்
ஓதிக்கொண்டிருக்கிறார்
தலைமை பூசாரி பிரம்மசிறீ காரட்ஜீ….

சாதுகடவுளென நினைத்தாயோ

அற்பனே நக்சல்பரி
நந்திகிராம்,காரப்பட்டென
தேவையெனில் ஆங்கார தரிசனமும்
உண்டு

சோதிபாசு, நாயனார்,நம்பூதிரி
சுர்ஜிட்,டாங்கே என ஆயிரம்
பூசாரி வந்தாலும்
மாறாத துரோகத்துக்கு
காரணம் கண்டறிந்தாயோ
புழுவே அதுதான் பிரம்மம்
பரப்பிரம்மம்
இன்னும் புரியவில்லையா
புரியும் படி
செப்புகின்றேன்

அதுதான் சி.பி.எம்.

ஒரு பதில் “பரப்பிரம்மம்” க்கு;

  1. சூப்பர் ஐயர் சொல்வதென்னவென்றால்:
    9:10 பிற்பகல் இல் ஜனவரி 6, 2009 சூப்பரான கவிதை!

    ஆமா இத்து போன விடுதலை (போலி), சந்திப்பு, சிபிஎம் காரன் எவனும் வர்லீயா?

    ஏண்டா குடிகார விடுதலை இங்க மட்டும் ஏண்டா வர மாட்டிக்கிற?!!!!!!

    பயமா இக்குதா?????

    சூப்பர் ஐயர் & கோ

Read Full Post »

தமுஎச கவிதை

நவீன சீன இறக்குமதி கம்யூனிஸ்டு பொம்மைகள்

பூம் பூம் மாடுகள்,
தஞ்சாவூர் பொம்மைகள்
நாம்…
மனிதர்கள்!

மேற்கூறியது,
தமுஎச கலை இரவு
கட்அவுட்
ஒன்றில்
எழுதப்பட்டிருந்த கவிதை.
கடைசி வரியில் மட்டும்
மாற்றம் செய்து,
கவிதையை
மறுவாசிப்பு செய்து,
வாய்விட்டுப் படிக்கிறார்கள்
மக்கள்.

பூம் பூம் மாடுகள்,
தஞ்சாவூர் பொம்மைகள்
நாம்…
சி.பி.எம் அணிகள்!


தொடர்வது
சுயவிளம்பர இடைவேளை!

கலை இரவு என்னும் புதிய வடிவம் தமுஎச தமிழ்கூறு நல்லுலகுக்கு அளித்த கொடை என்று தயக்கமின்றிக் கூறலாம்.

இவ்விளம்பரத்தை உங்களுக்கு வழங்கியது,
தரமான இலக்கியத்திற்கு
இந்திய அரசின் தரச்சான்றிதழ் பெற்ற
ஒரே நிறுவனம்,
உங்கள்
தமுஎச.

மீண்டும்
தலைப்புச் செய்திகள்

  • கடந்த வாரம் போயஸ் தோட்டத்திற்கு நேரில் சென்று, புரட்சித் தாய் ஜெயலலிதாவிற்கு மலர்க் கொத்த்து வழங்கி, அதிமுக-சி.பி.எம் கூட்டணி அறிவிப்பை வெளியிட்டார் பேராசான் பிரகாஷ் காரத்.
  • இந்த வாரம் தமுஎச மாநாட்டில் அதிமுகவிற்கும், சி.பி.எம்மிற்கும் மதச்சார்பின்மை, சேது சமுத்திரத் திட்டம் முதலான சில ‘பிரச்சினைகளில்’ கருத்தொற்றுமை இல்லை என்ற புதிய தத்துவம் 2008-ன் மூலம், மார்க்சிய தத்துவார்த்த துறைக்கு புதிய பங்களிப்பைச் செலுத்தி வரலாற்றில் இடம் பெற்றார் சீத்தாராம் யெச்சூரி.

வாழ்க சுர்ஜீத் நாமம்!
வாழ்க பாசு நாமம்!

போராட்டம்

Read Full Post »