Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for திசெம்பர் 31st, 2008

“ஏன் பாஸ் இத்தன பேர் சேர்ந்து அடிச்சாங்களே, நீங்க திருப்பி ஒரு அடி கூட அடிக்கலையா” ” அடிக்கும்போது அந்தக் கூட்டத்துல ஒருத்தன் சொன்னான்… எவ்ளோ அடிச்சாலும் தாங்குறானே இவன் ரொம்ப நல்லவன்டான்னு , அவ்வ்வ்வ்வ்வ்”
-வைகைப் புயல் வடிவேலு

22.9.08 சென்னை போரூரில் தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பதினோராவது மாநாட்டுப் பிரச்சாரத் துவக்க விழா மற்றும் பெரியாரின் பிறந்த நாள் விழாக் கூட்டத்தின் போது இந்து முன்னணிக் குண்டர்கள் புகுந்து தாக்கினர். கற்களை வீசியும், நாற்காலிகளை எரிந்தும் நடத்தப்பட்ட தாக்குதலில் பல தோழர்கள் காயமடைந்தனர். கூட்டமும் அத்தோடு முடிந்தது. கலை இலக்கியவாதிகளின் கூட்டமென்பதாலோ என்னவோ யாரும் திருப்பியடிக்கவில்லை.

இதைக் கண்டித்து த.மு.எ.ச 30.9.08 செவ்வாய்க்கிழமையன்று அதே இடத்தில் ஒரு கூட்டத்தை நடத்தியது. கூட்டத்தின் தலைப்பு “மதவெறித் தாக்குதலுக்கு எதிராக….”. கண்டனக் கூட்டத்தைக்கூட இந்து மதவெறிக்கு எதிராக என்று போடுவதற்கு சி.பி.எம் தோழர்கள் தயங்கும் போது இந்து முன்னணி நிச்சயமாகக் கொஞ்சிக் குலாவும் என எதிர்பார்க்கமுடியுமா?

 

கூட்டத்தில் பேசியவர்கள் சொன்னதை பார்க்கும் போது முந்தைய கூட்டத்தில் அப்படி ஒன்றும் இந்து மதவெறியைத் தாக்கி தோழர்கள் பேசியதாகத் தெரியவில்லை. கலை நிகழ்ச்சிகள் முடிந்து பேசும்போது ஒருவர் நமது ஊரில் மாரல் (moral) போலீஸ் ஒருவர் இருக்கிறார்; அவரால் தசாவதாரம் படம் தயாரிப்பு முடிவதற்குள் பிரச்சினை ஏற்பட்டது என்றாராம். உடனே பார்வையாளர்களில் ஒருவர் ராம கோபாலன் என்று சொன்னாராம். உடனே இந்து முன்னணியினர் தாக்கத் தொடங்கினராம். ஒருவேளை உண்மையிலேயே இந்துமதவெறியைத் விமரிசித்திருந்தால்… பாவம் அந்த அப்பாவிப் பிள்ளைகளை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.
(படிக்க-http://santhipu.blogspot.com/2008/09/11-130-22-2008.html)

நமக்குத் தெரிந்து சி.பி.எம் கட்சியினர் பல இடங்களில் இந்து மதவெறியர்களிடமிருந்து அடி வாங்கியிருக்கின்றனர். ஒவ்வொரு முறையும் கண்டனக் கூட்டத்தைத்தான் நடத்தினார்களே ஒழிய பதில் தாக்குதல் செய்யவில்லை. என்ன இருந்தாலும் ஜனநாயகவாதிகளாயிற்றே! சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை பாரதி இல்லத்தில் த.மு.எ.ச கூட்டத்தில் இந்து முன்னணியினர் உள்ளே புகுந்து அடித்தனர். அதற்கும் திருவல்லிக்கேணியில் இதே போலதொரு மாபெரும் கண்டனக் கூட்டம் நடந்தது. கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல் என்ற காட்டுமிராண்டிக்கால செய்கைகளெல்லாம் ஜென்டில்மென் சி.பி.எம் தோழர்கள் நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள். ஆடு பசித்தாலும் கறி தின்னாதே!

எல்லாவற்றுக்கும் மேல் டெல்லி சி.பி.எம் தலைமையகத்தையே பா.ஜ.க தொண்டர்கள் சூறையாடிய போது எச்சூரி கூட இப்படித்தான் பாசிஸ்ட்டுகள் நடந்து கொள்வார்கள் என்று சான்றிதழ் அளித்தார். பாசிஸ்ட்டுகள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதா பிரச்சினை? அவர்களை எப்படி எதிர் கொள்வது என்பதுதானே விசயம் என்று நாம் கேட்டால் ” இல்லை தோழர் நாமும் பாசிஸ்ட்டுகள் மாதிரி செய்ய முடியாது, இது ஜனநாயக நாடு, எல்லாம் ஜனநாயக முறைப்படிதான் செய்ய முடியும்” என்று கழுத்து அறுபடும் வண்ணம் வகுப்பெடுப்பார்கள்.

போகட்டும். நாம் மீண்டும் கண்டனக் கூட்டத்திற்கு திரும்புவோம். கூட்டத்தில் பத்திரிகையாளர்கள், பிற அமைப்புத் தலைவர்கள், ஓவியர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் என்று பலர் பேசினர். இவ்வளவு பேர் நம்மளைப் பற்றி பேசுகிறார்களே என்று ஒரு வாரத்துக்கு முந்தி தாக்குதல் நடத்திய இந்து முன்னணிக்காரர்கள் தங்களை மாபெரும் ஹீரோக்களாக கருதியிருக்கக்கூடும். வீடு புகுந்து நாலு சாத்து சாத்த வேண்டிய சில்லறைகளுக்கு ஜனநாயகத்தின் பெயரால் அர்ச்சனை! இதுகூடப் பரவாயில்லை. அடிபட்டு தையல் போட்ட தோழர்களுக்கெல்லாம் துண்டுகளை பொன்னாடையாகப் போட்டு பாராட்டினார்களே அதைத்தான் கடுகளவு கூட சகிக்க முடியவில்லை. திருப்பி அடித்திருந்தால் கூட போராளிகள் என்று கவுரவிக்கலாம். அடிபட்டதையே சிலாகிப்பதைப் பார்க்கும் போது அனாமதேயங்களிடம் அடிவாங்கும் வடிவேலுவே மேல் என்று தோன்றுகிறது.

நக்கீரன் கோபால் பேசும் போது குஜராத்தை நரவேட்டையாடிய மோடி என்ற பேடியை வீட்டிற்கு வரவேற்று நாற்பது வகை உணவுகளைக் கொடுத்து சீராட்டுவதற்கு போயஸ் தோட்டம் இருக்கும் போது இவர்கள் தாக்காமல் என்ன செய்வார்கள் என்றார். இந்த இடத்தில் தோழர்கள் கண்டிப்பாக நெளிந்திருக்க வேண்டும். நாம் மேடைக்கு சற்றுத் தொலைவில் இருந்ததால் நெளிவு சுளிவுகளை தரிசிக்கும் பாக்கியம் கிட்டவில்லை. தி.மு.க கூட்டணியிலிருந்து விலகி அம்மாவோடு தோட்டத்தில் மேய்வதற்குக் காத்திருக்கும் தோழர்களுக்கு கோபாலின் பேச்சு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்வதுதான் தர்மம். இதன்றி சங்கடப்படுவதில் பொருளில்லை.

ஓவியர் வீரசந்தானம் பேசும்போது அடிபட்ட தோழர்களெல்லாம் வாட்டசாட்டமாக இருக்கிறார்கள், இவர்களா அடிபட்டார்கள், திருப்பித் தாக்கியிருக்க வேண்டாமா என்றார். உடனே பொங்கி வந்த கோபத்துடன் அடுத்து செந்தில்நாதன் ஆவேசமாக விளக்கமளித்தார். த.மு.எ.ச ஒன்றும் கோழைகளின் கூட்டமல்ல, ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டக்கூடிய அஹிம்சாவாதிகளல்ல, இந்தக் கூட்டத்தில் கூட இந்து முன்னணியினர் தாக்கினால் அவர்களை துரத்தி வீடு புகுந்து அடிப்போம் என்றெல்லாம் கர்ஜித்தார். இது உண்மைதானா என்று கூட்டத்தைச் சுற்றிப் பார்த்தோம். கூட்டத்தில் சுமார் 500பேர்கள் இருந்தனர். எங்கும் சிவப்பாடை அணிந்த ஒரு தொண்டரைக்கூட கம்புடன் பார்க்கவில்லை. போலீசுதான் கர்ம சிரத்தையோடு அருகாமை சந்து பொந்துகளிலெல்லாம் சுற்றி வந்து பாதுகாப்பு கொடுத்தது. ஒருவேளை போலீசார்தான் வீடு புகுந்து அடிப்பார்கள் என்று பொருள்பட பேசியிருப்பாரோ என்னவோ தெரியவில்லை.

பேச்சுவாக்கில் செந்தில்நாதன் தில்லை நடராசன் கோவிலில் ஓதுவார் ஆறுமுகச்சாமியின் தமிழுக்கான போராட்டத்தைக் குறிப்பிட்டார். அது ஏதோ சி.பி.எம் சம்பந்தப்பட்டது என்பது போல மறைமுகமாகப் பேசினார். இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திய மக்கள் கலை இலக்கியக் கழகத்தை தெரிந்தே இருட்டடிப்பு செய்தார். உண்மையில் இந்தப் போரட்டத்தில் பார்ப்பனர்கள் என்ற சொல் இருக்கிறது என்ற காரணத்திற்காக சி.பி.எம் கட்சியினர் விலகிக் கொண்டதுதான் வரலாறு. பார்ப்பன இந்து மதத்தின் சித்தாந்த்தத் தலைமையாக விளங்கும் பார்ப்பனர்களை அப்படி அழைப்பதைக் கூட பொறுக்க முடியாத கட்சிதான் இந்தியாவில் இந்துவத்தை வேரறுக்கப் போகிறதாம். கேப்பையில் நெய் வடிந்தாலும் வடியும்.

கவிஞர் சூரியதீபன் பேசும்போது ஒரிசாவில் இந்துமதவெறியர்கள் செய்யும் கலவரங்களைச் சொல்லி, லட்சுமாணனந்தாவை மாவோயிஸ்ட்டுகள் கொலை செய்ததை எடுத்துக்காட்டி இந்து மதவெறியர்களை அடக்கும் செயலை மாவோயிஸ்ட்டுகள் மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை தேவைப்பட்டால் நாமும் செய்யவேண்டும் என்றார். நேபாள் மாவோயிஸ்ட்டுகள் ஜனநாயகப் பாதைக்கு திரும்பிதைப்போல இந்திய மாவோயிஸ்ட்டுகளும் யூ டர்ன் அடித்துத் திரும்பவேண்டும் என்று பேசிவரும் சி.பி.எம் கட்சியனர் இதற்கு என்ன சொல்வார்கள்? உடனே ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டு சங்க பரிவாரத்தை வேட்டையாடக் கிளம்பி விடுவார்களா, இல்லை காங்கிரசுடன் சேர்ந்து கொண்டு மதவெறி அரசியலை எதிர்க்க “போர்க்குணமிக்க” முறையில் போராடுவார்களா?

தலித் முரசு ஆசிரியர் புனிதப்பாண்டியன் பேசும்போது இந்துத்வவாதிகள் ஒரு திட்டத்துடன் இருப்பதுபோல நாமும் ஒரு திட்டத்துடன் செயல்படவேண்டுமென்றார். பெரியாரும், அம்பேத்காரும் அதற்கான வழிமுறைகளை உருவாக்கித் தந்துள்ளார்கள் என்றவர், இந்துக்களாக வாழ்ந்து கொண்டு இந்துப் பண்டிகைளைக் கொண்டாடிக் கொண்டு, சாதியத்தைக் கடைபிடித்துக் கொண்டே இந்துத்வவாதிகளை எதிர்க்க முடியாது என்றார். நமக்கு சி.ஐ.டி.ய ஆட்டோ சங்கம் நடத்தும் ஆயுத பூஜையும், தீக்கதிரின் தீபாவளி சிறப்பு மலரும், சோமநாத் சட்டர்ஜி பேரனுக்கு செய்த பூணூல் கல்யாணமும், நான் முதலில் ஒரு இந்து அப்புறம்தான் ஒரு கம்யூனிஸ்ட்டு என்று ஒரு மேற்கு வங்க அமைச்சர் பேசியதும் நினைவில் வந்து போனது. இதன்படி பார்த்தால் சுத்தமான இந்துக்களாக வாழும் சி.பி.எம் கட்சியனர் என்றைக்குமே இந்து மதவெறியர்களை எதிர்க்க முடியாது என்றாகிறது.

அம்பேத்கர் பத்து இலட்சம் மக்களுடன் புத்த மதத்திற்கு மாறியதே தீர்வு என்று பேசிய புனித பாண்டியன் மதமாற்றத்தின் அவசியத்தை வலியுறுத்தினார்.இந்த அணுகுமுறையை ஈழத்தமிழர்களுக்கு அமல்படுத்தினால் என்ன ஆகும்? அங்கே ஈழத்தமிழர்களை வேட்டையாடுவதை புத்த பிட்சுக்கள் வலியுறுத்தும் போது என்ன செய்வது? ஈழத்தில் மட்டும் கிறித்துவ மதத்திற்கு மாறவேண்டுமா? சாதியும், தீண்டாமையும் மதம் மாறினாலும் தாழ்த்தப்பட்ட மக்களை விட்டுவிடாமல் கட்டிப்போடும்போது, மதமாற்றம் முழுவிடுதலை அளிக்காது. பார்ப்பனியத்தின் சாதிய சமூகத்தை அதன் அரசியல், சமூக, பொருளாதார அடிப்படைகளிலிருந்து வீழ்த்தும் வரை இந்துத்வம் அழியாது.

போரூரில் கணேசன் காந்தி எனும் இந்துமுன்னணி வட்டார ரவுடியின் தலைமையில் அணிதிரண்டு தாக்கியவர்களை ஒன்னும் செய்யமுடியாத த.மு.எ.ச இலக்கியவாதிகளுக்கு இவ்வளவு பெரிய விசயமெல்லாம் செய்யவேண்டுமென்றால் அதற்கு இந்துவாகவே வாழ்ந்து கொண்டு போய்விடலாம் என்பார்கள். அல்லது வர்க்கப்போரட்டம் ஓன்றே சர்வரோக நிவாரணி என்று வகுப்பெடுப்பார்கள். நடைமுறையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு மார்க்சியத்தின் வர்க்கப்போராட்டம் அவர்களுக்கு உதவிசெய்வதை கண்டால் காரல் மார்க்சுக்கே கோபம் வரும்! என்ன செய்வது, மார்க்ஸ்தான் உயிருடன் இல்லையே!

த.மு.எ.சவின் பேச்சாளர்கள் எல்லோரும் ஒரு விசயத்தை மட்டும் வலியுறுத்தினர். அதுதான் கருத்துரிமை! அதாவது இந்துவத்தை விமரிசனம் செய்தால் பதிலுக்கு இந்துமுன்னணி கூட்டம் போட்டு பதில் சொல்லவேண்டுமாம். இதுதான் ஜனநாயகமுறையாம். இதை விடுத்து தாக்குவது என்பது மதவெறியாம். இந்த முக்கியமான பாலபாடம் தெரியாததால்தான் இந்தியாவில் இந்து மதவெறியர்கள் இவ்வளவு நாள் கலவரம் செய்து பல்லாயிரம் பேரைக் கொன்றிருக்கிறார்கள் போலும். இனி இந்து முன்னணியின் ஒவ்வொரு கிளைக்கும் த.மு.எ.ச தோழர் ஒருவரை அனுப்பி வகுப்பெடுப்பதுதான் பாக்கி. இதை இராம கோபாலனிடம் விளக்கி கன்வின்ஸ் செய்தால் முடிந்தது பிரச்சினை! இந்தப் போலிக் கம்யூனிஸ்ட்டுகள் பாசிசத்தை மதிப்பிடுவதையும், அதை எதிர்கொள்வதையும் நினைத்தால் புல்லரிக்கிறது.

பெரியார் திராவிடர் கழகத்தின் விடுதலை இராஜேந்திரன் பேசும் போது இன்றைக்கு இடதுசாரி இயக்கங்களெல்லாம் பெரியாரின் கொள்கைகளைப் பேசிவருவது குறித்து மகிழ்ச்சியைத் தெரிவித்தார். போரூரில் தாக்கியவர்கள் எல்லாம் பார்பனர்கள் அல்ல பிற்படுத்தப்பட்ட மக்கள்தான் என்று பேசிய ராஜேந்திரன் அவர்களும், தலித்துக்களும் பார்ப்பனிய இந்து மதத்தால் அடிமைகளாக நடத்தப்படுவதை விளக்கினார். இதையெல்லாம் எதிர்த்துப் போராடுவதற்கு அவர்களும் முன்வரவேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தார்.

சங்க பரிவாரத்தால் சித்தாந்த ரீதியாக அணிதிரட்டப்பட்டுள்ள மக்களிடம் இப்படிப் பிரச்சாரம் செய்வது சரிதான். அதே சமயம் அது போர்க்குணமிக்க முறையிலும், சித்தாந்த ரீதியில் தாக்குதல் நிலையிலும் இருக்கவேண்டும். அப்போதுதான் சாதி, மொழி, பண்பாட்டு வகையில் பார்ப்பனியத்தால் அடிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களை விடுவிக்க முடியும். சி.பி.எம் கட்சியோ இந்துமதத்தின் ஆன்மாவாக இருக்கும் சாதிய சமூகத்தை மறுத்து நல்ல இந்து மதம் ஒன்று இருப்பதாக கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆர்.எஸ.எஸ் இன் இந்து மதம் வன்முறையானதாம், இவர்களுடையது சாத்வீகமானதாம். பாம்பில் நல்ல பாம்பு, கெட்ட பாம்பு!

இறுதியில் பேசிய த.மு.எ.சவின் தமிழ்ச்செல்வன் பெரியாரையும், அம்பேத்காரையும் இப்போதுதான் என்றில்லை வெகுகாலமாகவே பேசிவருவதாகச் சொன்னார். அப்புறம் பாரதியாரையும், பாரதிதாசனையும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தையும் முறையே பார்ப்பனிய எதிர்ப்புக்காகவும், வர்க்கப் போரட்டத்திற்காகவும் தோளில் தூக்கிச் சுமப்பதாகச் சொன்னார். கூட்டத்திலும் பாரதி, காந்தியின் படங்களை தூக்கியவாறு தொண்டர்கள் அமர்ந்திருந்தனர்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் நிகழ்ச்சிகளில் தேசியக்கவி என்று கொண்டாடப்படும் பாரதியாரை த.மு.எ.ச வும் கொண்டாடுகிறது. இப்போது ஒரிசாவிலும், கர்நாடகத்திலும் இந்துமதவெறியர்கள் தாக்குவதை, அவர்கள் தலைவர்கள் இது மதமாற்றத்திற்கு எதிரான போர் என்று பிரகடனம் செய்கிறார்கள். பாரதியும் மதமாற்றத்தைக் கண்டித்து அப்போதே எழுதியிருக்கிறார். என்றால் பாரதி யாருக்குச் சொந்தமாக இருக்கமுடியும்? பங்காளிகள் பேசி முடிவு செய்து கொள்ளட்டும்.

டிசம்பர் 18 முதல் 21 வரை சென்னையில் நடைபெற இருக்கும் த.மு.எ.ச மாநில மாநாட்டை மதவெறி எதிர்ப்பு, தலித் விடுதலை, பெண்விடுதலை, தமிழ் வளர்ச்சி, ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற ஐந்து அம்சங்களுக்காக நடத்தப் போகிறார்களாம். தற்போது போரூரில் இந்து முன்னணி தாக்குதல் நடத்தியதால் தமிழகம் முழுவதும் மதவெறியை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யப் போகிறார்களாம். ஷாபனா ஆஸ்மியும், நடிகர் அமீர் கானும் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று தமிழ்ச்செல்வன் பேசினார். கோகோ கோலாவின் விளம்பரத் தூதராக இருக்கும் அமீர் கானை வைத்து ஏகாதிபத்திய எதிர்ப்பு! நல்ல பொருத்தம்தான்.

அதிலும் கூட மதவெறியைத்தான் எதிர்க்கப் போகிறார்கள். ஏதோ நாட்டில் ஆயிரம் மதவெறிகள் இருப்பதை போல. இந்தியாவில் சிறுபான்மை, பெரும்பான்மை என்று இரண்டாக மதப்பிரிவுகளை பிரிக்கலாம். இப்போது பெரும்பான்மையின் பெயரால் சிறுபான்மை ஒடுக்கப்படுகிறது. இதை இந்து மதவெறி என்று கூட சொல்வதற்கு கூச்சப்படும் கோமாளிகளின் கூட்டம் எப்படி இந்துத்வத்தை எதிர்கொள்ளும்?
அதிகபட்சம் அடுத்த தேர்தல் முடிந்த பின் சி.பி.எம் கட்சி காங்கிரசுடன் சேர்ந்து கொண்டு பா.ஜ.கவை எதிர்ப்பதுதான் நடக்கப்போகிறது. இதற்கு இவ்வளவு பெரிய போர்முழக்கம் செய்வது பொருத்தமாக இல்லை.

பபூன்கள் சீரியஸாக நடித்தாலும்….சிரிப்புதான் வரும்!

18 Responses to “அடிவாங்கினால் பொன்னாடை! இந்து முன்னணி vs த.மு.எ.ச Exclusive!!”

  1. செருப்படி கொடுத்துள்ளீர்கள் தோழர்… இருந்தாலும் நல்ல மாட்டுக்கு ஒரு சூடுதான் தோழர்.. இல்லேன்னா பாய் கடைக்கு தான் ….

  2. இடதுசாரிக் கட்சிகளை விமர்சிக்காவிட்டால் சிலருக்கு தூக்கம் வராதா?. இடதுசாரிகள் இந்துத்வ எதிர்ப்பையும், இந்து மத எதிர்ப்பையும் வேறுபடுத்தி இருக்கிறார்கள். 80%+ மக்கள் இந்துக்களாக இருக்கும் போது இந்து மதம் ஒழிக,மதம் மாறுங்கள் என்று பிரச்சாரம் செய்வது அறிவு சீவிகளுக்கும், அரைவேக்காட்டு இயக்கங்களுக்கும், கணினி முன் உட்கார்ந்து விமர்சிக்கும் மேதாவிகளுக்கும் எளிது. மக்கள் இயக்கங்கள் கட்டுவதற்கு அது உதவாது. மதிமாறன்கள், மருதையன்கள் செய்யும் அரசியலின் வீச்சு குறுகியது. தேங்கிய குட்டை அது. இத்தனை ஆண்டுகளாக பெரியார் தி.க, ம.க.இ.க வின் தாய்க் கட்சி சாதித்தது என்ன?.

    ‘கோகோ கோலாவின் விளம்பரத் தூதராக இருக்கும் அமீர் கானை வைத்து ஏகாதிபத்திய எதிர்ப்பு! நல்ல பொருத்தம்தான். ‘

    வெள்ளையனை வைத்து கூட்டம் போட்ட கும்பல் இதைச் சொல்கிறது. அதுதான் வேடிக்கை.
    உங்கள் கூட்டங்களுக்கு தேவைப்படும் போது யாரையெல்லாம் அழைத்து பேச மேடை தருகிறீர்கள்
    என்பது எங்களுக்கும் தெரியும்.

  3. //80%+ மக்கள் இந்துக்களாக இருக்கும் போது இந்து மதம் ஒழிக,மதம் மாறுங்கள் என்று பிரச்சாரம் செய்வது அறிவு சீவிகளுக்கும், அரைவேக்காட்டு இயக்கங்களுக்கும், கணினி முன் உட்கார்ந்து விமர்சிக்கும் மேதாவிகளுக்கும் எளிது.//
    செங்கொடி, தனது பெயருக்கும் சற்றும் பொருத்தம் இல்லாதாவாறு கருத்து சொல்கிறார்..
    இந்தியாவில் உள்ள ஒருவனை இந்து என தீர்மானிப்பது எது? மனு தர்மம் , வர்ணாசிரமம் , சாதிகளால் ஏன் மக்கள் ஒதுக்கப்படுகின்றனர்.. ?
    நாங்கள் நாத்திகர்கள் எல்லா மதங்களையும் எதிர்க்கின்றோம்.. ஆனால் இந்தியாவில் நடக்கும் அனைத்து மதக் கலவரங்களும்.. இந்து மதவெறியால் தூண்டப்பட்டது எனும் போது.. இந்து மதம் ஒழிக என்று சொல்லாமல்.. பா.ஜ.க உடன் கூட்டணியா அமைக்க முடியும்…?
    குஜராத்தில் மோடி நடத்திய படு கொலை 80% இந்துக்களின் பெயரால் செய்யப்பட்டது. அவர்கள் 80% இந்துக்களின் பிரதிநிதிகளாக இருக்கும் பொழுது.. நாமும் அடுத்த கலவரத்திற்கு ஆள் அனுப்பலாம் அல்லது.. அவர்களை பாராட்டி ஒரு கூட்டம் நடத்தலாம்… !! உங்களின் கருத்துப்படி.. இங்கு இந்து மதம் ஒழிக என்று சொல்வது ஒரு அறிவிலி செயல்.. !!!!!
    தீண்டாமை ஒரு பாவச் செயல் என்று ஒவ்வொரு பாடப்புத்தகத்தின் முகப்பிலும் உள்ளது.. அதே சமயம் நமது செங்கொடி சொல்லும் “இடது சாரிகளும்” .. ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்து உள்ளனர்.. அவர்களால் இந்து மதத்தின் கொடுமை தாங்காமல் மதம் மாறும் மக்கள் என்ன பயன் அடைந்து உள்ளனர் அல்லது அடைய போகின்றனர்..?
    கேரளாவில் இன்றும் மக்களை ஏமாற்றி அய்யப்பனும், மகர ஜோதியும் வெகு ஜோராக விற்பனை செய்யப்படுகிறது.. வருவாய் வருகிறது என்றால் நாமே பல புதிய மகர ஜோதிகளை உருவாக்கலாம்.. !!!
    ஒருவன் தனது மதத்தால் மிருகத்தைவிட கேவலமாக நடத்தப் படும் போது.. அவனை அந்த கொடுமையில் இருந்து விடுதலை செய்யாமல் இடது சாரி என்று சொல்லி என்ன பயன்…
    காந்தி, தலித்துகளை அரிஜணன் என்று ஒரு பகட்டான பெயர் கொடுத்து ஒதுக்கி வைத்ததற்கும்.. உங்களுக்கும் உள்ள வேறுபாடுதான் என்ன ?
    இறுதியாக பெரியார் அடிக்கடி குறிப்பிடும் வெங்காயத்திற்கும் உங்களுக்கும் உள்ள வேறுபாடுதான் என்ன?

  4. இந்து மதம் என்றாலே பாம்பு என்று கதை விடும் கருத்து குருடரே!!

    இந்து மதத்தில் சாதிகளை எதிர்த்து தனி பிரிவு அமைத்தவர்களே இல்லையா?

    சமணரும், புத்தரும் இந்துவும் (இறைவன் ஒருவனே என்ற) ஒரே மூலத்தை கொண்டன என்பது தங்களுக்கு தெரியாது இல்லையா?

    1. பெரியார் ஆர்வம் கொண்டு உட்செல்ல முயற்சித்த வள்ளலார் எந்த மதம் ?
    2. அய்யா வழி என்பது என்ன என்று தெரியுமா?

    சாதியும் மதமுஞ் சமயமுங் காணா ஆதி அநாதியாம் அருட்பெருஞ்ஜோதி
    சாதியும் மதமுஞ் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி
    சமயமுங் குலமுதல் சார்பெலாம் விடுத்த சமயந் தோன்றிய அருட்பெருஞ்ஜோதி -வள்ளலார்

  5. ‘செங்கொடி’ மங்கி காவியாகிறப் போது … பாரத்துக்கோங்க …

  6. You are trying to set CPI(M) against Hindus. Such tatics wont work. The record of marxists in empowering Dalits is much better than DMK. In Kerala and West Bengal BJP is weak.In Tamil Nadu it is gaining strength.If CPI(M) criticses hinduism only BJP will gain. Responsibilty is different from left adventurism.

  7. மோடியை எதிர்க்கிறோம்.பிற மதத்தினருடன் ஒற்றுமையாக வாழும் இந்துக்களை எதிர்க்கவில்லை.
    இந்து மதம் ஒழிக என்று கோஷம் போட்டால் பிற மதத்தினருடன் ஒற்றுமையாக வாழும் இந்துக்கள்
    பாஜக பக்கம் போய்விடுவார்கள். அரசியல் கட்சிக்கும், வெறும் இயக்கத்திற்கும் ஆயிரம் வேறுபாடு
    உண்டு.மக்கள் நம்பிக்கையை வளர்த்தெடுக்க வேண்டும். நீ முட்டாள் நான் புத்திசாலி என்று களத்தில் செயல்பட முடியாது. அறிவுசீவி ஆணவம் அங்கு செல்லுபடியாகாது. மத நம்பிக்கைகளை விமர்சிக்கிறோம், உ-ம் சேது திட்டத்திற்கு தடையாக வரும் போது. உத்தபுரத்தில் யாருக்காக போராடுகிறோம், யாரை எதிர்க்கிறோம் என்பதையும் சிந்தியுங்கள்.குட்டையை குழப்பும் ம.க.இ.க வினருக்கு தாங்கள் யாரை எதிர்க்கிறோம் யாரை ஆதரிக்கிறோம் என்ற பிரச்சினை இல்லை. தங்களைத் தவிர எல்லோரையும் விமர்சிக்கும் உலக நாயகர்கள் அவர்கள்.

  8. தோழர்களே,

    நானும் செங்கொடி என்னும் பெயரிலேயே உலவுகிறேன். ஆனால் இங்கு பின்னூட்டமிட்டிருக்கும் செங்கொடி நானல்ல. நான் கடந்த சில மாதங்களாகவே உலவத்தொடங்கியிருக்கிறேன். என் பெயரை மாற்றவேண்டுமா? தெரியவில்லை.

    தோழமையுடன்,
    செங்கொடி

  9. arumaiyana katturai.

  10. நானும் செங்கொடி என்னும் பெயரிலேயே உலவுகிறேன். ஆனால் இங்கு பின்னூட்டமிட்டிருக்கும் செங்கொடி நானல்ல. நான் கடந்த சில மாதங்களாகவே உலவத்தொடங்கியிருக்கிறேன். என் பெயரை மாற்றவேண்டுமா? தெரியவில்லை.

    peyar matram seiya vendiyathu poligalthan. neengal alla.

  11. கோவை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய பொதுக்கூட்டத்தில் சீமானுக்கு எதிராக கலவரம் நடத்திய இந்து மதவெறியர்களை கண்டித்து 02.09.2008 அன்று சென்னை மெமோரியல் அரங்கம் எதிரில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட்த்தில் எழுப்பட்ட முழக்கங்கள்.

    இந்து என்று சொல்லாதே

    பார்ப்பான் பின் செல்லாதே

    தூக்கியெறிவோம் தூக்கியெறிவோம்!

    பார்ப்பன னால் திணிக்கப்பட்ட

    வட மொழியின் ஆதிக்கத்தை

    தூக்கியெறிவோம், தூக்கியெறிவோம்!

    விரட்டியடிப்போம், விரட்டியடிப்போம்!

    பார்ப்பன கடவுள்களை

    விரட்டியடிப்போம்.

    அண்டப் புளுகு, ஆபாச புளுகு

    இதிகாக் குப்பைகளை

    கொளுத்தியெறிவோம்!

    எச்சி ராஜா, இலை கணேசன்

    நச்சுப் பாம்பு துக்ளக் சோ

    ஆரியப் – பார்ப்பன வெறியர்களை

    விரட்டியடிப்போம் விரட்டியடிப்போம்.

    ஒரு குலத்திற்கு ஒருநீதி – பார்ப்பனியம்

    ஒரு வர்க்கத்திற்கு ஒருநீதி – மறுகாலனியம்

    பார்ப்பனியத்தை வேரறுப்போம்

    மறுகாலனியத்தை முறியடிப்போம்.

    பன்னாட்டுக் கம்பெனியும் பார்ப்பானும் ஓரணி

    பஞ்சமனும் சூத்திரனும், தொழிலாளியும் எதிரணி

    கோ மாதாவுக்கு பசு மடம் வைக்கும் இராம. கோபாலா

    பன்றி பகவான் வராகனுக்கு என்ன மடம்? சங்கர மடமா?

    மாட்டைத் தொட்டப் புண்ணியம்

    மனுசன தொட்டா தீட்டு.

    மானங்கெட்டத் தனத்துக்குப் பேர்தான் இந்து தர்மமா?

    திரும்பப் பெறு, திரும்பப் பெறு

    பெரியார் தி.க தோழர்கள் மீது

    பகுத்தறிவு சீமான் மீது

    போடப்பட்ட பொய்வழக்குகளை

    திரும்பப் பெறு, திரும்பப் பெறு.

    நன்றி : மதச்சார்பற்ற கருத்துரிமை பேரியக்கங்களின் கூட்டமைப்பு

    Ithu pola CPI, CPM PESA MUDIYUMA? POLIGAL EPPOTHUM UTHAR VITTUKKONDE IRUPPARGAL.

    ” DUPLICATE SENKODI AVARGALE ” BATHIL SOLLUNGAL?

  12. RSS,பஜ்ரங்தல்,விஸ்வ இந்து பரிசத்,இந்து முன்னனி,போன்ற வன்முறை இயக்கங்களை தடை செய்ய வேண்டும்.

  13. mulakkangal http://www.mathimaran.wordpress.com il irunthu edukkappattavai. solla maranthu vitten.

  14. //இந்து மதம் என்றாலே பாம்பு என்று கதை விடும் கருத்து குருடரே!!
    இந்து மதத்தில் சாதிகளை எதிர்த்து தனி பிரிவு அமைத்தவர்களே இல்லையா?
    சமணரும், புத்தரும் இந்துவும் (இறைவன் ஒருவனே என்ற) ஒரே மூலத்தை கொண்டன என்பது தங்களுக்கு தெரியாது இல்லையா?//
    இந்து மதம் பாம்பு இல்லை என்றால், நண்பர்.. தயவு செய்து.. தில்லை, மதுரை, அல்லது வேறு ஏதாவது கோயிலுக்குள் சென்று திருவாசகத்தை ஒரு தாழ்த்தப்பட்டவரை வைத்து பாட சொல்லுங்கள்..
    புத்த மதம் சாதிகளை எதிர்த்து உருவான போது … அது இந்து மத வெறியர்களால் கடுமையாக தாக்கப்பட்டது ஏன் என்று நண்பர் விளக்கினால் நலம்… இறைவன் ஒருவனே என்றால் இந்த வன்முறை எங்கிருந்து வருகிறது?
    இந்து மதம் என்றில்லை எனக்கு தெரிந்து எல்லா மதமும் சிறு பான்மை மதத்தின் மீது வன்முறையை ஏவி விடுகிறது.. ஆனால் உலகிலேயே, ஒரு முழுமையான பொய்யை சொல்லி மக்களை ஏமாற்றி, தீண்டாமையை திணித்த மதம் இந்து மதம் தான்..
    புத்தமும், இஸ்லாமும், கிருத்துவமும் உலகின் பல மூளைகளுக்கு பரவி உள்ளன.. ஆனால் இந்து மதம் மட்டும் இந்தியாவை விட்டு அதிகம் வெளியே செல்லாதது ஏன் என்று நண்பர் சிந்திக்க வேண்டுகிறேன்..
    இங்கு என்னுடைய அறிவுக்கு எட்டியவரை இரண்டு பிரச்சினைகள்..
    1. இந்து மதம் இன்றும் மக்களை கேவலமாக நடத்துகிறது.. அதுதான் அதன் அடிப்படையே.. இதை நண்பர் எப்படி மாற்றப் போகிறார்…?
    2. இந்து மத கொடுமைகளை தாங்காமல் மதம் மாறும் அப்பாவிகளையும், வேற்று மத சிறுபான்மை மக்களையும் இந்து மத வெறியர்கள் கடுமையான அடக்கு முறைகளை ஏவி விடுகின்றனர்.. இங்கு நண்பர் தனது முயற்சியால் ஒரு சாதியில்லா , சமத்துவமான இந்து மதத்தை உருவாக்கினால் அவரும் இதே அடக்குமுறைக்கு உள்ளாவார்…

    //1. பெரியார் ஆர்வம் கொண்டு உட்செல்ல முயற்சித்த வள்ளலார் எந்த மதம் ?
    2. அய்யா வழி என்பது என்ன என்று தெரியுமா?//
    எனது அறிவுக்கு எட்டியவரை.. பெரியார் கடைசி வரை நாத்திகராகவே வாழ்ந்தார்.. அவருடைய வள்ளலார் முயற்சியை பற்றி தெரியாது? அதே போல் அய்யா வழி என்றால் என்ன என்று தெரியாது.. விளக்கினால் நலம்..

  15. The CPI and CPIM has vehemently opposed the Hindutva brigade…only on papers but on field it is the Periyarists and Naxalites who has given the devil its due. The CPI&CPIM cannot say excuses and escape from responsibility. If they are against hindutva them they need to fight it to the core. Though they are all India party they did a damn nothing in Gujarat against the Modis mob and neither are they doing anything now in Orissa.

    The Saffron hooligans are out on prowl in the streets they need to be dealt with bullets of revolutionary politics not with ballots of coalition politics.

  16. […] தாக்கியும் இருக்கிறார்கள் சி.பி.எம் போலி கம்யூனிஸ்டுகள் இந்து ஒரிசாவை தொடர்ந்து தமிழ் நாட்டிலும் […]

  17. //1. இந்து மதம் இன்றும் மக்களை கேவலமாக நடத்துகிறது.. அதுதான் அதன் அடிப்படையே.. இதை நண்பர் எப்படி மாற்றப் போகிறார்…?//

    //2. இந்து மத கொடுமைகளை தாங்காமல் மதம் மாறும் அப்பாவிகளையும், வேற்று மத சிறுபான்மை மக்களையும் இந்து மத வெறியர்கள் கடுமையான அடக்கு முறைகளை ஏவி விடுகின்றனர்.. இங்கு நண்பர் தனது முயற்சியால் ஒரு சாதியில்லா , சமத்துவமான இந்து மதத்தை உருவாக்கினால் அவரும் இதே அடக்குமுறைக்கு உள்ளாவார்…//

    இந்து மதத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரில் சிலர் சமயத்தையே தமது சொத்தாக்கிக் கொண்டதும், பிற பிரிவினரை தாழ்வாக கருதுவதும் தான் உண்மையிலேயே பிரச்சினை என்று தாங்கள் கவலைப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

    உண்மை தமிழ் இந்து சமயம் நமது மூதாதையர்கள் நமக்கு இட்டு வைத்த சொத்து. அதை பிறர்க்கு தந்து விட்டு ஓடுவது தான் உண்மையிலேயே கோழைத்தனம்.

    1.திருவள்ளுவர் 2. திருமூலர் 3.‍‍சிவவாக்கியர் 4. சிவபிரகாசர்(17th cent) 5. தாயுமானவர்(1705-1742) 6.அய்யாவழி(1809–1851) 7. பாம்பன் சுவாமிகள்(1853-1927?) 8. ஆறுமுகநாவலர்(1822-76) 9. இரமணர் 10. அவ்வையார், 11. ஆண்டாள், 12. காரைக்கால் அம்மையார் மேலும் பலர் இந்த அடக்குமுறைகளைக் கண்டு இவர்களை எதிர்த்து போரிட்டவர்கள் தான். இந்த அடக்குமுறைகளைக் கண்டு ஓடிப்போனவர்கள் தான் தனது தமிழன் எனும் சுய அடையாளத்தையே அழித்துக் கொண்டவர்கள்.

    நான் இவர்கள் பாதையில் செல்ல துணிந்து விட்டேன் என்பதையும் அடக்குமுறைகளை கண்டு பயப்படுபவன் நானல்ல என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.

    //1. பெரியார் ஆர்வம் கொண்டு உட்செல்ல முயற்சித்த வள்ளலார் எந்த மதம் ?
    2. அய்யா வழி என்பது என்ன என்று தெரியுமா?
    எனது அறிவுக்கு எட்டியவரை.. பெரியார் கடைசி வரை நாத்திகராகவே வாழ்ந்தார்.. அவருடைய வள்ளலார் முயற்சியை பற்றி தெரியாது? அதே போல் அய்யா வழி என்றால் என்ன என்று தெரியாது.. விளக்கினால் நலம்..//

    http://www.vallalar.org/

    http://www.vaikunt.org/

  18. என்னுடைய தளம் http://www.veeran.co.cc/

Read Full Post »

பேரெழுச்சி! போலி கம்யூனிஸ்டுகள் ஆளும் மே.வங்க மாநிலம் இதுவரை கண்டிராத பழங்குடியின மக்களின் ஆயுதம் தாங்கிய பேரெழுச்சி! கடந்த நவம்பர் முதல் வாரத்தில் வெடித்தெழுந்த இப்பேரெழுச்சி மித்னாபூர், புருலியா, பங்குரா மாவட்டங்களில் புயல் போலச் சுழன்று வீசியது. “ஐயோ! மாவோயிஸ்டு பயங்கரவாதிகள்! சிங்கூர்நந்திகிராமத்தைத் தொடர்ந்து இங்கேயும் ஊடுருவி விட்டார்கள்” என்று அலறியது, மே.வங்க போலி கம்யூனிச அரசு. “மூன்று மாவட்டங்களில் அரசு நிர்வாகம் முற்றாகச் செயலிழந்து விட்டது” என்று புலம்பின முதலாளித்துவ நாளேடுகள். “இம்மாவட்டங்களில் எங்கள் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பில்லை” என்றுபீதியில் கூச்சலிட்டனர் அரசு அதிகாரிகளும், போலீசாரும்.

வில்அம்பு, கோடாரி, அரிவாள் முதலான மரபு வழி ஆயுதங்களுடன் பல்லாயிரக்கணக்கான சந்தால் பழங்குடியின மக்கள், இம்மாவட்டங்களிலுள்ள போலீசு நிலையங்களை முற்றுகையிட்டு, போலீசாரை உள்ளே வைத்துப் பூட்டினர். இம்மாவட்டங்களை இணைக்கும் அனைத்து நெடுஞ்சாலைகளையும் அகலமான குழிகளை வெட்டித் துண்டித்தனர். சாலையில் மரங்களை வெட்டிப் போட்டு தடையரண்களை உருவாக்கினர்.

“கடந்த பத்தாண்டுகளாக மாவோயிஸ்டு தீவிரவாதிகள் என்று பொய்க்குற்றம் சாட்டி வதைத்துச் சிறையிடப்பட்டுள்ள அனைத்து அப்பாவி பழங்குடியினரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்; கடந்த நவம்பர் முதல் வாரத்தில் லால்கார் பகுதியில் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டுப் பழங்குடியினரை மிருகத்தனமாக வதைத்த குற்றத்துக்காக, போலீசு உயரதிகாரி ராஜேஷ்சிங், சந்தால் பழங்குடியின மக்கள் முன்பு தோப்புக்கரணம் போட்டுப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்; தாக்குதலில் ஈடுபட்ட லால்கார் போலீசார் மக்கள் முன் மூக்கு தரையில்படும்படி கீழே படுத்து மன்னிப்பு கேட்க வேண்டும்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நட்ட ஈடு வழங்குவதோடு, புறக்கணிக்கப்பட்ட இம்மாவட்டங்களில் பழங்குடியினரின் மேம்பாட்டுக்கான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்” என்ற கோரிக்கைகளுடன் போராட்டத்தைத் தொடர்கின்றனர்.

வறுமைவேலையின்மை, அரசின் புறக்கணிப்பு, போலீசின் அடக்குமுறை முதலானவற்றால் ஏற்கெனவே குமுறிக் கொண்டிருந்த சந்தால் பழங்குடியின மக்களை, நவம்பர் 3ஆம் தேதியிலிருந்து கட்டவிழ்த்து விடப்பட்ட போலீசு அடக்குமுறையானது பேரெழுச்சிக்குத் தள்ளியது. சந்தால் பழங்குடியின மக்கள் மீதான போலீசு வெறியாட்டத்துக்குக் காரணம் என்ன?

மே.வங்கத்தின் மித்னாபூர், புருலியா, பங்குரா மாவட்டங்கள், காடுகள் நிறைந்த பின்தங்கிய பகுதியாகும். சந்தால் பழங்குடியின மக்கள் நிறைந்துள்ள இம்மாவட்டங்களில் சமூக நலத்திட்டங்கள் நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்டு, சந்தால் பழங்குடியின மக்கள் வறுமையில் உழன்று கொண்டிருக்கிறார்கள். இப்பகுதியில் இயங்கிவரும் நக்சல்பாரி புரட்சியாளர்கள் இம்மகளை அமைப்பாக்கி, அரசியல்படுத்திப் போராட்டங்களைக் கட்டியமைத்து வந்தனர். நக்சல்பாரி தீவிரவாதிகளை ஒடுக்குவது என்ற பெயரில், மே.வங்க போலீசு பயங்கரவாதிகள் இப்பகுதியில் அப்பாவி மக்கள் மீது வன்முறைவெறியாட்டங்களைக் கட்டவிழ்த்து விடுவதும், மாவோயிஸ்டு தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி அப்பாவிகளைக் கைது செய்து வதைப்பதும் கேள்விமுறையின்றித் தொடர்ந்து கொண்டிருந்தது.

இச்சூழலில், உள்நாட்டுவெளிநாட்டு முதலாளிகளுக்கு விசுவாச சேவை செய்துவரும் போலி கம்யூனிச ஆட்சியாளர்கள், இப்பகுதியில் மக்களின் வாழ்வுரிமையைப் பறித்து சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவக் கிளம்பினார்கள். ஏற்கெனவே சிங்கூர்நந்திகிராமத்தில் சி.பொ.மண்டலத்தை நிறுவி, மக்களின் எதிர்ப்பை மிருகத்தனமாக ஒடுக்கி, நாடெங்கும் அம்பலப்பட்டுப் போன சி.பி.எம்.ஆட்சியாளர்கள். இம்முறை இத்திட்டம் பற்றி மக்களுக்குத் தெரிவிக்காமல், சதிகார முறையில் நிறைவேற்றிடத் துடித்தனர்.

இருப்பினும், ஜிண்டால் எனும் தரகுப் பெருமுதலாளித்துவ நிறுவனத்தின் எஃகு ஆலைக்காக சந்தால் பழங்குடியினர் வாழும் காட்டுப் பகுதிகளை அழித்து 5,000 ஏக்கரில் சி.பொ.மண்டலம் நிறுவப்படவுள்ள உண்மைகள் மெதுவாகக் கசியத் தொடங்கியதும், மாவோயிஸ்டுகள் இச்சிறப்புபொருளாதார மண்டலத்துக்கு எதிராகப் பிரசாரத்தில் ஈடுபட்டுப் பழங்குடியின மக்களைப் போராட்டத்துக்கு அணிதிரட்டி வந்தனர். கடந்த நவம்பர் 2ஆம் நாளன்று அவசர அவசரமாக இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா அறிவிக்கப்பட்டு, மே.வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா மற்றும் மைய அரசின் அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோர் விழாவில் பங்கேற்றுவிட்டுத் திரும்பும் வழியில், மாவோயிஸ்டுகள் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தி எச்சரித்தனர். இத் தாக்குதலில் வாகனங்களுக்குச் சேதம் ஏற்பட்டதைத் தவிர, வேறு எவருக்கும் பாதிப்பில்லை.

இருப்பினும், மறுநாளே மாவோயிஸ்டு பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை என்ற பெயரில் பழங்குடியின மக்கள் மீது மே.வங்க போலீசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டது. பழங்குடியின மக்களின் அற்ப உடமைகளையும், சைக்கிள்பாத்திரங்கள் போன்றவற்றைக் கூட விட்டுவிடாமல் நாசமாக்கிய போலீசார், மூன்று பள்ளிக்கூட மாணவர்களை அரசைக் கவிழ்க்க சதி செய்ததாகப் பொய் வழக்கு போட்டு கைது செய்து வதைத்தனர். சீதாமணி முர்மூ என்ற பெண்ணை துப்பாக்கிக் கட்டையால் போலீசார் தாக்கியதில் அவரது கண்களில் இரத்தம் பீறிட்டு, இன்று அவர் பார்வையிழந்துள்ளார். பல கர்ப்பிணிப் பெண்களுக்குக் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. பலருக்கு எலும்பு முறிந்து மருத்துவமனைகளில் கிடத்தப்பட்டுள்ளனர். ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர், வியாபாரி, கண்பார்வையற்ற முதியவர் உள்ளிட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் தீவிரவாதிகள் என்று கைது செய்யப்பட்டுக் கொடூரமாக வதைக்கப்பட்டனர். உள்ளூர் போலீசும் ரிசர்வ் போலீசும் சேர்ந்துகொண்டு விடியவிடிய 3 நாட்களுக்கு நடத்திய இத்தாக்குதலால் மித்னாபூர் மாவட்டமே பீதியில் உறைந்து போனது.

போலீசு அடக்குமுறையால் துவண்டுபோன சந்தால் பழங்குடியின மக்களிடம் நம்பிக்கையூட்டி அணிதிரட்டிய மாவோயிஸ்டுகள், லால்கார்ஜார்கிராம் பகுதியில் 600க்கும் மேற்பட்ட கிராமத் தலைவர்களைக் கூட்டி விவாதித்து, அதனடிப்படையில் 10 அம்சக் கோரிக்கைகளுடன் போராட்டத்தைத் தொடர முடிவு செய்தனர். மித்னாபூர், புருலியா, பங்குரா மாவட்டங்களில் இதுபோன்ற கூட்டங்கள் நடத்தப்பட்டு, மக்கள் கமிட்டிகள் உருவாக்கப்பட்டு அவற்றை ஒருங்கிணைக்கும் “போலீசு அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டி” நிறுவப்பட்டது. அதன் வழிகாட்டுதலின்படி, நவம்பர் 6ஆம் தேதி இரவு 5,000 பேருக்கு மேலாக வில்அம்பு, கோடரி, அரிவாள்களுடன் அணிதிரண்ட பழங்குடியின மக்கள் லால்கார் போலீசு நிலையத்தை முற்றுகையிட்டுச் சூறையாடி, போலீசாரை நையப்புடைத்துக் கொட்டடியில் தள்ளிப் பூட்டினர். தொலைபேசிமின்சார இணைப்புகளைத் துண்டித்தனர்.

மறுநாள், நவம்பர்7; அந்நவம்பர் புரட்சி நாளில் மேற்கு மித்னாபூர் மாவட்டமெங்கும் ஆயுதமேந்திப் பல்லாயிரக்கணக்கில் திரண்டு பேரணி நடத்திய பழங்குடியின மக்கள், அம்மாவட்டத்தை இணைக்கும் நெடுஞ்சாலைகளில் அகலமான குழிகள் வெட்டி முற்றாகத் துண்டித்தனர். சாலைகளில் மரங்களை வெட்டிப்போட்டுத் தடையரண்களை ஏற்படுத்தினர். சமரசம் பேச வந்த கீழமை நீதிமன்ற துணை மாஜிஸ்திரேட் பழங்குடியின மக்களால் “கெரோ” செய்யப்பட்டதால், அவரும் போலீசாரும் வாகனங்களை விட்டுத் தப்பியோடினர்.

அடுத்த இரு நாட்களில் மித்னாபூர் மாவட்டம் மட்டுமின்றி சந்தால் பழங்குடியினர் நிறைந்த புருலியா, பங்குரா மாவட்டங்களிலும் வில்அம்பு, கோடாரி, அரிவாள், துடப்பக்கட்டையுடன் போலீசு அடக்குமுறைக்கு எதிராகவும், சி.பொ.மண்டலத்துக்கு எதிராகவும் பல்லாயிரக்கணக்கானோரின் எழுச்சிமிகு பேரணிகள் தொடர்ந்தன. இம்மாவட்டங்களிலும் தேசிய நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டு, போலீசு நிலையங்களும் அரசு அலுவலகங்களும் முற்றுகையிடப்பட்டன. போலீசாரும் அரசு உயர் அதிகளாரிகளும் இம்மாவட்டங்களை விட்டுத் தப்பியோடினர். நவம்பர் 10ஆம் தேதியன்று பல்வேறு பழங்குடியின அமைப்புகள் ஒன்றிணைந்து தாஹிஜுரி எனுமிடத்தில் சாலை மறியல் நடத்தியபோது, தடியடி நடத்திக் கலைக்க முயன்ற போலீசாரை 5000க்கும் மேல் திரண்ட பழங்குடியின மக்கள் ஏறத்தாழ 5 கி.மீ.தொலைவுக்குத் துரத்தி துரத்தி வந்து விரட்டியடித்தனர். இம்மூன்று மாவட்டங்களில் அரசு நிர்வாகம் முற்றாகச் செயலிழந்து, பழங்குடியின மக்கள் தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளும் ‘விடுதலைப் பிரதேசங்களாக’க் காட்சியளித்தன.

அரண்டு போன போலிக் கம்யூனிச ஆட்சியாளர்கள் சர்வகட்சி கூட்டத்தைக் கூட்டி, பழங்குடியின மக்களிடம் சமரசம் பேச வருமாறு அழைத்தனர். ஆனால், எல்லா ஓட்டுக்கட்சிகளும் தங்களுக்குப் பழங்குடியின மக்களிடம் செல்வாக்கு இல்லை என்று கூறி மறுத்துவிட்டன. மித்னாபூர் மாவட்டம், பின்பூர் தொகுதியில் பழங்குடியின மக்கள் ஆதரவோடு வெற்றி பெற்ற ஜார்கந்து கட்சி (நரேன்பிரிவு) எம்.எல்.ஏ.கூடச் சமரசப் பேச்சுவார்த்தைக்குத் தூது செல்ல மறுத்துவிட்டார். இதற்கிடையே, போலீசு அடக்குமுறையைக் கண்டித்து, திரிணாமூல் காங்கிரசு கட்சியினர் மித்னாபூர் மாவட்ட நீதிமன்றத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர். இந்திய சோசலிஸ்ட் ஐக்கிய மையக் கட்சியினர் ஜார்கிராம் பகுதியில் கடையடைப்புப் போராட்டத்தையும், பேரணிமறியல் போராட்டங்களையும் நடத்தினர். ஜார்கந்த் திசாம் கட்சி மூன்று மாவட்டங்களில் வெற்றிகரமாக கடையடைப்புப் போராட்டத்தை நடத்தியது.

மே.வங்க ‘இடது சாரி’ கூட்டணியிலுள்ள வலது கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான நந்தகோபால் பட்டாச்சார்யா, “அரசு அடக்குமுறையின் எதிர்விளைவுதான் சந்தால் பழங்குடியனரின் எழுச்சி” என்று ‘இடதுசாரி’ அரசைச் சாடியுள்ளார். கூட்டணியிலுள்ள பார்வர்டு பிளாக் கட்சியின் செயலரான அசோக் கோஷ்,”பழங்குடியின மக்களை நீண்டகாலமாகப் புறக்கணித்து ஒடுக்கியதால் ஏற்பட்ட கோபத்தின் வெளிப்பாடுதான் இக்கிளர்ச்சி. இதற்கு மாவோயிஸ்டுகள் மீது பழிபோடுவதில் பயனில்லை” என்று சி.பி.எம். ஆட்சியாளர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

மறுபுறம், நந்திகிராம வழியில் மோட்டார் சைக்கிள் ரௌடிப் படைகளைக் கொண்டு தாக்க சி.பி.எம்.குண்டர்களை ஏற்பாடு செய்தனர். சி.பி.எம்.கட்சியின் அமைச்சர் சுஷந்தாகோஷ், மாவட்டச் செலாளர் தீபக் சர்க்கார் ஆகியோர் தலைமையில் வெடிகுண்டுகளுடன் குண்டர் படை கட்டியமைக்கப்பட்ட போதிலும், பழங்குடியின மக்களின் கோபாவேசத்தைக் கண்டு அஞ்சி, இத்தாக்குதல் திட்டத்தை சி.பி.எம்.கட்சி நிறுத்தி வைத்துவிட்டது.

வேறுவழியின்றி பழங்குடியின மக்களின் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் “போலீசு அடக்குமுறைக்கு எதிரான மக்களை கமிட்டி”யிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்த விழைவதாக அரசு அதிகாரிகள் அறிவித்தனர். மக்கள் கமிட்டியினரோ, இப்பேச்சுவார்த்தை பல்லாயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் முன் பகிரங்கமாக நடத்தப்பட வேண்டும்; அதற்கு முன் போலீசு அதிகாரிகள் மக்களிடம் தோப்புக்கரணம் போட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். அதிகார வர்க்கமோ தங்களை “கெரோ” செய்து அவமானப்படுத்தி விடுவார்கள் என்று அஞ்சி , இதற்கு உடன்பட மறுத்தது.

இந்த இழுபறியோடு போராட்டத்தை மேலும் நீட்டித்தால், கூலிஏழைகளான பழங்குடியினருக்கு மண்ணெண்ணெய் முதலான அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் இடர்ப்பாடுகள் பெருகும் என்பதால் போராட்டத்தைத் தற்காலிகமாக விலக்கிக் கொண்டு, போலீசு மற்றும் அதிகார வர்க்கத்தைச் சமூகப் புறக்கணிப்பு செய்யுமாறு பழங்குடியினருக்கு மக்கள் கமிட்டி அறைகூவல் விடுத்துள்ளது. இதனால் போராட்டம் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டதாகவோ, அதிகார வர்க்கபோலீசு ஆட்சி மீண்டும் நிலைநாட்டப்பட்டு விட்டதாகவோ கருத முடியாது. மக்கள் கமிட்டியின் சமூகப் புறக்கணிப்பு அறிவிப்பினால், இனி தவித்த வாய்க்கு தண்ணீர் கூட பழங்குடியின மக்கள் கொடுக்க மாட்டார்கள் என்று உள்ளூர அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறது அதிகார வர்க்கமும் போலீசும். இதுவே பழங்குடியின மக்களின் பேரெழுச்சிக்குக் கிடைத்த வெற்றி.

நேற்று, சிங்கூர்நந்திகிராமத்தில் சி.பி.எம். குண்டர்களையும் போலீசையும் கொண்டு வெறியாட்டம். இன்று, மித்னாபுரில் அதிகார வர்க்கத்தையும் போலீசையும் கொண்டு பாசிச பயங்கரவாதம். மே.வங்கத்தை ஆளும் போலிகம்யூனிச சி.பி.எம். கட்சியினர் உழைக்கும் மக்களின் எதிரிகளாக, பாசிஸ்டுகளாகச் சீரழிந்து விட்டதற்கு அண்மைக்கால நிரூபணங்களே இவை. இப்போலி கம்யூனிஸ்டுகளை நேற்றுவரை நம்பிய மே.வங்க உழைக்கும் மக்களே. அவர்களின் பாசிச ஒடுக்குமுறைக்கும் முதலாளித்துவ சேவைக்கும் எதிராகப் பேரெழுச்சியில் இறங்கியுள்ள நிலையில், புரட்சியை நேசிக்கும் சி.பி.எம். அணிகள் இனியும் இத்துரோகக் கட்சியில் நீடிக்க அடிப்படை ஏதாவது இருக்கிறதா?

புதிய ஜனநாயகம், டிசம்பர் 2008, (அனுமதியுடன்)

  1. நானோ பேக்டரிக்காக எங்கிட்ட துட்டு வாங்கிட்டு கடைசீசீசீல கால வாரி உட்டுட்டானுங்க பிளடி Fellows, நான் குஜராத்துக்கு போறேன் bye

  2. என்னாது போலி கம்யூனிஸ்டா?
    இங்கேயும் போலியா?
    தல சுத்துதுடா சாமி……!!!!!!!!!!!

  3. This is starting to Revolution in India . The non communist party will execute scheduled Tribs’s tasks otherwise whole in west bengal to ready Revolution.

  4. நக்சல்பாரி, நந்திகிராம், சிங்கூர் என்ற வரிசையில் இன்று மித்னாபூர், புருலியா, பங்குரா மக்களின் எழுச்சி.

    தொடரட்டும் மக்கள் எழுச்சி!
    விடியட்டும் புதிய ஜனநாயக புரட்சி!

  5. மணியோசை இது
    யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே
    குருடர்கள் போல் யானையை பார்த்த காலம் மாறும்
    மாற்ற முயலுவோர்க்கு
    ஊக்கம்தரும் மணியோசை இது

    தோழமையுடன்
    செங்கொடி

  6. என்னுடைய உடன்பிறவா சகோதர்ரகளை பற்றி நீங்கள் பிதற்றியிருப்பது எனது உள்ளத்தை காயப்படுத்துகிறது. இதற்கு நீங்கள் வழக்கை சந்தித்தே ஆகவேண்டும். வினவு எப்போது ஒழியும் என தமிழ்மண மக்கள் எனக்கு தினமும் ஈமெயில் அனுப்பி கொன்டிருக்கிறார்கள்.

  7. போலிகள் இப்போது துரோகியிலிருந்து எதிரியாக பாசிஸ்டாக பதவி உயர்வு பெற்றிருக்கின்றார்கள்.இனியும் அதில் புரட்சிகர அணிகள் என்று சொல்லிக்கொண்டு
    மக்களை கோமாளிகள் ஆக்குவதில் பலனில்லை.
    “புரட்சி யாளர்கள் புதைக்கப்படுவதில்லைவிதைக்கப்படுகிறார்கள்” என்று டைபி போர்டுகளில் எழுதப்பட்டிருக்கும்.
    உண்மை அது புரட்சியாளர்களுக்கு மட்டுந்தான் பாசிசவாதிகளுக்கு அல்ல
    தயவு செய்து உங்களை புரட்சிகர அணியென்று சொல்லாதீர்கள். அது புரட்சிக்கு மாபெரும் இழுக்கு.

    படிக்க : வாடா வாடா வாடா தோழா

    http://kalagam.wordpress.com/2008/11/18/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b4%e0%ae%be-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%ae%be/

    கலகம்
    http://kalagam.wordpress.com/

  8. Good Article. I like it.

  9. அப்ப நீங்க கம்யூனிஸ்ட் இல்லையா?

  10. வினவு, போன பதிவுல பீ.முரளி80 நீங்க போலி கம்மினிஸ்டு, சைனா, கியூபா பத்தியெல்லாம் எழுதினப்பறமா கருத்து சொல்லுறேன்னாறே….. நீங்க அதெல்லாம் எப்ப எழுத போறீங்க..

  11. fANTASTIC wORK…

  12. nalla karuthu vellatum puratchi, malaratum comunism.

VINAVU

Read Full Post »

Older Posts »