சி.பி.எம். கட்சியின் கேவலமான அரசியல் செயல்பாடுகள் குறித்து அக்கட்சியிலிருந்து சமீபத்தில் வெளியேறிய தோழர் ஒருவர் என்னுடன் பேசிக் கொண்டிருக்கும்போது, “மீண் கெட்டு அழுகும்போது அதன் தலைப்பகுதியிலிருந்துதான் அழுகத் தொடங்கும் அதேபோல இந்த போலிகம்யூனிஸ்டுகளை அழிவுக்கு இட்டுச்செல்லும் அழுகுனி அரசியலும் அதன் ’தலை’மையிலிருந்தே அழுகத் தொடங்கியிருக்கிறது தோழர்….” என்று அற்புதமாகச் சொன்னார். இத்தனையாண்டுகாலம் அக்கட்சியின் அரசியல் பாதை நேர்மையாக இருக்கும் என்று நம்பி ஏமார்ந்த விரக்தியில் அவர் ஆத்திரத்துடன் வெளிப்படுத்திய கருத்து இது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு பார்ப்பன-இந்துவெறி செய்திகளை விதைக்கும் இந்து நாளேட்டில் அப்பத்திரிக்கையின் ஆசிரியர்குழுவைச் சேர்ந்த மாலினி பார்த்தசாரதி என்பவர் ஈழ அரசியல் போராட்டம் குறித்து சில அவதூறு கருத்துக்களை எழுதியிருந்தார். ஈழ மக்களின் துயருக்காக குரல் கொடுக்கும் அமைப்புகளை தனது பார்ப்பனக் கண்ணோட்டத்தால் கேவலாமகச் சாடியிருந்தார். இதனைக் கண்டித்து பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் கோவையில் அப்பத்திரிக்கையின் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஈரோடு நகரில் அதே அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் அப்பத்திரிக்கைக்கு தீவைத்து கொள்ளுத்தும் போராட்டத்தையும் நடத்தினார்கள்.
உடனே பார்ப்பன அம்பிகள் கையில் முழுமையாக அடைக்கப்பட்டிருக்கும் தமிழக ஒட்டுமொத்த பத்திரிக்கையாளர்கள் அமைப்பும் பெ.தி.க. தோழர்களின் போராட்டத்தை வன்மையாகக் கண்டித்தன. கோவையில் பத்திரிக்கையாளர் கூட்டமைப்பு ஒன்று சேர்ந்து அத்தோழர்கள் ‘பத்திரிக்கா தர்மத்து’க்குத் தடையாக இருப்பதாகவும் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றினார்கள். அவ்வளவுதான். ஆனால், ஈழ அரசியலில் புரட்டுக்களை எழுதி ஈழ மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள் போலிகள் என்றும் சாடி எழுதியிருந்த அப்பத்திர்க்கையினைக் கண்டிக்கத்திராணியற்றுக் கிடந்த போலிகம்யூனிச கழிப்பறையான தீக்கதிர், பெ.தி.க. தோழர்களைக் கண்டித்து இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக தலையங்கமே எழுதியது.
அதே இந்து நாளேட்டில் பார்ப்பன-இந்து பயங்கரவாத கண்ணோட்டத்தோடு எழுதப்பட்ட போது அது குறித்து எந்த கருத்தையும் எதிர்ப்பையும் வெளிக்காட்டாத இந்த போலிகம்யூனிச அம்பிகள் கூடாரம், ஈழ மக்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்புகளை நோக்கி வசைபாடுவதற்கு அந்த பார்ப்பன-இந்துவெறிப் பத்திரிக்கையோடு தோளோடு தோள்நின்றது கடுமையாகக் கண்டிக்கத்த்க்கது. அதே இந்து நாளேட்டின் என்.ராம் அக்கட்சியின் பொலிட்பீரோவைவை விட அதிக அதிகாரம் படைத்தவர்; என்கிற நிலையில் தீக்கதிர் இரண்டு நாளோடு தனது அவதூறுகளை நிறுத்திக் கொண்டதே ஆச்சர்யமான விசயம்தான்.
ஈழ அரசியல் குறித்து இந்து பத்திரிக்கையின் நிலைப்பாடு எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டும் அதனை எதிரிகளோடு ஒன்று சேர்த்து ஒதுக்கித்தள்ளிவிடலாம். ஆனால், அந்த பார்ப்பன-இந்துதேசியக் கொழுப்பெடுத்த அவதூறுகளைத் தன் தலையில் சுமந்து கொண்டு இங்கு விஷத்தை விதைக்கத் துணைநிற்கும் துரோகிகளான போலிகளை என்ன செய்வது? போலிகளை இப்படி அரசியல் ரீதியாக ஏதாவது நாம் விமர்சித்து எழுதிவிட்டால் அல்லது பேசிவிட்டால், “மறைமுகத் தலைமை…..” என்று பிதற்றுவது, ஆயுதங்களுடன் வந்து சாமியாடுவது என்று தங்களது இயலாமையைக் கடைவிரிக்கின்றனர்.
இப்போது எமது அமைப்பான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வருகிற 25 ஜனவரி-2009 அன்று நடத்தவிருக்கும் ‘முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்’டிற்காக பிரச்சாரம் செய்து நிதி வசூலித்துக் கொண்டிருந்த தோழர்கள் மீது பேடித்தனமாக கொலைவெறித்தாக்குதல் நடத்திவிட்டு, எமது தோழர்களின் அரசியல் ரீதியிலான எதிர்வினையைத் தாக்குபிடிக்க முடியாமல் பார்ப்பன-இந்துவெறிப் பாசிசப் பத்திர்க்கைகளான தினமலர், தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ்….. போன்ற பயங்கரவாதப் பத்திரிக்கைகளைவிடக் கேவலமாக முழுக்க முழுக்க அவதூறூகளாலான செய்தியை நேற்றைய தீக்கதிரில் வெளியிட்டுள்ளது.
தீக்கதிரில் இப்படி எழுதி கூப்பாடு போடுவதற்கான நெருக்கடியை அவர்களுக்கு உருவாக்கியது நமது வினவு வலைதளம்தான் என்பது தீக்கதிரில் வெளியாகியுள்ள அந்த நாலு கால செய்தியே வெளிப்படுத்துகிறது. “பல்லாவரம் பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம்….” என்று தினமலரிடம் கடன் பெற்ற வார்த்தைகளைக் கொண்டு தனது புனைவைத் தொடங்கியிருக்கிறது அப்பத்திரிக்கை. அதன் தொடர்ச்சியாக ”தனி ஈழத்திற்காக குரல் கொடுத்தார்கள் எனவே நாங்கள் தட்டிக்கேட்டோம். இது குறித்து அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் எழுதியிருக்கிறது.
அங்கு சிபிஎம் குண்டர்களால் தாக்கப்பட்ட எமது தோழர்கள் அருகாமையில் உள்ள திருநீர்மலை, பல்லாவரம் மலை, திரிசூலம் மலை…, இன்னும் ஏரி குளங்களிலெல்லாம் ஆயுதப்பயிற்சி எடுப்பதாகவும் அதனை தீக்கதிரின் ஆசிரியர்குழு ‘லைட்’ அடித்து பார்த்ததாகவும் விவரமாக, இட்டுக்கட்டி கழிந்திருக்கிறது. இதனைப் பார்த்து வெட்கப்பட்டு, சில வருடங்களாக அக்கட்சியில் உறுப்பினராகச் செயல்பட்டதை நினைத்து தலைகுணிந்தவாறு நான் மேற்குறிப்பிட்ட தோழர் என்னிடத்தில் அப்பத்திரிக்கையினைக் கொடுத்தார்.
கருணாநிதி, ஜெயலலிதாவின் மூத்திரத்தைக் குடித்து திளைப்பதற்காக அந்த சந்தர்ப்பவாத பன்றிகள், அக்கட்சியின் நேர்மையான அணிகள் பெரிதும் மதிக்கும் அப்பத்திரிக்கையையே இவ்வளவு கேவல்மாகப் பயன்படுத்துகிற செய்தியை நாம் இன்னும் வீச்சாக அக்கட்சியின் உறுப்பினர்களிடையே கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. அவர்களைக் கடுமையாக அச்சுறுத்தும் புரட்சிகர அரசியலை அக்கட்சியின் நேர்மையான அணிகளிடம் நேரடியாக விரைவாகக் கொண்டு சேர்க்க வேண்டியிருக்கிறது. சேர்ப்போம் அப்போலிகம்யூனிஸ்டுகளின் பிழைப்புவாத அரசியலின் அடித்தளத்தைத் தகர்ப்போம்.
நட்புடன்,
ஏகலைவன்
http://thesteel.blogspot.com/2008/01/blog-post_22.html
தகவலுக்கு நன்றி தோழர்.
இது போன்ற வேறு கட்டுரைகளின் சுட்டிகள் இருந்தாலும் கொடுங்கள்.
என்னுடன் பணிபுரியும் ஒருவரிடம் புதிய சனநாயகம் புத்தகத்தினை படிக்க கொடுத்தேன் .அடுத்த நாள் என்னிடம் அவர் சொன்னார்”என் பிரண்டு சொன்னா இது நக்சலைட் புத்தகமாமே,டெரர்ரிஸ்ட் புத்தகமாமே”.அவருடைய நண்பருக்கே போன் செய்து பேசினேன்.அவர் சொன்னார் ” இல்லைங்க எங்க காலேஜ் புரபசர் சிபிஎம் அவர் தான் பு.ஜ படிக்க கூடாது அது நக்சல் பத்திரிக்கைன்னு”.
நான் கேட்டேன்”யார் பயங்கரவாதி?எங்கெ அச்சடிக்குறாங்கன்னு விலாசம் போட்டுருக்கு ,எப்படி உங்களால இப்படி பேசமுடியுது?.பிறகு தான் தெரிந்தது அவர் படித்து முடித்தவுடன் தீக்கதிரில் கொஞ்ச காலம் சுள்ளி போடும் வேலை செய்தார் என்பது .
தந்து ஆதரவாளர்களிடமோ,அணிகளிடமோ எவ்வித அரசியலையும் கொண்டு செல்லாது பிழைப்பு வாதியாக்கி,”அத படிக்க கூடாது ஏன்னா அது தீவிர வாத பத்திரிக்கை என்ற ” தோற்றத்தை மட்டுமே ஏற்படுத்துகின்றனர்.அரசியல் அறிவில்லாத காரணத்தால் எதனால் அதை படிக்க வேண்டு என்ற எண்ணம் கூட எழ மறுக்கின்றது
இன்னொரு செய்தி டைபி சைக்கிள் பயணத்தில் கவரப்பட்ட 15 பாசகவினர் இப்போது தோழர்கள் ஆகிவிட்டார்களாம்.வரை முறைஏதும் இல்லை பொன்னாடை போர்த்தி பாராட்டினால் போதும் “எதையும்” கட்சி ஊழியராக்கும் வேலை செய்து வருகின்றார்கள்.அப்படி தேடித்தான் விஜைக்கும் விசயகாந்துக்கும் வலை போட்டார்கள்.
தயவு செய்து சிபிஎம் அய்யா உங்க பேர மட்டு மாத்திக்கோங்க.அப்புறம் பாசக காங்கிரஸ் மாதிரி உங்களையும் விமர்சனம் பண்ணாஅரம்பிச்சுடுறோம்
கலகம்
அதை மட்டும் அவனுங்களே பன்ன மாட்டாய்ங்க தோழர் அதை நாம் தான் செய்யனும்,மக்களோடு இணைந்து அந்த காரியத்தை விரைவில் செய்வோம்.
http://kalagam.wordpress.com/