தஸ்லீமா நஸ்ரின் விவகாரத்தில் முஸ்லீம் மதவெறியர்களுக்கு பயந்து தனது மதச்சார்பின்மை என்ற கோவனத்தையும் அவிழ்த்து விட்டது.
தற்போது அம்மணமான பின்னும் நாங்கள் மக்களை கொல்லும் பாசிஸ்ட்கள் என தொடர்ந்து அறிவிக்கின்றனர். தேர்தல் பிரச்சாரத்தின் போது பூமி பாதுகாப்பு இயக்கத்தினரை சேர்ந்த பெண்களை ஓட்டுப் போட மறுத்த காரணத்தால் நிர்வாணப்படுத்தி ஓட விட்டு உள்ளனர் இந்த பாசிஸ்டுகள்.
இவ்வாறு நாட்டை மீண்டும் காலனியாக்குவதை செய்து கொண்டே விலைவாசி உயர்வு, 123, புஷ் விவகாரம் போன்றவற்றை கண்டித்து இவர்கள் மக்களை திசைதிருப்புவது தான் இந்த துரோகிகளின் செயல்பாடாக உள்ளது.
மேற்கு வங்கத்தின் ‘மின்வாரியத்தின் தற்காலிக ஊழியர்கள் மாற்று சங்கம் அமைத்து போராடியதை’ மக்கள் கூடும் இடத்தில் சிஐடியு குண்டர் படை சென்று தாக்கி ஒருவர் கொல்லப்பட்டும் பலர் படுகாயம் அடைந்தும் உள்ளனர்.
முக்கிய இடத்தில் மக்கள் முன்னிலையில் இவ்வாறு என்றால் நந்திகிராமில் கேட்கவே தேவையில்லை. இதனை மறுப்பவர்கள் நந்திகிராமில் நடத்திய பாசிசத்தை மறுப்பதில் வியப்பில்லை.
இப்படிப்பட்ட பாசிஸ்டுகளை, ‘மக்கள் முன் அம்பலப்படுத்தாமல் உண்மையான எதிரிகளை’ புரட்சிகர சக்திகள் இனம் காட்ட முடியாது
SEZயை எதிர்த்த பார்வேர்ட் ப்ளாக் கட்சியினர் ஐந்து பேர் CPM அரசால் சுட்டு சாகடிக்கப்பட்டனர்
கம்யுனிஸ்டு பார்ட்டி ஆப்பு இந்தியா – CPM வெறி நாயும்! CPIயும்!
மறுமொழியொன்றை இடுங்கள்